15000 ஆடுகளுடன் கடலில் மூழ்கிய கப்பல் : என்ன, எங்கே, எப்போது நடந்தது? - விரிவான தகவல்கள் NewsSense
உலகம்

15000 ஆடுகளுடன் கடலில் மூழ்கிய கப்பல் : என்ன, எங்கே, எப்போது நடந்தது? - விரிவான தகவல்கள்

Antony Ajay R

சூடானிலிருந்து சவுதி அரேபியாவுக்கு அயிரக்கணக்கான ஆடுகளுடன் சென்ற கப்பல் செங்கடலில் மூழ்கியுள்ளது.

சூடான் துறைமுக அதிகாரி ஒருவர் இது குறித்துக் கூறும்போது, அந்த கப்பலில் 15,800 ஆடுகள் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

லிவ்ஸ்டாக் எனும் நிறுவனம் சூடானிலிருந்து சவுதிக்கு செம்மறி ஆடுகளை ஏற்றுமதி செய்து வருகிறது. இந்த சம்பவத்தால் அந்த நிறுவனத்துக்கு 3.7மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்த கப்பலில் பயணித்த பணியாட்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஆனால் ஆயிரக்கணக்கான ஆடுகள் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளன.

மொத்தமாக 700 ஆடுகள் மட்டுமே மீட்கப்பட்டது என்றும், தண்ணீரில் விழுந்த அவை சில நாட்களுக்கு மேல் உயிர்வாழாது, மிக மோசமான உடல் நிலையில் உள்ளது என்றும் லிவ்ஸ்டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

காப்பாற்றப்பட்ட செம்மறி ஆடு

கப்பலில் அதிக பழு ஏற்றியதே விபத்துக்கு கரணம் என்று முதல்கட்ட தகவல்கள் கூறுகின்றன.

ஆயிரக்கணக்கான செம்மறிகள் மொத்தமாக கடலில் விழுந்திருப்பதனால் சுற்றுசூழல் பாதிப்புகள் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. இதனால் கடல் அசுத்தமாகும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?