இந்த உலகில் வினோதமான சம்பவங்கள் பல நடந்திருக்கின்றன. அவற்றில் சில கின்னஸ் உலக சாதனையாகவும் மாறியிருக்கிறது.
கின்னஸ் உலக சாதனைகள் மூலம் நமது பெயர் மக்கள் மத்தியில் பிரபலமாகும் என்று சந்தோஷபடுபவர்களை தான் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.
ஆனால் எனக்கு என் அனுமதி இல்லாமல், எதற்கு அங்கீகாரம் கொடுத்தீர்கள் என்று ஒருவர் கின்னஸ் உலக சாதனைகள் மீது வழக்கு தொடுத்து அந்த வழக்கில் வென்று, 8 மில்லியன் டாலர் பணத்தையும் நஷ்ட ஈடாக பெற்றார்.
இவருக்கு கின்னஸ் அங்கீகாரம் கொடுத்ததே, அதிக அளவில் வழக்கு தொடுத்தவர் என்பதற்காக தான்.
ஜானதன் லீ ரிச்சஸ் என்பவர் அமெரிக்காவின் பென்சில்வேனியா பகுதியை சேர்ந்தவர். தற்போது இவருக்கு வயது 46. இவர் இதுவரை மொத்தம் 2600 வழக்குகள் பதிவு செய்துள்ளார்.
முதன் முதலில் அவரது தாயார் மீது தான் வழக்கு ஒன்றை தொடுத்தார். அவரது தாய் தன்னை சரியாக பராமரிக்கவில்லை எனவும், சரியாக வளர்க்கவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள் ஜானதனுக்கு சாதகமாக தீர்ப்பை வழங்கி அவருக்கு நஷ்ட ஈடாக 20 ஆயிரம் டாலர் பணமும் வழங்கினர்.
அந்த வழக்கில் வெற்றி கண்ட பிறகு, தனது நண்பர்கள், உறவினர்கள் என பலர் மீதும் பல காரணங்களுக்காக வழக்கு தொடுத்து, வென்று கோடிகளில் புரண்டார்.
இவரது வழக்கு வலையில், இவரை தெரியாதவர்கள், சில பெரிய கைகளும் சிக்கியது.
அதில் குறிப்பிடத்தக்க ஆளுமைகள் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ், அமெரிக்காவின் பிரபல கால்பந்து அணியான நியூ இங்கிலாந்து பேட்ரியாட்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர், ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் ஆகியோர்.
இப்படியாக இவர் எல்லையில்லாமல் எல்லார்மீதும் வழக்கு தொடுத்து அதில் வென்று வர, அவரை அங்கீகரிக்க நினைத்தது, கின்னஸ் உலக சாதனைகள்
அதிகமாக வழக்குகள் பதிவு செய்தவர் என்று இவருக்கு கின்னஸ் சாதனைகள் பட்டம் வழங்கப்பட்டது. ஆனால் அந்த நிறுவனத்தின் மீதும் வழக்கு தொடுத்தார் ஜானதன். தன்னிடம் அனுமதி பெறாமல் தனது தனிபட்ட வாழ்க்கையை பற்றி எப்படி நீங்கள் எழுதலாம் என்பது அவரின் குற்றச்சாட்டு.
இந்த வழக்கிலும் வென்று நஷ்ட ஈடாக 8 மில்லியன் டாலர் பெற்றார். இவர் பிரபலமான பிறகு ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இவரை பேட்டி எடுத்தனர்.
இந்த பேட்டியில், நீங்கள் இவ்வளவு பிரபலமடைந்திருந்தாலும், உங்கள் வாழ்க்கையில் தனிமை சூழ்ந்திருக்க காரணம் என்ன என்று கேள்வி எழுப்பினர். இதனால் கோபித்து கொண்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டார் ஜானதன். அதன் பிறகு அந்த டிவி நிகழ்ச்சி மீதும் வழக்கு தொடர்ந்தார். அவருக்கு நஷ்ட ஈடு வழங்கப்பட்டது.
இப்படியாக ஜானதன் மொத்தம் 2600 வழக்குகள் தொடர்ந்திருக்கிறார். தகவல்களின் அடிப்படையில், இதற்காக ஜானதன் கைது செய்யப்பட்டார்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust