உக்ரைன் போர் Twitter
உலகம்

உக்ரைன் : "பாலியல் வன்கொடுமையை ரஷ்ய வீரர்கள் போர் ஆயுதமாக பயன்படுத்துகின்றனர்"

Antony Ajay R

உக்ரைனில் நுழைந்து தாக்குதல் நடத்தும் ரஷ்யப் படையினர் அந்நாட்டுப் பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்குவதாக ஐநா -வில் உக்ரைன் தெரிவித்திருக்கிறது.

ஐநா பாதுகாப்பு கூட்டத்தில் உக்ரைன் மனித உரிமைகள் ஆணைய தலைவர் Kateryna Cherepakha, உக்ரைனில் ரஷ்ய வீரர்களால் பொது மக்கள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாவது குறித்த செய்திகள் அதிகரித்திருக்கின்றன. எங்கள் அவசர எண்ணிற்கு 9க்கும் மேலான குற்றச் சம்பவங்கள் குறித்து புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. இதில் 12 பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதிக்கப்பட்டனர்.

“இது உண்மையில் நிகழ்ந்த சம்பவங்களில் மிகக் குறைந்த எண்ணிக்கையே. பாலியல் வன்முறை மற்றும் வன்கொடுமையை போர் ஆயுதங்களாக ரஷ்யப் படையினர் உபயோகிப்பதை நாங்கள் பார்க்கிறோம். எங்கள் குரலை நீங்கள் கேட்க வேண்டும் எனப் பாதுகாப்பு கவுன்சிலில் வீடியோ மூலம் கூறினார்.

ஐநா பாதுகாப்பு கவுன்சில்


கடந்த வாரம் ஐநா சபை, ஐநா மனித உரிமைகள் ஆணையம் ரஷ்யப் படையினரின் பாலியல் வன்முறை, கூட்டுப் பாலியல் வன்கொடுமை, குழந்தைகள் முன்னிலையில் பாலியல் வன்கொடுமை குற்றங்கள் கண்காணிக்க முயல்வதாகக் கூறியிருந்தது. அத்துடன் உக்ரைன் இராணுவம் மற்றும் பாதுகாப்புப் படையினரும் பாலியல் வன்முறையில் ஈடுபடுவதாகக் கூறியிருந்தது.

உக்ரைன் படைகள் மீதான குற்றச்சாட்டுக்கு உக்ரைன் - ஐநா தூதரகம் உடனடியாக பதிலளிக்கவில்லை.

ஏற்கெனவே பலமுறை ரஷ்ய இராணுவம் மீது உக்ரைன் பாலியல் வன்கொடுமை , குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதாகக் குற்றச்சாட்டு வைத்தது.

ஆனால் பிப்ரவரி 24ம் தேதி முதல் இன்று வரை உக்ரைன் மக்களை ரஷ்ய இராணுவம் எந்த விதத்திலும் துன்புறுத்தவில்லை என ரஷ்யா ஐநா சபையில் கூறிவருகிறது.

ரஷ்யாவின் ஐநா இணை தூதர் மிட்ரி பொலன்ஸ்கி (Dmitry Polyanskiy), “நாங்கள் பல முறை கூறிவிட்டோம் ரஷ்யா உக்ரைன் மீது படை எடுத்தது முதல் உக்ரைன் குடிமக்களை ஒருபோதும் தாக்கவில்லை. ரஷ்யப் படையினரை சடிஸ்ட்களாகவும் பாலியல் குற்றவாளிகளாகவும் சித்தரிக்க இவ்வித குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன.” எனப் பேசினார்.

ஐ.நா.வின் பெண்கள் நிர்வாக இயக்குநர் சிமா பஹோஸ், பாலியல் குற்றங்களின் மீது சுதந்திரமான விசாரணை வேண்டும் எனக் கூறியுள்ளார்.

ரஷ்ய இராணுவத்தினர் போரைப் பயன்படுத்திக் கொள்ளையடிப்பதாகவும் 10 வயதுக் குழந்தைகள் வரை பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்குவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன. ரஷ்ய இராணுவம் வெறியாட்டம் நடத்தியதாகக் கூறப்பட்ட புச்சா நகரில் 15 முதல் 24 வயது பெண்களைக் குறிவைத்து ரஷ்ய இராணுவத்தினர் பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தியதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?