குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த நபர் ரகபாய் பர்மர். இவர் 20 வயதே ஆன இளம் பெண்ணை காதலித்து அவருடன் ஊரை விட்டு வெளியேறியுள்ளார். இவரை பிடிக்க காவல் துறை செய்த செலவில் பாதியைக் கொடுக்க வேண்டும் என குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மே, 2021-ல் பர்மர் ராஜ்கோட் நகரைச் சேர்ந்த அந்த இளம் பெண்ணுடன் ஊரை விட்டு வெளியேரினார். தனது மகளை தேடி கொடுக்க வேண்டும் என அந்த பெண்ணின் தந்தை குஜராத் உயர் நீதிமன்றத்தில் மனு அளித்தார்.
இதனைத் தொடர்ந்து ராஜ்கோட் காவல்துறையினர் பல மாதங்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இறுதியாக அந்த பெண் மீட்கப்பட்டு அவரின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்த வழக்கு விசாரணையின் போது பர்மர் ஏற்கெனவே திருமணம் ஆன நபர் எனத் தெரியவந்துள்ளது.
பல மாதங்கள் தேடுதலுடன் கடைசி 19 நாட்கள் விசாரணையும் சேர்த்து ராஜ்கோட் காவல்துறையினர் 17,170 மணி நேரம் இந்த வழக்கிற்காக செலவிட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கின்றனர். இந்த வழக்கை முடிப்பதற்கு 42,000 செலவிடப்பட்டுள்ளது எனவும் கூடுதலாக வழக்கு தொடர்பானவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த 75,000 செலவானது எனவும் நீதிமன்றத்தில் கூறப்பட்டது.
திருமணமான நபருடன் ஓடிப்போன பெண்ணை மீட்டு அவரின் குடும்பத்திடம் ஒப்படைக்க 1,117,500 ரூபாய் மொத்தமாக செலவிடப்பட்டுள்ளது.
இந்த செலவீனங்களை பர்மரின் மூலம் திரும்பப் பெற நீதிமன்றம் முடிவு செய்தது. திருமணமாகியிருந்தும் வேறு பெண்ணுடன் ஓடிச் சென்றதற்கு தண்டனையாக இந்த பணத்தை கட்ட வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது. தீர்ப்பில் 50% கணக்கிட்டு 55000 ரூபாயை பர்மர் செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
இதற்கு இடையில் பெண்ணின் தந்தை இந்த வழக்கிற்காக அவரது பையிலிருந்து 8.06 லட்சம் ரூபாய் வரை செலவழித்திருப்பதாக நீதிமன்றத்தில் கூறினார். இதனை கேட்ட நீதிமன்றம், பெண்ணின் தந்தை தகுந்த நீதிமன்றத்தை அனுகி அவரின் செலவீனங்களை பெற்றுக் கொள்ளலாம் எனக் கூறியுள்ளது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com