துருக்கி நிலநடுக்கம் ட்விட்டர்
உலகம்

துருக்கி பூகம்பம்: எப்படி ஏற்பட்டது? இதுதான் உலகின் சக்திவாய்ந்த நிலநடுக்கமா? Explained

NewsSense Editorial Team

தென்கிழக்கு துருக்கி மற்றும் சிரிய எல்லையை ஒட்டி இருக்கும் துருக்கி பகுதிகளில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தின் காரணமாக 4,800 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

ஆயிரக்கணக்கானோர் நிலநடுக்கத்தின் காரணமாக காயங்களோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது திங்கட்கிழமை நிலவரம் மட்டுமே. தொடர்ந்து அடுத்தடுத்து துருக்கி பகுதியில் நில நடுக்கங்கள் வந்து கொண்டே இருப்பதாக பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.

துருக்கியின் காசியன்டெப் (Gaziandep) பகுதியைத் தாக்கிய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, பல்வேறு நிலநடுக்கங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. அதில், முதலில் வந்த நிலநடுக்கத்துக்கு இணையாக மீண்டும் ஒரு நிலநடுக்கம் வந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஏன் இந்த நிலநடுக்கங்கள் இத்தனை அபாயகரமானதாக இருக்கின்றன?

ரிக்டர் அளவுகோலில் துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம் 7.8 ஆக பதிவாகியுள்ளது. இது அதிகாரப்பூர்வமாக மிகப்பெரிய நிலநடுக்கங்கள் வகைகளிலேயே சேர்க்கப்பட்டிருக்கிறது. இந்த நிலநடுக்கத்தினால் சுமார் 100 கிமீ நீளத்துக்கு பாறை வெடிப்புகள் (Geological Fault lines) ஏற்பட்டிருக்கின்றன. இது சுற்றுப்பகுதிகளில் உள்ள கட்டடங்களுக்கு அதீத சேதத்தையும் பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது.

இத்தனை அபாயகரமான நிலநடுக்கம் கடந்த 10 ஆண்டுகளில் இரு முறை மட்டுமே ஏற்பட்டிருக்கிறது, அதற்கு முந்தைய 10 ஆண்டுகளில் 4 முறை மட்டுமே ஏற்பட்டிருக்கிறது என லண்டன் கல்லூரி பல்கலைக்கழகத்தின் Institute for Risk and Disaster Reduction நிறுவனத்தின் தலைவர் மற்றும் பேராசிரியர் ஜோனா ஃபாரெ வாக்கர் (Joanna Faure Walker) பிபிசி வலைதளத்திடம் கூறியுள்ளார்.

தற்போது துருக்கியில் ஏற்பட்டிருக்கும் சேதங்கள் அனைத்திற்கும், நடுக்கங்கள் மட்டுமே காரணம் அல்ல என்றும் பிபிசி வலைதளக் கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

திங்கட்கிழமை காலை மக்கள் பலரும் தங்கள் வீடுகளுக்குள் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கும் போது இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு, பலரும் இடிபாடுகளுக்குள்ளேயே சிக்கிக் கொள்ள ஒரு மிக முக்கிய காரணமாக அமைந்துவிட்டது.

எனவே கூடிய விரைவில் மீட்பு படையினர் களத்திற்கு சென்று அடுத்த 24 மணி நேரத்திற்குள் உயிரோடு இருப்பவர்களை மீட்டெடுக்க வேண்டும்.

ஒருவேளை நிலநடுக்கங்கள் ஏற்பட்டு 24 மணி நேரத்திற்கு மேல் காலதாமதம் ஆகிவிட்டால் உயிரோடு இருப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிடும் என்றும் அவ்வலைதளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

துருக்கி நிலநடுக்கத்தில் கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம் என்ன?

தற்போது நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கும் பகுதியில் கடந்த இருநூறு ஆண்டுகளுக்கு மேல் எந்த ஒரு மிகப்பெரிய நிலநடுக்க சம்பவங்களும் ஏற்படவில்லை.

அவ்வளவு ஏன் இந்த இடத்தில் இத்தனை அபாயகரமான நிலநடுக்கம் ஏற்படலாம் என்பதற்கு எந்த ஒரு சின்ன சமிக்ஞைகளோ, எச்சரிக்கைக் குறியீடுகளோ கூட இல்லையாம்.

இந்த நிலநடுக்கத்திற்கான காரணங்கள் என்ன?

பூமியின் மேல் ஓடு, பிளேட்ஸ் (Plates) என்றழைக்கப்படும் தகடுகளால் ஆனது. அது ஒன்றை ஒன்று பிடித்துக் கொண்டு இருக்கும். இந்த தகடுகள் எப்போதும் நகர்ந்து கொண்டே இருக்க முயலும்.

ஒன்றை ஒன்று உரசிக் கொண்டு இருப்பதால் இரண்டுமே நகர முடியாமல் அதன் உராய்வில் சிக்கிக் கொள்ளும். ஆனால் திடீரென ஒருநாள், தகடுகளுக்குள் இருக்கும் அழுத்தம் வெளிப்பட்டு, ஏதேனும் ஒரு தகடு சட்டென நகரும் போது, ஒட்டுமொத்த நிலபரப்பும் நகரும்.

தற்போது துருக்கியில் ஏற்பட்டிருக்கும் நிலநடுக்கத்துக்கு அரேபிய கண்டத் தகடு வடக்கு நோக்கி நகர்வதும், அனடோலியன் தகடுடோடு உராய்ந்து கொண்டிருப்பதாலும் உருவானது என பிபிசி வலைதளம் குறிப்பிட்டிருக்கிறது.

இந்த இரு கண்டத் தகடுகளுக்கு இடையிலான உராய்வுகள் காரணமாக கடந்த காலங்களிலும் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு இருக்கின்றன. 1822 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி 7.4 ரிக்டர் அளவுக்கு ஒரு மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அந்த நிலநடுக்கத்தின் போதும் இந்த நிலப்பரப்பு மிக மோசமான பாதிப்புகளையும், அலெப்போ பகுதியில் மட்டும் சுமார் 7,000 பேருக்கு மேல் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

தற்போது நிலநடுக்க நிபுணர்கள் மற்றும் உலக நாடுகள் அச்சப்படுவது, நிலநடுக்கத்தை தொடர்ந்து ஏற்படும் அதிர்வுகளை பார்த்து தான். ஏற்கனவே முதல் நிலநடுக்கத்தை தொடர்ந்து பல நில அதிர்வுகள் ஏற்பட்டுவிட்டன. மேலும் சில பல நில அதிர்வுகள் ஏற்படலாம் என்றும் பூகோளவியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.

உலகின் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்:

கடந்த 2011 ஆம் ஆண்டு ஜப்பான் கடற்கரை ஓரத்தில் ரிக்டர் அளவுகோளில் 9 அளவுக்கு ஒரு மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. அது நிலப்பரப்பில் மிகப்பெரிய பாதிப்புகளையும் கடற்பரப்பில் சுனாமி பிரச்னைகளையும் ஏற்படுத்தின.

இதனால் ஜப்பான் நாட்டில் உள்ள ஒரு மிக முக்கியமான அணுஉலை பாதிக்கப்பட்டு ஒட்டுமொத்த உலகமும் அச்சத்தில் உறைந்தது இங்கு நினைவு கூறத்தக்கது. அப்படி என்றால் ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம் தான் உலகிலேயே மிக சக்தி வாய்ந்த நிலநடுக்குமா?

இல்லை. 1960 ஆம் ஆண்டு சிலி (Chile) நாட்டில் 9.5 ரிக்டர் அளவுக்கு ஒரு மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது இங்கு நினைவு கூரத்தக்கது. அதுதான் மனித வரலாற்றில் பதிவு செய்யப்பட்டு இருக்கும் மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?