Titanic Canva
உலகம்

Titanic: 1500 பேரை பலி வாங்கிய கப்பலில் உயிர் தப்பியவர்- ஃப்ராங்க் ப்ரென்டைஸின் கதை என்ன?

"அது தான் நான் கப்பலை கடைசியாக பார்த்தது" என தெரிவித்த அவர், தான் இறந்துவிட விரும்பவில்லை என்றாலும், அங்கு அவருக்கு உயிர் தப்பவும் வாய்ப்புகள் குறைவாகவே இருந்தது என்றார்.

Keerthanaa R

டைட்டனிக் கப்பல் விபத்தில் உயிர் தப்பிய கதையை பகிர்ந்துள்ளார், அதில் பயணித்த பயணி ஒருவர்.

1912ஆம் ஆண்டு ஏப்ரல் இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் நகரிலிருந்து நியூயார்க் சென்ற கப்பல் டைட்டானிக். ஏப்ரல் 14-15 தேதியில் எதிரே இருந்த பனிப்பாறையில் மோதி உடைந்து மூழ்கியது. அந்த கப்பலில் பயணித்த சுமார் 1500க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

டைட்டானிக் விபத்தை மையமாக கொண்டு ஹாலிவுட்டில் அதே பெயரில் படம் எடுக்கப்பட்டது. அதில் லியோநார்டோ டி கேப்ரியோ மற்றும் கேட் வின்ஸ்லெட் இணைந்து நடித்திருந்தனர். அந்த திரைப்படம் மொத்தம் பதினோரு பிரிவுகளில் ஆஸ்கார் விருதுகளை வென்றது.

1997ல் வெளியானது முதல் இன்று வரை இந்த திரைப்படம். பார்ப்பவர் மனதை கனக்கச் செய்ய பனிப்பாறையில் மோதி நேர்ந்த கோர விபத்தும், ஆயிரம் மரணங்களும் ஒரு முக்கிய காரணம். மூழ்கும் கப்பலில் மாட்டிக்கொள்ளாமல் தப்பித்தவர்களும் உண்டு.

அவர்களில் ஒருவர் தான் தப்பித்த கதையை 1979ல் ஒரு நேர்காணலில் நினைவு கூர்ந்தார். ஃப்ராங்க் ப்ரென்டைஸ் என்ற அந்த நபர், பர்சர் (Purser's Office) அலுவலகத்தின் ஒரு உறுப்பினர். Purser என்பவர் கப்பல்களில் கணக்கு வழக்குகளை வைத்திருக்கும் அதிகாரிப் பிரிவு.

ப்ரென்டைஸ், "இப்போது நினைத்தாலும் அந்த திச்சிகர சம்பவம் பயம் அளிக்கிறது" என்று கூறியவர், என்ன நடந்தது என்பதை பகிர்ந்துகொண்டார்.

"பனிக்கட்டியில் முதலில் மோதியபோது, பெரிதாக ஒன்றும் நிகழ்ந்ததாக தெரியவில்லை. வழக்கமாக நாம் காரில் பிரேக் பயன்படுத்தியது போல தான் இருந்தது.

பின்னர் அங்கு இருந்த ஒரு துவாரம் வழியாக வெளியில் எட்டிப் பார்த்தபோது வானம் தெளிவாக இருந்தது, மேலும் நட்சத்திரங்கள் பிரகாசமாக மின்னிக் கொண்டிருந்தன. கடலில் மயான அமைதி நிலவியது.

என்ன நடக்கிறது என்று புரியாமல், பனிப்பாறை கண்ணுக்கு தெரியும் இடத்திற்கு முன்னேறி சென்று பார்த்தேன். கப்பலின் வாட்டர் லைனில் எந்த சேதமும் ஏற்படவில்லை என நினைத்த எனக்கு அப்போது தான் கப்பல் பனிக்கட்டியில் கப்பல் மோதியுள்ளது புரிந்தது." எனக் கூறினார்.

எளிதில் மூழ்கிவிடாத வகையில் டைட்டானிக் வடிவமைக்கப்பட்டிருந்தாலும், பனிப்பாறை, கப்பலின் ஸ்டார்போர்ட் சைடின் முன்பகுதியுடன் மோதியிருந்தது.

இதனால், கப்பலின் என்ஜின் ரூம் வரை சேதம் ஏற்பட்டிருந்தது எனவும் அவர் தெரிவித்தார்.

திடீரென கப்பல் மேலெழுந்து, உள்ளே இருக்கும் பாகங்கள் நொறுங்கும் சத்தம் கேட்டது. பலகையில் தொங்கிக்கொண்டிருந்த ப்ரென்டைஸ் நன்றாக மேல் எழும்பி, பின்னர் அதி வேகத்தில் தண்ணீரில் வீசப்பட்டார்.

"தண்ணீரில் விழுந்த போது எதன் மீதும் மோதாமல் விழுந்ததால் காயமின்றி தப்பினார் ப்ரென்டைஸ். அப்போது கப்பலை பார்த்த ப்ரென்டைஸ் அது மெல்ல தண்ணீருக்குள் இறங்குவதை பார்த்துள்ளார்.

"அது தான் நான் கப்பலை கடைசியாக பார்த்தது" என தெரிவித்த அவர், தான் இறந்துவிட விரும்பவில்லை என்றாலும், அங்கு அவருக்கு உயிர் தப்பவும் வாய்ப்புகள் குறைவாகவே இருந்தது என்றார்.

"அதிகபடியான குளிரில் உறைந்துக்கொண்டிருக்கையில், கடவுளாக பார்த்து லைஃப் போட் ஒன்று என்னை நோக்கி வந்தது. அதிலிருந்தவர்கள் என்னை உள்ளே இழுத்துப் போட்டுக்கொண்டனர்" எனக் கூறினார் அவர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?