These colourful lakes and rivers in the world are hypnotic Twitter
உலகம்

வானவில் போன்று காட்சியளிக்கும் ஏரிகள் - உலகின் வண்ணமயமான லேக்கள் குறித்து தெரியுமா?

Priyadharshini R

பூமி நம்மை ஆச்சரியப்படுத்த தவறியதில்லை. புவியியல், மாறுபட்ட தட்பவெப்ப நிலைகள்,இயற்கையான தனித்தன்மைகள் நம்மை வியக்க வைக்கிறது.

உலகம் முழுவதும் நரகம் போன்றோ சொர்க்கம் போன்றோ சில மர்மமான இடங்கள் இருக்கிறது. அப்படி இயற்கையாகவே கலர்கலராக தோன்றமளிக்கும் ஏரிகள் குறித்து கேள்விப்பட்டதுண்டா? உலகெங்கிலும் உள்ள அழகான மற்றும் விசித்திரமான வண்ண ஏரிகள் கண்டு மெய்சிலிர்த்து போங்கள்!

லகுனா கொலராடா, பொலிவியா

இது பொலிவியாவின் நம்பமுடியாத இயற்கை அதிசயங்களில் ஒன்றாக விளங்குகிறது. இது சில பாசிகளின் நிறமிகளால் இவ்வாறு காட்சியளிக்கிறது.

ஹில்லியர் ஏரி ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் உள்ள இந்த இளஞ்சிவப்பு நிற ஏரி பார்பவர்களை பிரமிக்க வைக்கிறது. இந்த ஏரி 1970 அடி நீளமும் 820 அடி அகலமும் கொண்டது.

கானோ கிறிஸ்டல்ஸ், கொலம்பியா

இந்த வானவில் நிற நதி உலகின் மிக அழகான நதி என்றும் கருதப்படுகிறது. இந்த நதி ஐந்து வண்ணங்களின் நதி என்றும் அழைக்கப்படுகிறது. ஆற்றில் உள்ள பாசிகளால் இந்த நிறங்கள் உருவாகின்றன.

ரியோ நீக்ரோ, அமேசான்

அமேசானின் மிகப்பெரிய கிளை நதியான ரியோ நீக்ரோ உலகின் மிகப்பெரிய கருங்கல் நதி என்று அறியப்படுகிறது. ரியோ நீக்ரோ என்ற பெயர் கருப்பு நதி என்று பொருள்படும். பெயர் குறிப்பிடுவது போல, நதியின் நீர் கருப்பு நிறத்தில் இருக்கும்.

ஒகாமா க்ரேட்டர் ஏரி, ஜப்பான்

இந்த ஏரி ஜாவோ மலையில் அமைந்துள்ளது. இது பண்டாய் மலையின் வெடிப்புக்குப் பிறகு உருவாக்கப்பட்டது. ஐந்து வண்ணங்களின் ஏரி என்றும் அழைக்கப்படுகிறது. இது உலகின் மிக அழகான ஏரிகளில் ஒன்றாகவும் அறியப்படுகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?