Ukraine 

 

NewsSense 

உலகம்

உக்ரைன் ரசியா போர் : நம்மை எப்படி பாதிக்கும் ? | உக்ரைன் மினி தொடர் - பகுதி 1

இந்தப் பிரச்சினை காரணமா பிரிட்டனில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 150 ரூபாயை தொட்டிருக்கிறது. இந்த விலை உயர்வு இன்னும் அதிகரிக்கும் என்று கூறுகிறார்கள். இது கார் ஓட்டுநர்களுக்கு மோசமான செய்தியாகும்.

Govind

உக்ரைன் - ரசிய பதட்டம் காரணமாக கச்சா எண்ணெய் விநியோகம் தடங்கலின்றி தொடருமா என்ற பயத்தில் உலகெங்கும் எண்ணெய் விலை செவ்வாய்க்கிழமை அன்று உயர்ந்திருக்கிறது.

கிழக்கு உக்ரைனில் ரசிய படைகள் நுழைந்து விட்டன. அதை அடுத்து கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 99 டாலராக உயர்ந்திருக்கிறது. இருப்பினும் மேற்கத்திய நாடுகள் ரசியா மீது பொருளாதாரத் தடை விதித்தும், ரசிய இயற்கை எரிவாயு குழாயை நிறுத்தியதும் காரணமாக எண்ணெய் விலை சற்று மிதமானது. ஆனால் இது நிரந்தரமில்லை.

இந்தப் போர் பிரச்சினையை ஒட்டி பங்கு சந்தைகளும் இழப்பைச் சந்தித்தன. செவ்வாயன்று அமெரிக்காவின் வால்ஸ்ட்ரீட், ஜப்பான், ஷாங்காய் போன்ற பங்குச்சந்தைகள் சற்றே இறக்கம் கண்டன. உக்ரேன் போர் காரணமாக நடக்கும் பொருளாதாரப் பிரச்சினைகளை சரி செய்யும் விதத்தில் மேற்கத்திய நாடுகள் கவனமாக இருக்கின்றன என்று பங்கு சந்தை முதலீட்டாளர்கள் கூறுகின்றனர். ஆனால் நிலைமை இப்படியே சீராக இருக்குமா, திடீர் பாதிப்பு ஏற்படுத்துமா என்பது இனிமேல்தான் தெரியும்.

Saudi

ரசியா ஏற்படுத்தும் எண்ணெய் பிரச்சினை

சவுதி அரேபியாவிற்கு அடுத்து கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் உலகின் இரண்டாவது பெரிய நாடாக ரசியா இருக்கிறது. அதே போன்று இயற்கை எரிவாயுவை உற்பத்தி செய்வதில் ரசியாதான் முதலிடத்தில் இருக்கிறது.

இப்போது ரசியாவிலிருந்து வரும் இயற்கை எரிவாயுக் குழாயை நிறுத்துவதினாலும், அல்லது குறைந்த அளவுக்கு வாங்கினாலும் அது உலக அளவில் பாதிப்பை ஏற்படுத்தலாம். எண்ணெய் விலையேற்றம் உலக பொருளாதாரத்தை கண்டிப்பாக பாதிக்கும் என்று பொருளியல் அறிஞர்கள் கூறுகிறார்கள்.

இந்தப் பிரச்சினை காரணமா பிரிட்டனில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 150 ரூபாயை தொட்டிருக்கிறது. இந்த விலை உயர்வு இன்னும் அதிகரிக்கும் என்று கூறுகிறார்கள். இது கார் ஓட்டுநர்களுக்கு மோசமான செய்தியாகும். இந்தியாவில் ஐந்து மாநில தேர்தல் காரணமாக பெட்ரோல் - டீசல் விலை உயரவில்லை. ஆனால் உக்ரேன் போரின் பொருட்டு பாஜக அரசு கண்டிப்பாக விலையை உயர்த்தும். அது நாம் சமாளிக்க முடியாத விலையில் கூட இருக்கலாம்.

இதை தடுப்பதற்கு மேற்கத்திய நாடுகள் பொருளாதாரத் தடைகளை அதிகம் ரசியா மீது அமல்படுத்தி வருகின்றன. ரசியாவின் நிதி நிறுவனங்கள், பணக்காரர்கள், ரசிய அரசு நிறுவனங்கள் அனைத்தும் மேற்கத்திய நிதிச் சந்தையில் பங்கேற்பது வரையறுக்கப்பட்டிருக்கிறது அல்லது தடுக்கப்பட்டிருக்கிறது. ஜெர்மனி அதிபர் இயற்கை எரிவாயு ரசியாவிலிருந்து குழாய் மூலம் வருவதை தடை செய்திருக்கிறார்.

NATO

நேட்டோ படை

ரசியா உக்ரைன் மீது மேலும் ஆக்கிரமித்தால் நாங்களும் அதை எதிர்கொள்ளும் நிலையில் மேலே போவோம் என்று அமெரிக்க அதிபர் பிடன் எச்சரித்திருக்கிறார். நேட்டோ அமைப்பை பாதுக்காக்கும் செயலானது எண்ணெய் விலை உயர்வை ஏற்படுத்தி மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தம் என கூறியிருக்கிறார். அப்படி நேட்டோ அமைப்பை உக்ரைன் வரை கொண்டு சென்று பாதுகாக்க வேண்டிய அவசியம் என்ன என்பது நம் கேள்வி. நேட்டோ அமைப்பில் உக்ரேனைச் சேர்க்க மாட்டோம் என அமெரிக்கா கூறினால் இந்தப் பிரச்சினையே வந்திருக்காது.

உக்ரைன் பதட்டம் காரணமாக எண்ணெய் விலையானது பிப்ரவரி ஆரம்பத்தில் இருந்தே 10 சதவீதம் உயர்ந்திருக்கிறது. கச்சா எண்ணையின் ஒரு பீப்பாய் விலை 100 டாலரைத் தொட்டால் அது உலகம் முழுவதும் தட்டுப்பாட்டையும், விலை உயர்வையும் ஏற்படுத்தும். உலகில் தயாரிக்கப்படும் கச்சா எண்ணெயின் பத்தில் ஒரு பங்கு ரசியாவால் உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே எண்ணெய் விலை என்று வரும் போது அதில் ரசியாவின் பங்கும் முக்கியமானது.

பெட்ரோல் பங்குகளில் இனி நாம் செலுத்த இருக்கும் அதிக கட்டணம் இந்தப் போரால் என்பது வெள்ளிடை மலை. ஆனால் அதன் சுமையை மக்களாகிய நாம்தான் சுமக்க வேண்டும்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?