Tanya Pardazi
Tanya Pardazi  Twitter
உலகம்

ஸ்கை டைவிங் செய்யும் போது டிக்டாக் இன்புளூயன்சர் உயிரிழப்பு - என்ன நடந்தது?

Priyadharshini R

டிக்டாக் இன்புளூயன்சர் தன்யா பர்டஷி, ஸ்கை டைவிங் போது உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கனடா நாட்டின் ஒடரியோ மாகாணம் டொரண்டோ பகுதியை சேர்ந்தவர் 21 வயதான தன்யா பர்டஷி. கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் இவர் 2017-ம் ஆண்டு நடந்த 'மிஸ் டீன் கனடா' அழகி போட்டியில் பங்கேற்று இறுதி சுற்று வரை சென்றுள்ளார். மேலும் தன்யா பர்டஷி ஒரு டிக்டாக் இன்புளூயன்சியராவார்.

1 லட்சத்திற்கும் அதிகமானோர் டிக்டாக்கில் தன்யாவை பின் தொடர்கின்றனர்.

இதனிடையே, தன்யா ஸ்கை டைவிங்கில் மிகவும் ஆர்வம் உடையவாராக இருந்துள்ளார். அவர், பல முறை 2 பேர் குதிக்கும் வகையில் உதவியாளருடன் வானில் இருந்து குதித்து ஸ்கை டைவிங் சாகம் செய்துள்ளார். பின்னர் தனியாக ஸ்கை டைவிங் செய்ய பயிற்சி பெற்று உரிமமும் வாங்கியுள்ளார்.

இந்நிலையில், தன்யா பர்டஷி டொரண்டோவில் நேற்று தனியாக ஸ்கை டைவிங் செய்வதற்காக விமானத்தில் 4 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து அவர் குதித்துள்ளார். ஆனால், அவர் தாமதமாக பாரசூட்டை திறந்த காரணத்தால் தரையில் வேகமாக விழுந்தார்.

இதையடுத்து, தன்யாவை மீட்ட மீட்புக்குழுவினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தன்யாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

2500 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் திசை மாறிய கங்கை நதி - ஆய்வு சொல்வதென்ன?

Nikhila vimal: அழகிய லைலா நிகிலா விமலின் ரீசண்ட் புகைப்படங்கள்!

3.5 ஆண்டுகள் வரை கர்ப்ப காலம் கொள்ளும் விலங்குகள் பற்றி தெரியுமா?

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?

”நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது” - மாணவர்களிடம் விஜய் பேசியது என்ன?