Traffic Signal Melts Twitter
உலகம்

வெயிலின் காரணமாக உருகிய சிக்னல்கள் - அழிவின் விளிம்பில் உலகமா?

சாலைகள் உருகுவது, ரயில் தண்டவாளங்கள் மடங்குதல், போன்றவை கடந்த சில நாட்களாக இங்கிலாந்தில் அரங்கேறியது. தார்ச்சாலை உருகியதால் அவ்வழியாகச் சென்ற வாகனங்கள் சாலையில் ஒட்டிக்கொண்தால் மக்கல் அவதிப்பட்டனர்

Keerthanaa R

இன்னும் சில ஆண்டுகள் கழிந்தால் ஒட்டுமொத்த உலகின் சுற்றுச்சூழலும் சின்னாபின்னமாகிவிடும் என ஆஸ்திரேலியாவின் சுற்றுச்சூழல் குறித்த அறிக்கை ஒன்று சமீபத்தில் சுட்டிக்காட்டியது.

அது உண்மை என்பது போல இருக்கின்றன அண்மைகால நிகழ்வுகள்.

இங்கிலாந்தில் வரலாறு காணாத வெப்பநிலை உயர்வால், அந்நாட்டு மக்கள் தவித்து வருகின்றனர். எப்போதும் மழையாகவும், குளிராக மட்டும் இருக்கும் ஊரில், இந்த வருடம் தட்ப வெப்பநிலை அதிகரித்துள்ளது. கிட்ட தட்ட நாற்பது டிகிரியை தொட்டுள்ள வெப்பநிலையால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.

இந்த வெப்ப அலையால், எதிர்பாராத நிகழ்வுகள் பல நடந்தேறிவருகின்றன. சாலைகள் உருகுவது, ரயில் தண்டவாளங்கள் மடங்குதல், போன்றவை கடந்த சில நாட்களாக இங்கிலாந்தில் அரங்கேறியது. தார்ச்சாலை உருகியதால் அவ்வழியாகச் சென்ற வாகனங்கள் சாலையில் ஒட்டிக்கொண்டன.

மேலும் ரயில் தண்டவாளங்களின் வடிவங்கள் மாறியதால், அந்நாட்டுப் போக்குவரத்து அதிகமாகவே பாதித்தது.

இந்நிலையில், அடுத்ததாக ரயில் பாதையில் பொருத்தப்பட்டிருக்கும் சிக்னல்கள் உருகியுள்ளது. அந்நாட்டு தேசிய ரயில்வே உருகிய நிலையிலிருந்த சிக்னல் கம்பத்தை புகைப்படம் எடுத்து டிவிட்டரில் பகிர்ந்திருந்தது

மேலும் கிழக்கு கடற்கரைச் சாலையில் செல்லும் முன் மக்கள் சற்று யோசித்து செல்லுங்கள் என்றும் எச்சரித்திருந்தனர்.

இந்த உருகிய சிக்னலின் புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகின்றன

ராய்டர்ஸின் அறிக்கைப்படி, இதுவரை 13 பேராவது இந்த அதிக வெப்ப நிலையின் காரணமாக உயிரிழந்துள்ளனர். மேலும் அந்நாட்டு தீயணைப்பு வீரர்கள் இரண்டாம் உலப் போருக்குப் பிறகு தற்போது தான் அதிக வேலையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

காரணம் இந்த அதிக வெப்ப நிலையின் காரணமாக காடுகளில் தீ பற்றியதும், எதிர்பாராத விதமாக வீடுகளிலும், கட்டிடங்களிலும் தீ பற்றுவது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன

ஆஸ்திரேலியாவின் நிலை

கடந்த சில ஆண்டுகளில் ஆஸ்திரேலியா முன்னுக்குப் பின் முரணாகப் பல மோசமான காலநிலைப் பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளது. கடுமையான வறட்சி, மிகப் பெரிய காட்டுத் தீ, வரலாறு காணாத அளவுக்கு மிகப் பெரிய வெள்ளம், கிரேட் பேரியர் ரீஃபில் வெளிரிப் போன 6 பவளப் பாறைப் பகுதிகள் என சுற்றுச்சூழல் சார் பிரச்சனைகளையும் அதன் விளைவுகளையும் அடுக்கிக் கொண்டே போகலாம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?