Twitter: இயேசு, சாத்தானுக்கு 'Verified' கணக்குகள் - என்ன செய்யப்போகிறார் எலான் மஸ்க்? twitter
உலகம்

Twitter: இயேசு, சாத்தானுக்கு 'Verified' கணக்குகள் - என்ன செய்யப்போகிறார் எலான் மஸ்க்?

Antony Ajay R

ட்விட்டரை எலான் மஸ்க் கைப்பற்றியது முதலே சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லை. அவர் செய்துள்ள மாற்றங்களில் முக்கியமான ஒன்று நீலக்குறிக்கு கட்டணம் வசூலிப்பது. 

சில தினங்களுக்கு முன்பு அமலுக்கு வந்த இந்த நடவடிக்கையால் பலரும் பாதிப்படைந்துள்ளனர். மாதா மாதம் ட்விட்டருக்கு சந்தா செலுத்துவது மோசமான நடைமுறை என பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். எனினும் மஸ்க் விடாப்பிடியாக அமல்படுத்திவிட்டார்.

இப்போது பிரபலங்கள் மட்டுமில்லாமல் பலரும் தங்கள் கணக்குகளுக்கு நீலக்குறி வாங்கி வைத்துள்ளனர். பிரபலங்களின் பெயர்களில் கணக்குகளைத் தொடங்கியிருப்பவர்களும் 8 டாலரில் நீலக்குறியைப் பெற்றுவிட்டதனால் போலிக் கணக்குகள் அதிகரித்துவிட்டன.

Twitter

குறிப்பாக கிறிஸ்தவ கடவுளான ஜீசஸ் பெயரில் 2006ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் கணக்குக்கு வெரிஃபைட் குறி கொடுத்திருந்தது உலக அளவில் பேசுபொருளானது.

இதே போல சாத்தான் பெயரில் உள்ள கணக்கு, மற்றொரு சமூக வலைத்தளமான பேஸ்புக் நிறுவனர் சக்கர்பெர்க் பெயரில் உள்ள கணக்கு என பல பிரபலங்களின் போலி கணக்குக்கு நீலக்குறி கொடுக்கப்பட்டிருந்தது.

எல்லி லில்லி நிறுவனத்தின் போலி வெரிஃபைட் கணக்கு ஏற்படுத்திய குழப்பத்தால் அந்த நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

நெட்டிசன்கள் நீலக்குறிக்கு பணம் வசூலிக்கும் நடைமுறை மிகவும் தவறானது எனக் கூறுகின்றனர். ஏற்கெனவே ஒரு ட்வீட்டில், "இனி ட்விட்டரில் பல வினோதமான விஷயங்கள் அரங்கேறும். நாங்கள் பல சோதனைகளை மேற்கொள்ளப் போகிறோம். சரியாக வருபவற்றை வைத்துக்கொள்வோம்" எனக் கூறியிருந்தார் மஸ்க்.

இதனால் நீலக்குறிக்கு பணம் செலுத்தும் நடைமுறை நீக்கப்படுமா என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்துள்ளது.

எலான் மஸ்க் இது குறித்து தனது ட்வீட்டில், "பகடிக்காக தொடங்கப்படும் கணக்குகள் தங்கள் பெயருக்கு பின்னால் “parody” என சேர்த்துக்கொள்ள வேன்டும் . இல்லாவிட்டால் அந்த கணக்குகள் நீக்கப்படும். போலிக்கணக்குகளால் மக்கள் ஏமாற்றப்படுவது சரியல்ல. பகடிக்கணக்குகளுக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும்" எனக் கூறியிருந்தார்.

இந்த போலிக்கணக்கு பிரச்னையால் பல விளம்பரதாரர்கள் விளம்பரங்கள் வெளியிடுவதை நிறுத்தியிருக்கின்றனர். மேலும் பலர் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் 8 டாலர் சந்தாவுக்கு வெரிஃபட் ட்வீட் வழங்கும் நடைமுறையை தற்காலிகமாக இடைநீக்கம் செய்துள்ளது ட்விட்டர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?