Elon Musk ட்விட்டர்
உலகம்

Elon Musk : நிருபர்களின் ட்விட்டர் கணக்குகளை முடக்கிய நிறுவனம் - என்ன காரணம்?

அதன் பிறகு, நிறுவனத்தில் நிறைய மாற்றங்களை அமல்படுத்தினார் மஸ்க். ஊழியர்கள் பணி நீக்கம், வழக்கத்தை விட அதிக நேரம் பணியாற்றுவது, காரணமின்றி பணி நீக்கம் செய்வது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

Keerthanaa R

எலான் மஸ்க் மற்றும் ட்விட்டர் பற்றிய செய்திகளை வெளியிடும் நிருபர்களின் ட்விட்டர் கணக்குகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது.

நியூயார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட் உள்ளிட்ட முன்னணி பத்திரிகை நிறுவனங்களின் ஊடகவியலாளர்களின் கணக்குகள் இதில் அடக்கம்.

ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா, நியூராலின்க் உள்ளிட்ட நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை கடந்த அக்டோபர் மாதம் தனக்கு சொந்தமாக்கினார்.

அதன் பிறகு, நிறுவனத்தில் நிறைய மாற்றங்களை அமல்படுத்தினார் மஸ்க்.

ஊழியர்கள் பணி நீக்கம், வழக்கத்தை விட அதிக நேரம் பணியாற்றுவது, காரணமின்றி பணி நீக்கம் செய்வது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதனால் மஸ்க் மீது விமர்சனக்கள் எழுந்தது. அதை பற்றி கண்டுகொள்ளாமல் மஸ்க் அவரது வேலைகளை செய்துகொண்டு தான் இருக்கிறார்.

இந்நிலையில், சில பத்திரிக்கையாளர்களின் கணக்குகளை கடந்த வியாழன் அன்று முடக்கியுள்ளது ட்விட்டர் நிறுவனம்.

தன்னைப்பற்றி, தன் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி, ட்விட்டரை பற்றி பத்திரிகைகளில் எழுதும் நிருபர்களின் கணக்குகளை சஸ்பெண்ட் செய்துள்ளது நிறுவனம்.

மஸ்க்கின் புதிய கொள்கைகள், அவர் அமல்படுத்திய கடும் நடவடிக்கைகள் பற்றிய விமர்சனங்களை எழுதியவர்களின் கணக்குகள் தான் இவை.

இதற்கான விளக்கம் எதுவும் மஸ்க்கின் தரப்பிலிருந்தோ, ட்விட்டரின் தரப்பிலிருந்தோ இதுவரை வழங்கப்படவில்லை.

மேலும் கடந்த புதன்கிழமையன்று மஸ்க்கின் பிரைவெட் ஜெட்களின் போக்குவரத்தை தனிச்சையாக டிராக் செய்த ட்விட்டர் கணக்கு ஒன்றும் நிரந்தரமாக தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?