இறந்தவர்களை சூப் வைத்துக் குடிக்கும் பழங்குடியினர் - எங்கே? விநோத சடங்கின் பின்னணி என்ன? Canva
உலகம்

இறந்தவர்களை சூப் வைத்து குடிக்கும் பழங்குடியினர் - விநோத சடங்கின் பின்னணி என்ன?

இறந்தவர்களின் முகங்களில் சிறிது மண்ணை தேய்த்து பிணங்களை எரிக்கின்றனர். இந்த சடங்கின் முதற்கட்டமாக இறந்தவர்களின் உறவினர்கள் அழுது, பாடல்கள் பாடி துக்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.

Keerthanaa R

மரணமும் அதனைச் சுற்றியிருக்கும் விநோதங்களும் இந்த உலகில் ஏராளம். மனிதர்கள் மரணித்த பிறகு அவர்கள் நிம்மதியாக இருக்கிறார்களா என்ற சந்தேகம் உயிருடன் இருப்பவர்களுக்கு இருந்துகொண்டே இருப்பதும் விந்தை தான்.

இதற்காக பல விதமான சடங்குகள் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு ஒரு முறை பிணங்களை தோண்டி எடுத்து அவற்றை சுத்தம் செய்து புத்தாடை அணிவித்து விருந்து வைப்பது, திருமணம் முடித்து வைப்பது போன்றவற்றைக் கூறலாம்.

அந்த வகையில் பிரேசில், வெனிசுலா போன்ற இடங்களில் வாழும் யனோமாமி பழங்குடியினர் ஒரு தனித்துவமான சடங்கை பின்பற்றுகின்றனர். இவர்கள் இறந்தவர்களை உண்கிறார்கள்.

எண்டோகானிபலிசம்

இவர்களின் இந்த சடங்கு, அறிவியல் ரீதியாக எண்டோகானிபலிசம் (Endocannibalism) என்று அழைக்கப்படுகிறது.

ஒரு இனத்தை சேர்ந்தவர்கள் அதே இனத்தவர்களை சாப்பிடுவது கானிபலிசம் என்றால், எண்டோகானிபலிசம் என்பது, ஒரே சமூகத்தை சேர்ந்தவர்களை சாப்பிடுவது.

இறந்தவர்களை சாப்பிடும் வழக்கம்

யனோமாமி பழங்குடியினரின் வழக்கத்தின்படி, மரணம் என்ற ஒன்று நிகழக் கூடாது. அப்படி நிகழ்ந்தால் இறந்தவர்களை பத்திரமாக பாதுகாக்கவேண்டும் என இவர்கள் நம்புகின்றனர்

மரணத்திற்கு பிறகு ஒருவரது ஆன்மா சாந்தியடை வேண்டும் என்றால், அவர்களது உடல் எரிக்கப்பட்டு அதனை உயிருடன் இருக்கும் இறந்தவர்களின் உறவினர்கள் சாப்பிடவேண்டும்.

சூப்

சிஎன்என் நியூஸ் 18 தளத்தின் கூற்றுப்படி, அந்த சாம்பல் மற்றும் எலும்புகளை இவர்கள் சூப் செய்து அருந்துகிறார்கள்.

இறந்தவர்களின் முகங்களில் சிறிது மண்ணை தேய்த்து பிணங்களை எரிக்கின்றனர். இந்த சடங்கின் முதற்கட்டமாக இறந்தவர்களின் உறவினர்கள் அழுது, பாடல்கள் பாடி துக்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.

அதன் பிறகு இரண்டாவது கட்டமாக எரிந்த உடல்களின் மிச்சத்தை சேகரித்து, அதனை வாழைப்பழத்துடன் சேர்த்து, சூப் போல சமைத்து உட்கொள்கின்றனர்.

இப்படி செய்தால் தங்களுக்கு நெருக்கமானவர்கள் தங்களை விட்டு பிரியவில்லை என அவர்கள் நம்புகிறார்கள்.

கொலை செய்யப்பட்டால்

இறந்தவர்களின் மரணம் இயற்கையானதாக இருந்தால் அனைவருமே இந்த சூப்பை சாப்பிடுகின்றனர். மாறாக இறந்தவர்கள் அவர்களின் ‘எதிரிகளால் கொலை செய்யப்பட்டால்’ பெண்கள் மட்டும் தான் இந்த பிணங்களை சாப்பிடவேண்டும்.

அதோடு நின்றுவிடுவதில்லை. சடங்கு நிறைவடைந்த பிறகு அதே இரவில், இறந்தவர்களின் உறவினர்கள் எதிரிகளின் எல்லைக்குள் சென்று அவர்களது பொருட்களை இவர்கள் கைப்பற்றி வந்து பகையை தீர்த்துக்கொள்ளகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?