16வது நூற்றாண்டின் மோதிரம்
16வது நூற்றாண்டின் மோதிரம் ட்விட்டர்
உலகம்

16வது நூற்றாண்டில் வடிவமைக்கப்பட்ட அரிய வகை மோதிரம்; இணையவாசிகளை கவர காரணம் என்ன?

Keerthanaa R

ஜெர்மனியில் 16ஆம் நூற்றண்டில் தயாரிக்கப்பட்ட மோதிரம் ஒன்று தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

நம் மனதிற்கு நெருக்கமானவர்களுக்கு பரிசுகள் கொடுக்கும்போது ”இந்த உலகத்தையே உன் காலடியில் வைக்கிறேன் பார்” என்பது போல, நினைவில் நிற்கும்படியான பரிசை நாம் கொடுக்கவேண்டும் என நினைப்போம். இதை குறிக்கும் விதமாக ஜெர்மனியில் ஒரு அரிய வகை மோதிரம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை யார் யாருக்காக தயாரித்தனர் என்பது குறித்த தகவல்கள் இல்லை.

டிவிட்டரில் பகிரப்பட்ட பதிவு ஒன்றில், 16 ஆம் நூற்றாண்டில் தயாரிக்கப்பட்டதாக மட்டும் இருந்தது. 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நபர் அவரது காதலிக்காக இந்த மோதிரத்தை தயாரித்திருக்கலாம் என அறியப்படுகிறது. இந்த மோதிரம் முதலில் பார்ப்பதற்கு சாதாரணமானதாக இருக்கிறது.

ஆனால் அதற்குள் நிறைய பிரிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளது. அவற்றை விரித்தால், அதில் பிரபஞ்சத்தின் வானியல் வரைபடம் இருக்கிறது. இந்த பிரபஞ்சமே நம் வாழ்க்கை துணையின் உள்ளங்கைக்குள் அடக்கம் என்பதை குறிக்கும் விதமாக இந்த மோதிரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த மோதிரத்தின் வடிவமைப்புக்கு மனதை நெகிழவைக்கும் பின்னணி இருப்பதை அறிந்த மக்கள் இதை கொண்டாடி வருகின்றனர். காதலின் சின்னம் என்று ஒன்று இருந்தால் அது இந்த மோதிரமாக தான் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்து வருகின்றனர்.

இப்படியும் ஒரு பொருள் இந்த உலகில் இருக்கிறதா? என ஆச்சரியப்பட்ட இணையவாசிகள், அவர்கள் காதலர்களுக்கும் இது போன்ற ஒரு மோதிரத்தை பரிசளிக்க விரும்புவதாகவும் தெரிவித்து வருகின்றனர்.

ட்விட்டரில் இந்த பதிவு 10 ஆயிரம் ரீட்வீட்களை பெற்றது. இன்னொரு புறம் சிங்கிளாக இருப்பவர்களோ, இந்த மோதிரத்தை வைத்து மீம்களை பகிர்ந்திருந்தனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

வயநாடு நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 170 ஆக உயர்வு!

உலகில் அதிகம் தேயிலை உற்பத்தி செய்யும் டாப் 10 நாடுகள் இதுதான் - இந்தியாவின் இடம் என்ன?

சில ஆப்பிள்கள் ஏன் ஸ்டிக்கருடன் விற்கப்படுகின்றன தெரியுமா?

விழுப்புரம்: சாப்பாட்டில் ஊறுகாய் வைக்காத ஹோட்டலுக்கு அபராதம் விதித்த ஆணையம்!

நேபாள விமான விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 18 ஆக உயர்வு!