This European island is aiming to become world's first ‘phone-free’ tourist destination Twitter
உலகம்

உலகின் முதல் 'Phone இல்லாத' சுற்றுலா தலமாக மாறும் தீவு - என்ன காரணம் தெரியுமா?

நம் ஊர்களில் கோவில்களுக்குள் போன் எடுத்து செல்வது, படம் எடுப்பது தடை செய்யப்பட்டிருப்பதை போல பின்லாந்தின் உள்கோ தம்மியோ (Ulko-Tammio) என்ற தீவுக்கு செல்லும் மக்கள் போன்களை எடுத்து செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

Priyadharshini R

சுற்றுலா செல்லும் போது மேப் பார்க்க, டிக்கெட் விபரங்கள் தெரிந்து கொள்ள, ஆன்லைனில் பணம் செலுத்த, புகைப்படம் எடுக்க என மொபைல் ஃபோனை பல விஷயங்களுக்கு பயன்படுத்துகிறோம்.

அதே சமயத்தில் குடும்பமாக அல்லது நண்பர்களாக செல்லும் போது சுற்றுலாவை எஞ்சாய் செய்யாமல், இயற்கை அழகை ரசிக்காமல் போனில் மூழ்கும் சம்பவங்களும் நாம் அனுபவித்து இருப்போம்.

இதனால் மக்களுடன் தனிப்பட்ட முறையில் தொடர்புகொள்வது குறைகிறது.

இதனை கொஞ்சம் மாற்றியமைக்க உலகின் மகிழ்ச்சியான மக்கள் வாழும் நாடான பின்லாந்து நாட்டின் ஒரு தீவு முடிவு செய்துள்ளது.

நம் ஊர்களில் கோவில்களுக்குள் போன் எடுத்து செல்வது, படம் எடுப்பது தடை செய்யப்பட்டிருப்பதை போல பின்லாந்தின் உள்கோ தம்மியோ (Ulko-Tammio) என்ற தீவுக்கு செல்லும் மக்கள் போன்களை எடுத்து செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

இதன் நோக்கம் சமூக ஊடகங்களில் இருந்து ஒரு பிரேக் எடுத்து நிழல் உலகத்திலிருந்து நிஜ உலகத்தை அதன் இயல்பான அழகோடு ரசிக்க முடியும் என்பதே ஆகும்.

உள்கோ தம்மியோ தீவு அழகிய இயற்கை சூழல், வன விலங்குகள், அழகிய கடற்கரை என்று எல்லாம் சேர்ந்தது. இங்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

பயணிகள் தங்கள் முழு விடுமுறை நாட்களையும், தங்களோடு வந்திருக்கும் நபர்களுடனும் இயற்கையுடனும் மட்டும் கழிக்க வேண்டும் என்பதற்காக இந்த தீவுக்கு செல்லும் முன்னர் போனை சமர்பித்துவிட்டு போக சொல்கிறார்கள்.

ஆனால் இது கட்டாயம் இல்லை. விருப்பம் உள்ளவர்கள், சமர்பித்துவிட்டு போகலாம். இல்லை என்றால், தீவுக்கு எடுத்து செல்லலாம்.

நாடுகள்முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?