சென்னை டூ புதுச்சேரி: Unlimited பீர் வழங்கும் பஸ் - எவ்வளவு கட்டணம் தெரியுமா? Twitter
உலகம்

இந்த பீர் தயாரிக்க இரண்டு நிமிடம் போதும்! Instant Beerஐ சுவைக்க ரெடியா?

Keerthanaa R

இன்ஸ்டன்ட் காபி போல இன்ஸ்டன்ட் பீர் தயாரித்துள்ளது ஜெர்மனியை சேர்ந்த நிறுவனம்.

உலகெங்கிலும் மதுபானங்களுக்கு என்று ஒரு தனி ஈர்ப்பு உள்ளது. இவை உடல்நலத்தை கெடுக்கும் என்பதை கடந்து, பல வகையான மதுபானங்கள், எண்ணி பார்க்க முடியாத பதார்த்தங்களை வைத்து தயாரிக்கப்படுகிறது. உலக நாடுகளில் மிகவும் மெனக்கெட்டு வைன், பீர், ஸ்காட்ச், சேம்பெயின் போன்ற பானங்கள் தயாரிக்கப்படுகின்றன.

இதனாலேயே இவற்றின் விலையும் அதிகமாக இருக்கிறது.

ஆனால் இந்த மதுபானங்கள் நமக்கு இன்ஸ்டன்ட்டாக கிடைத்தால்?

அது எப்படி இன்ஸ்டன்ட்டாக கிடைக்கும்?

ஜெர்மனியை அடிப்படையாக கொண்ட மதுபானம் தயாரிக்கும் ஆலை நியுசெல்லார் கிலாஸ்டர்ப்ருயெரி இதனை சாத்தியமாக்கியுள்ளது. இன்ஸ்டன்ட் காபி தயாரிப்பது போல இன்ஸ்டன்ட் பீர் தயாரித்துள்ளனர்.

இந்த பீர் பவுடராக இருக்கும். அதில் தண்னீர் சேர்த்து மிக்ஸ் செய்தால் பீர் ரெடி. வழக்கமாக பீர் தயாரிக்க தேவைப்படும் தண்ணீர், பாட்டில்கள் போன்ற வளங்களை விட இதற்கு குறைவாகவே செலவாகிறது என்று கூறியுள்ளது இந்த பீரை தயாரித்த ஆலை.

இது உலகின் முதல் இன்ஸ்டன்ட் பீர் பவுடர் இல்லை என்றாலும், இதற்கான எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது

இதற்கான போக்குவரத்து செலவுகள் குறைகிறது என்பது மட்டுமல்லாமல், சுற்றுச்சூழலுக்கும் இது பாதுகாப்பானது என்று ஆலை தெரிவித்துள்ளது

Beer

ஆலையின் மேனேஜிங்க் டிரெக்டர் ஸ்டீபன் கூறுகையில், இது பீர் வணிக முறையையே திசை மாற்றும் ஒரு முயற்சி என்று கூறியுள்ளார்.

இந்த பவுடர் பீர் முதல்கட்டமாக ஆல்கஹால் தன்மை இல்லாமல் தயாரிக்கப்பட்டுள்ளது. விரைவில் நிறுவனம் இதனை ஆல்கஹால் தன்மையுடன் கூடிய பானமாக தயாரிக்கும் என்று கூறியுள்ளது.

தற்போது முதற்கட்டமாக ஆல்கஹால் தன்மையில்லாமல் தயாரிக்கப்பட்டுள்ள பானத்தை இந்த வருடத்தில் ஆசியா மற்றும் அமெரிக்கா ஆகிய இடங்களில் விற்பனைக்கு வரும்.

இந்த பீரில் 90 சதவிகிதம் தண்ணீர் என்பது குறிப்பிடத்தக்கது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?