புத்தாடை, விருந்து, பரிசுகள் - இறந்தவர்களை கொண்டாடும் விநோத சடங்கு - எங்கே? ட்விட்டர்
உலகம்

புத்தாடை, விருந்து, பரிசுகள் - இறந்தவர்களை கொண்டாடும் விநோத சடங்கு - எங்கே?

பிறப்பும் இறப்பும் மனித வாழ்வில் தவிர்க்கமுடியாத நிகழ்வுகள் என்பதை ஏற்றுக் கொண்டாடும் விதமாக இந்த மானெனெ என்ற சடங்கு ஆண்டுதோறும் பின்பற்றப்பட்டு வருகிறது. இறந்தவர்களின் பிரேதங்களை ஃபார்மாலின் பயன்படுத்தி பாதுகாக்கின்றனர்.

Keerthanaa R

இறப்பு, அதன் பிறகான வாழ்க்கைக் குறித்து நம் எல்லோருக்குமே ஆர்வம் இருக்கும். ஆனால், இறந்தவர்கள் உண்மையில் சந்தொஷமாக இருக்கிறார்களா?

அந்த உலகில் தனிமை இருக்குமா? மனித உலகில் கிடைப்பது போன்ற உறவுகளும் உபசரிப்பும் அங்கு இருக்குமா என்று பல கேள்விகள் மனதிற்குள் ஓடும்.

இப்படியான சிந்தனைகள் தாம், பல விநோத சடங்குகளுக்கு வழிவகுக்கின்றன.

இறந்தவர்களை தோண்டி எடுத்து, அவர்களை கொண்டாடும் விநோத சடங்கு ஒன்று இந்தோனேசிய பகுதியில் ஆண்டுதோறும் நிகழ்ந்து வருகிறது

இந்தொனேசியாவின் தெற்கு சுலாவெசி பகுதியில் வாழ்ந்து வருபவர்கள் தொராஜா பழங்குடியினர். இவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை, தங்களுக்கு நெருக்கமானவர்களின் உடல்களை தோண்டி எடுத்து, அதனை புதுப்பித்து வருகின்றனர்.

பிறப்பும் இறப்பும் மனித வாழ்வில் தவிர்க்கமுடியா நிகழ்வுகள் என்பதை ஏற்றுக் கொண்டாடும் விதமாக இந்த மானெனெ என்ற சடங்கு ஆண்டுதோறும் பின்பற்றப்பட்டு வருகிறது. இறந்தவர்களின் பிரேதங்களை ஃபார்மாலின் பயன்படுத்தி பாதுகாக்கின்றனர். அதனால், உடல்கள் அழுகாமல் அப்படியே இருக்கிறது.

மனெனெ சடங்கு என்பது என்ன?

மனெனெ என்ற சொல் "முன்னோரை பராமரிப்பது " எனப் பொருள்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் இறுதியில் இந்த விழா கொண்டாடப்படும். 3 நாட்களுக்கு நடக்கும் இந்த விழா பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டு வருகிறது. தொராஜா பழங்குடியினர், இறந்துபோன தங்களுக்கு நெருக்கமானவர்களின், குடும்பத்தாரின் பிணங்களை தோண்டி எடுப்பார்கள்.

அவற்றை சுத்தம் செய்து, புத்தாடை அணிவித்து, கையில் சிகரெட்களை கொடுக்கிறார்கள். ஒரு சில சமயம் அந்த பிணங்களுடன் இவர்கள் புகைப்படமும் எடுத்துக் கொள்கின்றனர். சிலரோ, இன்னும் ஒரு படி மேலே போய், இறந்தவர்களுடன் பேசுவது, அவர்களுக்கு பிடித்த உணவளிப்பது, பரிசுகள் கொடுப்பது போன்ற விஷயங்களையும் செய்கின்றனர்.

அவர்கள் உயிருடன் இருக்கும்போது கழித்த சந்தோஷமான நாட்களை நினைவுக்கூருவதாக தொராஜா மக்கள் தெரிவிக்கின்றனர்.

தொராஜா மக்கள், இறந்த தங்களது குடும்பத்தினரின் ஆன்மா, அவர்களுடன் வீட்டில் வாழ்ந்து வருவதாக நம்புகின்றனர்.

இந்தோனேசியாவில் வசிக்கும் சுமார் 10 லட்சம் தொராஜா பழங்குடியினரில் பெரும்பாலானோர் தெற்கு சுலவெசி பகுதியில் வசித்து வருகின்றனர். நாடு பல விஷயங்களில் நவீனமயமடைந்திருந்தாலும், நூற்றண்டுகளை கடந்தும் இந்த சடங்கை மக்கள் இன்னும் கைவிடவில்லை.

இந்த சடங்கின்போது தனித்துவமான இசை வாசிக்கப்ப்டுகிறது. பிரபஞ்சத்தில் இருக்கும் இறுதிச் சடங்குகள் குறித்து அவை விவரிக்கின்றன.

இந்த சடங்கிற்காக, பலக் குடும்பங்கள் ஆண்டுதோறும் பணம் சேமித்துவைத்து, இறந்த தங்கள் குடும்பத்தாருக்கு விதவிதமாகவும், அழகாகவும் அலங்காரங்கள் செய்வித்து அழகுபார்க்கின்றனர்

இந்த விநோத சடங்கு குறித்து தனது யூடியூப் பக்கத்தில் ஆவணப்படுத்தியிருந்தார் மைக் கோரி என்ற டிராவல் யூடியூபர். ஒரு வாரக் காலம் இந்த பழங்குடியினருடன் தங்கி, இந்த முழுச் சடங்கையும் காட்சிப்படுத்தியிருந்தார். கடந்த அக்டோபர் 2021ஆம் ஆண்டு பதிவிடப்பட்ட இந்த வீடியோ 5 மில்லியனுக்கும் மேல் பார்வைகளை பெற்றுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?