அமெரிக்க இரட்டை கோபுரம் மீதான 9/11 தாக்குதலை எவரும் மறக்க முடியாது. 2001ஆம் ஆண்டு நடந்த அச்சம்பவம், அரசாங்கங்களின் மீது தீவிரவாதிகள் நடத்திய மிகப்பெரிய தாக்குதல் என்பதிலும் எவரும் முரண்பட முடியாது.
அந்த நிகழ்வைத் தொடர்ந்து அமெரிக்கா, தீவிரவாதிகள் மீதான தாக்குதலை அதிகரித்தது, சொல்லப் போனால் உலகம் முழுக்க ஒன்றிணைத்தது. அதில் பல அப்பாவிகள் தங்கள் வாழ்கையை இழந்தனர் என்றால் அது மிகையல்ல.
அப்படி அமெரிக்காவின் கடும் நடவடிக்கைகள் காரணமாக அப்துல் ரப்பானி, அஹ்மத் ரப்பானி என்கிற பாகிஸ்தானைச் சேர்ந்த சகோதரர்கள் தங்கள் வாழ்வில் 20 ஆண்டு காலத்தை அமெரிக்க சிறையில் இழந்தனர்.
இவர்கள் கைது செய்யப்பட்டு, சி ஐ ஏ உளவு அமைப்பினரால் கடுமையான சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர். அதன் பிறகே குவாண்டனாமோ பே ராணுவ சிறைக்கு மாற்றப்பட்டனர்.
இப்போது அந்த இருவருர் மீது எந்த வழக்குகளும் இல்லாமல் அமெரிக்க அரசாங்கத்தால் விடுவிக்கப்பட்டு பாகிஸ்தான் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
அப்துல் ரப்பானி & அஹ்மத் ரப்பானி பாகிஸ்தானிய ரகசிய பாதுகாப்புப் படையால் கராச்சியில் வைத்து செப் 2002ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். அப்துல் ரப்பானி அல் கொய்தா அமைப்பைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்பாகத் தங்குவதற்கான இடத்தை இயக்கி வந்ததாகவும், அவருடைய சகோதரர் அஹ்மத் ரப்பானி அல் கொய்தா துருப்புகள் பயணம் மேற்கொள்வதற்கும், அக்குழுவிற்கு நிதி ரீதியிலான உதவிகளைச் செய்ததாகவும் அமெரிக்க பென்டகன் கூறியது.
முதலில் ஆஃப்கானிஸ்தானில் இருக்கும் சி ஐ ஏவின் தடுப்புக் காவல் மையத்தில் தான் இந்தச் சகோதரர்கள் வைக்கப்பட்டிருந்தனர். அந்த காலகட்டத்தில் தான் சி ஐ ஏ உலவு ஏஜெண்ட்களால் கொடுமைப்படுத்தப்பட்டதாக ரப்பானி ssசகோதரர்கள் குற்றம்சாட்டுகின்றனர். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டு காலத்துக்குப் பிறகு தான் குவாண்டனாமோ பே ராணுவ சிறைக்கு இவர்கள், மாற்றப்பட்டனர்.
கடந்த 2013ஆம் ஆண்டிலிருந்து அஹ்மத் ரப்பானி, தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு, மிகக் கடுமையாக தன் எதிர்ப்பை பதிவு செய்யும் நோக்கில் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். அவருக்குக் கட்டாயப்படுத்தப்பட்டு குழாய் வழியாக உணவு வழங்கப்பட்டது என்பதும் இங்குக் குறிப்பிடத்தக்கது.
அப்துல் ரப்பானி மற்றும் அஹ்மத் ரப்பானி ஆகிய இருவரையும் விடுவிக்க, அமெரிக்க அரசு தரப்பிலிருந்து 2021ஆம் ஆண்டே அனுமதி கொடுக்கப்பட்டது. இருப்பினும் அப்போது அவர்கள் உடனடியாக விடுவிக்கப்படாததற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை.
அஹ்மத் ரப்பானி கைது செய்யப்பட்ட போது, அவருடைய மனைவி கர்பமாக இருந்ததாகவும், அப்பெண்மணி ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த பிறகு, இதுவரை அஹ்மத் தப்பானி தன் மகனைப் பார்க்கவில்லை என்பது சோகமான விஷயம்.
குழந்தைப் பருவத்தில் தன் தந்தையைப் (அஹ்மத் ரப்பானி) பார்க்காமல், ஒரு முறை கூட அவரது ஸ்பரிசத்தை உணராத ஜவாத் (Jawad) இன்று சுமார் 20 வயது இளைஞராக வளர்ந்திருப்பதாகவும் பிபிசி வலைதளம் குறிப்பிட்டுள்ளது.
அஹ்மத் ரப்பானி ஒரு நல்ல ஓவியரும் கூட. அவர் வரைந்த ஓவியங்கள் விரைவில் கராச்சியில் கண்காட்சிக்கு வைக்கப்பட இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. அவர் வரைந்த ஓவியங்களைக் கீழே கொடுத்திருக்கும் இணைப்பைச் சொடுக்கிப் பார்க்கலாம். அஹ்மத் ரப்பானி ஓவியங்கள்: https://www.artfromguantanamo.com/ahmed-rabbani-1
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust