உக்ரைன் : மூன்றாம் உலகப் போர் ஏற்படலாம்; சீனாவை எச்சரித்த செலென்ஸ்கி - என்ன நடக்கிறது? Twitter
உலகம்

உக்ரைன் : மூன்றாம் உலகப் போர் ஏற்படலாம்; சீனாவை எச்சரித்த செலென்ஸ்கி - என்ன நடக்கிறது?

Antony Ajay R

உக்ரைன் அதிபர் விளாதிமிர் செலென்ஸ்கி, ஒருவேளை சீனா இந்த போரில் ரஷ்யாவுடன் கைக்கோர்த்தால் மூன்றாம் உலகப் போர் ஏற்படும் சூழல் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜெர்மன் பத்திரிகைக்கு பேட்டி அளிக்கும் போது இந்த கருத்தை அவர் தெரிவித்தார். ரஷ்ய தலைவர் புதினிடம் இருந்து சீனா விலகி இருக்க வேண்டும் எனக் கூறியவர், "சொல்லப்போனால் சீனா எங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என நாங்கள் எண்ணுகிறோம்" எனப் பேசினார்.

அத்துடன் ரஷ்யாவின் கூட்டாளியான சீனாவின் தலைவர் ஷி ஜின்பிங், அண்டை நாட்டின் மீது கொடூரமான தாக்குதலை நிகழ்த்தும் ரஷ்யாவுக்கு உதவுவது எத்தனை மோசமானது என்பதை உணர்ந்திருப்பார். எனவே உலகப் போர் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு தான் எனவும் கூறியுள்ளார்.

புதின் உக்ரைன் மீதான போரை அறிவிப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் சீனாவில் குளிர்கால ஒலிம்பிக்-காக சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

உக்ரைனில் பைடன்

இதற்கு இடையில் அமெரிக்க அதிபர் பைடன் உக்ரைனுக்கு திடீர் பயணம் மேற்கொண்டுள்ளார்.

ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற இடங்களில் போர் நடைபெற்ற போதும் அமெரிக்க அதிபர்கள் சென்றிருந்தாலும், அதிகபட்ச இராணுவப் பாதுகாப்புடனே அவர்களின் பயணம் அமைந்திருந்தது.

ஆனால் திடீரென உக்ரைனுக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஜோ பைடனின் நடவடிக்கையை மிகவும் துணிச்சலானது என புகழ்ந்துவருகின்றனர்.

கீவ் தன்னுடைய இதயத்தின் ஒரு பகுதியை சொந்தமாக்கிக் கொண்டது என ட்விட்டரில் பதிவிட்ட பைடன், "500 மில்லியன் டாலர்கள் உக்ரைனுக்கு உதவுவதற்காக வழங்கப்படும். ரஷ்யாவுக்கு துணை நிற்க நினைக்கும் நிறுவனங்கள் மீது கூடுதல் தடைகள் விதிக்கப்படும்" எனவும் பைடன் கூறியுள்ளார் "

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?