Thamel: புத்தர் ஆலயம் முதல் டான்ஸ் க்ளப் வரை - நேபாளத்தின் தூங்காநகரம் பற்றி தெரியுமா? ட்விட்டர்
உலகம்

Thamel: புத்தர் ஆலயம் முதல் டான்ஸ் க்ளப் வரை - நேபாளத்தின் தூங்காநகரம் பற்றி தெரியுமா?

NewsSense Editorial Team

நேபாள் நாட்டின் தலைநகரான காத்மாண்டுவில் உள்ள ஒரு பகுதிதான் தாமில். இப்பகுதியை காத்மாண்டுவின் தூங்காநகரம் என்று சொல்லலாம்.

கோவா போன்று மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த பயணிகளை ஈர்க்கும் இடமாக தாமில் இருக்கிறது. காத்மாண்டுவின் இரவு வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்றால் தாமிலுக்குதான் செல்ல வேண்டும்.

தாமிலில் எல்லாமே கிடைக்கும். இந்திய ரூபாய் மதிப்பை விட நேபாள் ரூபாய் மதிப்பு குறைவுதான் என்றாலும் இந்தியாவைக் காட்டிலும் நேபாளில் விலைவாசி அதிகம்.

காத்மாண்டுவில் தாமில் காஸ்ட்லியான பகுதி என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். ஷாப்பிங், பப், டேன்ஸ் க்ளப் மற்றும் மல்டி க்யூசின் ரெஸ்டாரண்டுகள் ஆகியவை தாமிலில் புகழ்பெற்றது.

இரவு 7 மணியிலிருந்து தாமில் களைகட்ட ஆரம்பித்து விடும். தாமிலின் தெருக்களில் திருவிழாவைப் போல் விளக்குகள் தோரணம் கட்டித் தொங்க விடப்பட்டிருக்கும். டேன்ஸ் க்ளப்பில் ஒலிக்க விடும் பாடல்கள் தெருக்களில் கேட்கும். தாமிலுக்குள் நுழைந்தாலே நாமும் பார்ட்டி மோடுக்கு வந்து விடுவோம்.

ஷாப்பிங் செய்ய வேண்டுமென்றால் இங்கு அனைத்து விதமான துணி வகைகளும் விற்பனை செய்யப்படுகின்றன. புத்தரின் படங்கள் அச்சிடப்பட்ட டிசர்டுகளை அதிகம் காண முடிகிறது. ஜெர்க்கின்கள், ஆண் – பெண் இருவருக்குமான உடைகள் விற்கப்படுகின்றன.

அதைத் தாண்டி சால்வைகள் மற்றும் போர்வைகள் கூட விற்கப்படுகின்றன. துணிகளுக்கு அடுத்தபடியாக கலைப்பொருட்கள் விற்கும் கடைகளை அதிகம் காண நேர்கிறது. கலைப்பூர்வமாக செய்யப்பட்டிருக்கும் புத்தர், விநாயகர், தாரா தேவி, சரஸ்வதி போன்ற கடவுளர் சிலைகள் விற்கப்படுகின்றன. நேபாளில் இந்து மதமும் புத்த மதமும் பின்னிப்பிணைந்ததாக இருக்கிறது.

செம்பு நிறத்தில் பல வேலைப்பாடுகளுடனான பாத்திரங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. அந்தப் பாத்திரத்தை சிங்கிங் பௌல் என்கின்றனர்.

அதனை ஒவ்வொரு இடத்தில் தட்டும்போதும் ஒவ்வொரு விதமான ஓசை எழுந்து கேட்கும் நமக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது. ஏழு வகையான உலோகங்களால் செய்யப்பட்டிருக்கும் இப்பாத்திரத்தை மியூசிக் தெரபிக்காகப் பயன்படுத்துகின்றனர். இந்தப் பாத்திரத்தை சாப்பிடவும் பயன்படுத்தலாம். புத்த மந்திரங்கள் பதிக்கப்பட்ட தட்டு வடிவிலும் இந்தப் பாத்திரம் இருக்கிறது.

கூர்க்காக்களின் ஆயுதமான குக்குரி என்கிற கத்திகளும் இங்கு விற்கப்படுகின்றன. பல விதமான கற்கள் பதித்த ஆபரணங்கள் விற்கப்படுகின்றன. இது போன்று ஷாப்பிங் விரும்பிகளுக்கு தீனி போடும் வகையில் நிறைய கடைகள் இருக்கின்றன.

அனைத்து ரெஸ்டாரண்டுகளிலும் மது விற்பனை செய்யப்படுகின்றன. லைவ் மியூசிக் கான்செர்ட் நடத்தும் ரெஸ்டாரண்டுகளை மேற்கத்திய பயணிகள் அதிகம் விரும்புகின்றனர். அங்கு மேற்கத்திய இசையில் பாடுகின்றனர்.

டேன்ஸ் பார்கள் நிரம்பி வழிகின்றன. உள்ளே நுழைவதற்கு எந்தக் கட்டணமும் இல்லை. பெண்கள் மற்றும் ஆண்கள் இணைந்தோ அல்லது பெண்கள் மட்டுமே கூட நடனமாடுகின்றனர். அங்கு சென்று மது வகைகள் அல்லது உணவு ஆர்டர் செய்யலாம். ஸ்பாக்களும் இங்குண்டு. பெரும்பாலான ஸ்பாக்களைப் போல சட்டத்துக்கு விரோதமான பாலியல் தொழிலும் நடக்கத்தான் செய்கிறது.

தாமிலின் முக்கிய இரண்டு தெருக்கள் அதிகாலை நான்கு மணி வரையிலும் இயங்கக்கூடியவை. ஷாப்பிங், பப், டேன்ஸ் க்ளப் என யாருக்கு எது தேவையோ அதற்குச் செல்லலாம். மிதமான தட்பவெப்பநிலை நிலவும் காத்மாண்டுவின் இரவு வாழ்க்கையை அனுபவித்துப் பாருங்கள்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?