இந்த பூமியில் மனித இனம் தோன்றி சில லட்சம் ஆண்டுகள் தான் ஆகின்றன. குரங்கிலிருந்து மனிதன் வந்ததாகத்தான் பல்வேறு கோட்பாடுகள் கூறுகின்றன.
குரங்குக்கு முன்பாக, நான்கு கை கால்களோடு வாழ்ந்த ஒரு மீன் போன்ற இனம், ஒட்டுமொத்த மனித இனத்துக்கும், ஏன் முதுகெலும்பு கொண்ட உயிரினங்களுக்கு மூத்த உயிரினமாக இருந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
1890களில் ஸ்காட்லாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட 390 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த, நான்கு கை கால்களை உடைய மீன் போன்ற உயிரினம், மனிதர்கள் உட்பட, இன்று நான்கு கைகால்களோடு இருக்கும் உயிரினங்கள் அனைத்துக்கும் மூத்த மூதாதைய உயிரினமாக இருக்கலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த பழங்கால உயிரினம், ஸ்காட்லாந்தில், கைத்னெஸ் (Caithness) என்கிற இடத்தில் வரலாற்றுக்கு முந்தைய இடுகாட்டில் இருந்து எடுக்கப்பட்டது. அந்த உயிரினத்தின் பெயர் பேலியோ ஸ்பாண்டலிஸ் கன்னி (Palaeospondylus gunni) என்றழைக்கப்படுவதாக ஒரு சமீபத்திய புதிய ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
வெர்டிப்ரேட்ஸ் எனப்படும், முதுகெலும்பு கொண்ட உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியில் இதுவரை விடை கிடைக்காத சில கேள்விகளுக்கு இந்த பேலியோ ஸ்பாண்டலிஸ் கன்னி உயிரினம் விடையாக இருக்கலாம் என்றும் அவ்வாய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆராய்ச்சியாளர்களுக்கு அந்த வரலாற்றுக்கு முந்தைய இடுகாட்டில் இது போல பல புதைபடிமங்களைக் கண்டுபிடித்தனர்.
இந்த உயிரினம் வெறும் 5 செமீ மட்டுமே நீளம் கொண்டதாக இருந்ததால், அதன் மண்டை ஓட்டை மீண்டும் மறுகட்டமைக்க சிரமமாக இருந்தது. எனவே பேலியோ ஸ்பாண்டலிஸ் கன்னி 130 ஆண்டுகளுக்கு முன் கிடைத்தாலும், அதைப் பரிணாம வளர்ச்சிப் பாதை அவ்வரிசையில் எங்கு பொருத்துவது என்று தெரியாமல் விஞ்ஞானிகள் திணறினர்.
ஆனால் தற்போது, ஜப்பானில் உள்ள ரைகென் க்ளஸ்டர் ஃபார் பயோனெரிங் ரிசர்ச் அமைப்பைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், பேலியோ ஸ்பாண்டலிஸ் கன்னிக்கு தாடை, நான்கு கை கால்கள் இருப்பதாக சில ஆதாரங்களைக் கண்டுபிடித்திருப்பதாக டெய்லி மெயில் பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது.
மேலும் ஆராய்ச்சியாளர்கள், இந்த உயிரினத்தை மனிதர்கள் உட்பட முதுகெலும்புள்ள உயிரினங்களின் பரிணாம வளர்ச்சிப் பாதை விவரங்களில், அடிப்பகுதியில் சேர்த்துள்ளனர்.
இந்த உயிரினத்தின் தலை சமதளமாகவும், அதன் உடல் ஈல் மீன்களைப் போலவும் இருந்ததாக அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த உயிரினங்கள் ஆழமான நன்னீர் ஏரிகளில் வாழ்ந்ததாகவும், இலை தலைகள் மற்றும் ஆர்கானிக் கழிவுகளை உண்டு வாழ்ந்ததாகவும் நேச்சர் என்கிற சஞ்சிகையில் பிரசுரமான கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த உயிரினங்கள் வாழ்ந்த காலத்தில் ஸ்காட்லாந்தின் நிலப்பகுதிகள், பூமத்திய ரேகைக்கு தெற்குப் பகுதியில் இருந்ததாகவும், அப்பகுதியில் தற்போது மத்திய ஆப்பிரிக்கா இருக்கிறது. அப்போது அப்பகுதி வறட்சியாகவும், மிதமான வெப்பத்தோடும் இருந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
பேலியோ ஸ்பாண்டலிஸ் கன்னி உயிரினம்தான், நீரிலிருந்து வெளியே வந்து வாழ்ந்த முதல் முதுகெலும்புள்ள உயிரினம் என்று கூறப்பட்டுள்ளது. அந்த மீனின் ஃபின்ஸ் எனப்படும் துடுப்பு போன்ற பாகம், கை காலாக வளர்ந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
"மத்திய டெவொனியன் காலத்தைச் (398 - 385 மில்லியன் ஆண்டுகள்) சேர்ந்த பேலியோ ஸ்பாண்டலிஸ் கன்னி மிகவும் சிக்கலான முதுகெலும்புள்ள உயிரினத்தின் புதைபடிமம்" என டோக்யோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மற்றும் இந்த ஆய்வின் தலைவர் டட்சுயா ஹிரசவா கூறியதாக தி ஸ்காட்ஸ்மென் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust