இயற்கை மர்மங்களால் நிறைந்தது. ஒவ்வொரு படைப்பும் எப்படி அதன் தனிப்பட்ட வடிவத்தில் உருவானது என்ற கேள்விக்கு நம் யாரிடமும் பதில் இல்லை. சிறு குன்று தொடங்கி உயர நிற்கும் மலைகள் வரை இயற்கையின் எந்த ஒரு அம்சமும் நம்மை ஆச்சரியப்படுத்தாமல் இல்லை.
உலகம் முழுவதும் இப்படி பார்ப்பவரை ஆச்சரியக் கடலில் ஆழ்த்தும் பெரிய பெரிய மலைகள் அமைந்துள்ளன. அவற்றைக் குறித்து இங்கு காணலாம்
எவரெஸ்ட் சிகரம் உலகின் மிக உயர்ந்த மலைச்சிகரம் ஆகும். இது கடல் மட்டத்தில்ருந்து 8,849 மீ உயரத்தில் இருக்கிறது. எவரெஸ்ட்டின் உச்சியில் நீங்கள் நின்றுக்கொண்டிருந்தால், நிஜமாகவே உலகின் உச்சத்தில் தான் நின்றுக்கொண்டிருப்பீர்கள்
ஜப்பானின் மிக முக்கிய அடையாளங்களில் ஒன்று இந்த ஃபூஜி சிகரம். இது கடல் மட்டத்தில்ருந்து 3,776 மீ உயரத்தில் இருக்கிறது. பல நூற்றாண்டுகளாக புனிதத்தலமாக திகழும் இந்த எரிமலை பல கலைஞர்களின் ஓவியப்படைப்பாக இருக்கிறது
கடல்மட்டத்திலிருந்து 8,586 மீ உயரத்தில் இருக்கும் இந்த மலைச்சிகரம் தான் 1852 ஆம் ஆண்டு வரை உலகின் மிக உயர்ந்த மலையாக கருதப்பட்டது. இந்த மலை மீது ஏற நேபாளத்தின் பாதை தான் சிறந்தது எனக் கூறப்படுகிறது. இந்தியாவில் அமைந்திருக்கும் பாதை கலாச்சார காரணங்களுக்காக மக்கள் அனுமதிக்கப்படுவதில்லை
ஐரோப்பியாவில் அமைந்திருக்கும் ஆல்ப்ஸ் மலைத்தொடர்களில் அமைந்திருக்கும் இந்த மாட்டர்ஹார்ன் ஆல்ப்ஸின் மிக உயர்ந்த மலையாகும். கடல்மட்டத்திலிருந்து 4,478 மீ உயரத்தில் அமைந்திருக்கிறது மாட்டர்ஹார்ன். இந்த மலை இதன் கச்சிதமான பிரமிட் வடிவமைப்புக்காக புகழ்பெற்றது
இங்கு அமைந்திருக்கும் செயலற்ற எரிமலை, உலகளவில் அதிகமாக புகைப்படம் எடுக்கப்படும் எரிமலைகளில் ஒன்று. கிளிமாஞ்சாரோ மலைகள் கடல்மட்டத்திலிருந்து 5,895 மீ உயரத்தில் அமைந்திருக்கிறது. இது ஆப்ரிக்காவில் இருக்கும் மிக உயரமான மலைச்சிகரமாகும்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust