உலகெங்கிலும் உள்ள வித்தியாசமான வீடுகள் குறித்து தெரியுமா?  Twitter
உலகம்

உலகெங்கிலும் உள்ள வித்தியாசமான வீடுகள் குறித்து தெரியுமா? எங்கே இருக்கிறது?

சில வித்தியாசமான வடிவமைப்புகளை கொண்ட வீடுகளை அமைத்து வருகின்றனர். அந்த வகையில் வளைந்த வீடு, முதலை வீடு, தலைகீழான வீடு என பல்வேறு ஐடியாக்களில் தங்குமிடங்களை அமைத்து வருகின்றனர்.

Priyadharshini R

மனிதனின் அடிப்படை தேவைகளில் ஒன்று வீடு, இன்றைய நவீன உலகிற்கேற்ப நமக்கு பிடித்த வகையில் வீடுகளை கட்டிக் கொள்கிறோம்.

அதே சமயம் அதிக ஆர்வத்தின் காரணமாக சில வித்தியாசமான வடிவமைப்புகளை கொண்ட வீடுகளை அமைத்து வருகின்றனர். அந்த வகையில் வளைந்த வீடு, முதலை வீடு, தலைகீழான வீடு என பல்வேறு ஐடியாக்களில் தங்குமிடங்களை அமைத்து வருகின்றனர்.

அப்படி உலகெங்கிலும் உள்ள வித்தியாசமான வீடுகள் குறித்தும் அதன் தனிதன்மை குறித்தும் இங்கே தெரிந்துக்கொள்வோம்.

கழிப்பறை வடிவ வீடு

நவம்பர் 9, 2007 அன்று, சியோலுக்கு தெற்கே சுமார் 46 கிமீ தொலைவில் இந்த கழிப்பறை வடிவ வீடு அமைக்கப்பட்டுள்ளது.

கழிப்பறை வடிவிலான இந்த வீட்டிற்கு ஹேவூஜே என்று பெயரிடப்பட்டது. இதன் பொருள் 'ஒருவர் தங்கள் கவலைகளைத் தீர்க்கும் இடம்' என்பதாகும்.

உலக கழிவறை சங்கத்தின் தொடக்க சபையின் தலைவர் இந்த வித்தியாசமான மற்றும் தனித்துவமான வீட்டை வடிவமைத்தார்.

வளைந்த வீடு

போலாந்து ஸோபோட்டில் 2004ல் இந்த வீடு கட்டப்பட்டது. கட்டிடத்தை Szotynscy மற்றும் Zaleski ஆகியோர் வடிவமைத்தனர்.

விமான வீடு

லெபனானில் உள்ள மிசியாரா கிராமத்தில் அமைந்துள்ளது இந்த விமான வீடு.

ஆற்றில் வீடு

பெல்கிரேடில் இருந்து சுமார் 160 கிமீ (99 மைல்) தொலைவில் உள்ள மேற்கு செர்பிய நகரமான பஜினா பஸ்தாவிற்கு அருகில் டிரினா ஆற்றின் மீது ஒரு பாறையில் கட்டப்பட்ட வீடு காணப்படுகிறது. இந்த வீடு 1968 ஆம் ஆண்டு இளைஞர்களால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

முதலை வடிவில் வீடு

ஐவரி கோஸ்ட்டின் தலைநகரான அபிட்ஜானில் முதலை வடிவில் வீடு கட்டப்பட்டுள்ளது.

கால்பந்து வடிவ வீடு

ஜப்பானில் அமைந்துள்ளது இந்த கால்பந்து வடிவ வீடு. மிதக்கும் மற்றும் பூகம்பங்களை எதிர்க்கும் வகையில் இந்த வீடு வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பாறை வீடு

மெக்ஸிகோவின் வடக்கு மாநிலமான கோஹுய்லாவில் அமைந்துள்ளது இந்த பாறை வீடு. இதில் மக்கள் 30 வருடங்களாக வசிக்கின்றனர். மேற்புறத்தில் பாறையால் மூடப்பட்டிருக்கும், அதன் கீழே மக்கள் வசிக்கின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?