பறிமுதல் செய்த கார்களை உக்ரைனுக்கு அனுப்பிவைக்கும் லாட்வியா நாடு
பறிமுதல் செய்த கார்களை உக்ரைனுக்கு அனுப்பிவைக்கும் லாட்வியா நாடு ட்விட்டர்
உலகம்

லாட்வியா : உக்ரைனுக்கு அனுப்பப்படும் கார்கள் - மதிப்பு என்ன தெரியுமா?

Keerthanaa R

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கார்களை உக்ரைனுக்கு அனுப்பிவைக்கிறது லாட்வியா நாடு. ஐரோப்பிய தேசமான இங்கிருந்து முதற்கட்டமாக 8 கார்கள் எல்லையை கடக்கவுள்ளன.

கடந்த அண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்தது. ஓராண்டுக்கு மேல் ஆகியுள்ள நிலையிலும், போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை.

ரஷ்ய படைகள் உக்ரைன் நாட்டில் எண்ணிலடங்கா சேதங்களை எற்படுத்தியிருக்கிறது, பலரும் தங்களது வாழ்வாதாரங்களை இழந்திருக்கின்றனர்.

உக்ரைனுக்கு ஆதரவாக இருக்கும் உலக நாடுகள் பலவும் உதவிக்கரம் நீட்டி வருகின்றன. இந்நிலையில், ஐரோப்பிய நாடான லாட்வியாவிலிருந்து நூற்றுக்கணக்கான கார்கள் உக்ரைன் நாட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

இந்த வாகனங்கள் அனைத்தும் அந்நாட்டில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள் இடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டவை.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் லாட்வியா நாடு கார்களை கைப்பற்றத் தொடங்கியது. கைப்பற்றப்பட்ட கார்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே, அவற்றை போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு அனுப்பிவைக்க முடிவுசெய்யப்பட்டது.

ஏழு கார்கள் பனிப்புயலுக்கு மத்தியில், டிரெய்லரில் வைத்து உக்ரைனுக்கு செல்ல தயாராக இருக்கும் நிலையில், 8 கார்கள் உக்ரைன் நாட்டுக்கு செல்லவுள்ளன. இந்த 8 கார்களின் மதிப்பு சுமார் 16,500 யூரோக்கள்.

இந்த திட்டம் கடந்த ஆண்டு லாட்வியா நாட்டு பாராளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக இந்தியா டுடே தளம் தெரிவிக்கிறது.

இந்த கார்களை அஜெண்டம் என்ற குழுவிடம் லாட்வியா அரசு ஒப்படைக்கவுள்ளது. இந்த குழு கடந்த ஆண்டு 900 வாகனங்களை உக்ரைனுக்கு உதவிக்காக சேகரித்து அளித்த நிலையில், அந்த எண்ணிக்கை தற்போது 1200 ஆக உயர்ந்திருக்கிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

வளர்ப்பு நாய்க்கு ₹2.5 லட்சத்தில் தங்கச் சங்கிலி பரிசளித்த பெண்!

2500 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் திசை மாறிய கங்கை நதி - ஆய்வு சொல்வதென்ன?

Nikhila vimal: அழகிய லைலா நிகிலா விமலின் ரீசண்ட் புகைப்படங்கள்!

3.5 ஆண்டுகள் வரை கர்ப்ப காலம் கொள்ளும் விலங்குகள் பற்றி தெரியுமா?

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?