Gorilla twitter
உலகம்

ஸ்மார்ட்ஃபோனுக்கு அடிமையான கொரில்லா - மீட்கப்பட்டது இப்படித்தான்

NewsSense Editorial Team

கோவிட் சீசன் வந்த பிறகு மொபைல், லாப்டாப் பயன்பாடு மிக மிக அதிகம். காரணம் வொர்க் ஃப்ரம் ஹோம்… ஸ்டடி ஃப்ரம் ஹோம்… என எல்.கே.ஜி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை… போர் அடிக்க என்ன செய்வதெனத் தெரியாமல் மொபைல் பைத்தியமாகவே மாறி இருக்கிறார்கள். போன் இல்லாமல் சாப்பிடுவது இல்லை தூங்குவதும் இல்லை… ஏன் கழிப்பறையில் கூட மொபைல் நோண்டும் பழக்கம் அதிகபேருக்கு உண்டு.

தூங்கி எழுந்ததும் மொபைல், தூங்க செல்லும் முன்னும் மொபைல் இப்படி நாம்தானே மொபைல் போனுக்கு அடிமையாகி இருக்கிறோம். நமக்கு அடுத்த வரிசையில், இன்னொரு ஜீவனும்… இந்த லிஸ்டில் இருக்கிறது.. யார் தெரியுமா?

சிகாகோவின் லிங்கன் பார்க் மிருகக்காட்சிசாலையில் இதே பிரச்சனை இருப்பதாகப் பதிவாகியுள்ளது. இப்போது விலங்குகள் கூட மொபைல் போன்ற கேட்ஜெட்ஸூக்கு அடிமையாகிவிட்டது.

Gorilla

மிருக காட்சி சாலையில் உள்ள 16 வயதான கொரில்லா குரங்கு, ஸ்மார்ட்போன்களுக்கு அடிமையாகிவிட்டதால்… அதைப் பார்க்க வரும் நேரத்தையும் குறைத்துள்ளனர்.

188 கிலோகிராம் எடை கொண்ட அமேர் கொரில்லா குரங்குக்கு, சில ஆண்டுகளுக்கு முன்பு ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

ஒருமுறை ஒருவர் மொபைல் திரையை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு கொரில்லா பின்னால் இருந்து ஓடி வந்து அவர் மீது பாய்ந்ததைகூட அவர் கவனிக்கத் தவறிவிட்டார் எனச் சொல்லப்படுகிறது. அப்போதிலிருந்து இந்த மொபைல் ஸ்கிரீன் பிரச்சனை அதிகமாகி இருக்கிறது.

மேலும், கொரில்லாவைப் பார்க்க வருகிறவர்கள், கண்ணாடியின் முன் மொபைல் வைத்துப் படங்கள், வீடியோக்களைத் தொடர்ந்து காட்டி வந்துள்ளனர் எனச் சொல்லப்படுகிறது. அதனால், இந்த கொரில்லாவும் மொபைல் போனுக்கு அடிமையாகி விட்டுள்ளது எனச் சொல்கிறார்கள்.

இப்படி கொரில்லா குரங்கு போனுக்கு அடிமையானதால், அமரே குரங்கு உள்ள கண்ணாடி அறையில், மக்கள் கண்ணாடிக்கு அருகே வராதபடி, அதாவது பார்வையாளர்கள் வந்து யாரும் நிற்காதபடி மிருகக்காட்சிசாலை ஊழியர்கள் கயிறும் கட்டியுள்ளனர். இந்தக் குரங்கு மொபைலுக்கு அடிமையாகிவிட்டதால், மொபைல் போனில் உள்ள பிரகாசமான டிஸ்ப்ளே குரங்கை அதிகம் ஈர்ப்பதாலும் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

Gorilla

இந்த நடவடிக்கை எடுத்த பிறகு, விலங்கியல் பூங்காவின் இயக்குனர் ஸ்டீபன் ரோஸ் சொல்வது, “இப்போது அமரே குரங்கு தற்போது மொபைல் பார்ப்பதைவிட தனது சக குரங்குகளுடன் நேரம் செலவழிக்கத் தொடங்கிவிட்டது. இப்போது குரங்கும் மற்ற குரங்குகளுடன் இருக்கதான் விரும்புகிறது” என்று சொல்லியிருக்கிறார்.

மேலும் அவர், “மக்கள் குரங்கைப் பார்க்க வரும் நேரத்தைவிடக் குரங்கு தனது சக குரங்குகளோடு ஒன்றாக இருக்கும் நேரத்தை அதிகப்படுத்தியிருக்கிறோம். இந்த கொரில்லா குரங்கின் மீது நாங்கள் மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறோம்” எனச் சொல்லியிருக்கிறார்.

இந்த கொரில்லா மற்ற மூன்று டீனேஜ் கொரில்லாக்களுடன் வாழ்கிறது. ஆதிக்கம் செலுத்தும் ஆண் கொரில்லாவிடம் இருந்து தனித்து விடப்பட்டுப் பாதுகாத்து வருவதாகத் தகவல்களும் தெரிவிக்கின்றன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?