Turkey : Is this the world’s first temple? Twitter
உலகம்

இதுதான் உலகின் முதல் கோவிலா? எங்கு இருக்கிறது தெரியுமா?

இந்த தளம் உலகெங்கிலும் உள்ள பல பயணிகளையும் வரலாற்றாசிரியர்களையும் ஈர்க்கிறது. இது துருக்கியில் பார்க்க வேண்டிய மிக முக்கியமான இடங்களில் ஒன்றாகும்.

Priyadharshini R

உலகில் முதன் முதலில் கட்டப்பட்ட கோவில் பற்றி நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? துருக்கியின் கோபெக்லி டெப்பில் இருக்கிறது உலகின் முதல் கோவில்!

கோபெக்லி டெப் என்பது துருக்கியின் தென்கிழக்கு அனடோலியா பிராந்தியத்தில் உள்ள ஒரு பழங்கால தொல்பொருள் தளம், அதுமட்டுமில்லாமல் கட்டிடக்கலை அதிசயமாகவும் கருதப்படுகிறது.

துருக்கியின் அனடோலியா பிராந்தியத்தில் உள்ள உர்ஃபா நகரத்திலிருந்து வெகு தொலைவில் ஒரு வட்ட அமைப்பில் பெரிய கல் தூண்கள் காணப்படுகின்றன.

இந்தக் கற்கள் 10,000 ஆண்டுகள் பழமையானவை என்று கூறப்படுகிறது.

இந்தத் தூண்களின் பலவற்றில் காட்டு விலங்குகளின் உருவங்கள், ஆடைகளின் வடிவங்கள் என பல விஷயங்கள் இருக்கின்றன.

ஆதாரங்களின் அடிப்படையில், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இந்த பெரிய கல் தூண்கள் உலகின் மிகப் பழமையான கோவிலின் எச்சங்கள் என்று நம்புகின்றனர்.

2018 ஆம் ஆண்டில், கோபெக்லி டெப் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக மாறியது.

இந்த ஆண்டுதான் இந்த இடத்தின் மதிப்பு, 'மனிதனால் உருவாக்கப்பட்ட நினைவுச்சின்ன கட்டிடக்கலையின் முதல் வெளிப்பாடுகளில் ஒன்றாக' உலகளவில் அங்கீகரிக்கப்பட்டது.

இந்த தளம் உலகெங்கிலும் உள்ள பல சுற்றுலா பயணிகளையும் வரலாற்றாசிரியர்களையும் ஈர்க்கிறது. இது துருக்கியில் பார்க்க வேண்டிய மிக முக்கியமான இடங்களில் ஒன்றாகும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?