விண்வெளி என்ற சொல்லே வியப்பாக இருக்கும். அங்கு செல்வது, அது பற்றி தெரிந்துகொள்வது என அதற்கெல்லாம் ஆர்வமாக இருப்போம்.
அந்த வகையில் விண்வெளியில் இருந்து இமயமலையின் பிரம்மிப்பூட்டும் படங்களை ஐக்கிய அமீரக விண்வெளி ஒருவர் வெளியிட்டிருந்தார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தைச் சார்ந்த விண்வெளி வீரர்களில் ஒருவரான சுல்தான் அல் நையாதி, தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ளார்.
தனது விண்வெளி பயணத்தை 6 மாத காலத்திற்கு திட்டமிட்டு விண்வெளியில் இருந்துவருகிறார். அவ்வபோது பூமியின் நிலப்பரப்பு உள்ளிட்ட படங்களை வெளியிட்டு வந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி விண்வெளியில் இருந்து இமயமலையின் பனி மூடிய அழகாக காட்சியளிக்கும் படங்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
இந்த படங்கள் நெட்டிசன்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
இந்த படங்களை பகிர்ந்த சுல்தான் அல் நையாதி கூறியதாவது
“விண்வெளியில் இருந்து இமயமலையின் தோற்றம் இது. கடல் மட்டத்திலிருந்து மிக உயரமான இடமான எவரெஸ்ட் சிகரத்தின் தாயகம்தான் இமயமலை. நமது கிரகத்தில் இந்த மலைகள் இயற்கையின் அடையாளங்களில் ஒன்றாக காட்சியளிக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜூன் 15ம் தேதி வட மாநிலங்கள் முழுக்க பிபர்ஜாய் புயல் கொடூர தாண்டவமாடிய நிலையில் சுல்தான் அல் நையாதி விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp