Underwater Mailboxes Around The World Twitter
உலகம்

உலகெங்கிலும் நீருக்கடியில் இருக்கும் Mailboxes - ஆச்சரியமூட்டும் தகவல்கள்

நீருக்கடியில் ஹோட்டல், உணவகம் இருப்பது எல்லாம் நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் நீருக்கடியில் இருக்கும் அஞ்சல் பெட்டிகள் குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அவை எங்கு உள்ளது, என்பது குறித்து இங்கே தெரிந்துக் கொள்வோம்.

Priyadharshini R

உலகமே அதிசயங்களாலும், மர்மங்களாலும் சூழப்பட்டுள்ளது. நம்மளுக்கு தெரிந்து சில, தெரியாமல் பல உள்ளன. தனி கண்டம், மனித காலடிப்படாத குகைகள் என பல விசித்திரமான விஷயங்களை இந்த அண்டம் கொண்டுள்ளது.

இவற்றை தவிர தலைகீழ் வீடுகள்,நீருக்கடியில் உணவகம், விமானத்தில் உணவகம் என நவீன உலகிற்கேற்ப பல்வேறு விஷயங்களை கொண்டு வந்து நம்மை ஆச்சரியப்படுத்தி வருகின்றனர்.

நீருக்கடியில் ஹோட்டல், உணவகம் இருப்பது எல்லாம் நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் நீருக்கடியில் இருக்கும் அஞ்சல் பெட்டிகள் குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அவை எங்கு உள்ளது, எதற்காக கட்டப்படுள்ளது என்பது குறித்து இங்கே தெரிந்துக் கொள்வோம்.

Hideaway Island, Vanuatu

வனுவாட்டு என்ற தீவு நாட்டில் ஹைட்வே என்ற தீவு கடற்கரை உள்ளது. இந்த கடற்கரையின் நீருக்கடியில் உள்ள தபால் அலுவலகம் உலகின் மிகவும் பிரபலமான ஒன்றாகும்.

இது 2003 இல் நிறுவப்பட்டது, 3 மீட்டர் நீரில் அமைந்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் அனுமதி பெற்று, நீரில் மூழ்கிய, அந்த அஞ்சல் பெட்டியை கண்டு ரசிக்கலாம்.

ஒரு குறிப்பிட்ட நேரத்தில், ஸ்கூபா அணிந்து தபால் ஊழியர், நீருக்கடியில் சென்று தபால் பெட்டியில் இருந்து அஞ்சல் அட்டைகளை மீட்டு, நீருக்கடியில் இருக்கும்போதே முத்திரையிட்டு, அவர்களை வழியனுப்புகிறார்.

மைக்கு பதிலாக, வாட்டர் புரூஃப் வசதியுடன் கூடிய ஒன்றை அஞ்சல் அட்டைகளை முத்திரையிட பயன்படுத்துகின்றனர்.

Susami Bay, Japan

ஜப்பானின் வகயாமா மாகாணத்தில் உள்ள சிறிய மீன்பிடி நகரமான சுசாமி, உலகின் முதல் நீருக்கடியில் அஞ்சல் பெட்டியை உருவாக்கிய பெருமையைப் பெற்றுள்ளது.

மலேசியாவில் நீருக்கடியில் மற்றொரு அஞ்சல் பெட்டி உருவாக்கப்படும் வரை, சுசாமி அஞ்சல் பெட்டி 10 மீட்டர் ஆழத்தில் உலகின் ஆழமான நீருக்கடியில் அஞ்சல் பெட்டியாக இருந்தது.

வகயாமாவின் தெற்குப் பகுதியைச் சுற்றியுள்ள இடங்களை மேம்படுத்துவதற்காக 1999 ஆம் ஆண்டில் நடத்திய கண்காட்சியின் ஒரு பகுதியாக அஞ்சல் பெட்டி உருவாக்கப்பட்டது.

அஞ்சல் பெட்டிக்கு முன், சுசாமி அவ்வளவாக யாரும் விரும்பக் கூடிய இடமாக இல்லை, தற்போது உலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ளது.

நகரத்தின் அப்போதைய போஸ்ட் மாஸ்டராக இருந்த தோஷிஹிகோ மாட்சுமோட்டோ, கடலுக்கடியில் தபால் பெட்டியின் யோசனையை முன்வைத்தார்.

Pulau Layang-Layang, Malaysia

2015 ஆம் ஆண்டில் லாயாங்-லயாங்கில் கடல் மட்டத்திற்கு கீழே 40 மீட்டர் ஆழத்தில் தபால் பெட்டியை அறிமுகப்படுத்தி மலேசிய தபால் துறை சாதனைகளை படைத்தது.

நீருக்கடியில் அஞ்சல் பெட்டியில் இருந்து அனுப்பப்படும் அஞ்சல் அட்டைகள் நீர்ப்புகா பிளாஸ்டிக் பைகளில் ஒரு சிறப்பு அஞ்சல் முத்திரை மற்றும் மலேசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் லோகோவுடன் சீல் வைக்கப்பட்டு அனுப்பப்படுகிறது.

Risor, Norway

தெற்கு நோர்வே கடற்கரையில் உள்ள ரிசர் நகரில் அமைந்துள்ளது இந்த தபால் அலுவலகம்.

இது உலகின் ஒரே உலர்ந்த நீருக்கடியில் தபால் அலுவலகம் ஆகும். தபால் நிலையம் 4 மீட்டர் ஆழத்தில் ஒரு தூணுக்கு அடுத்ததாக அமைந்துள்ளது.

பார்வையாளர்கள் தங்கள் அஞ்சலை தபால் பெட்டியில் அனுப்புகிறார்கள், பின்னர் அவை தண்ணீர் புகாத பையில் அடைக்கப்பட்டு நீருக்கடியில் உள்ள தபால் நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன.

Bahamas

பஹாமாஸின் "சீ ஃப்ளோர்" தபால் அலுவலகம் இப்போது இல்லை, ஆனால் இது 1939 இல் உருவாக்கப்பட்ட உலகின் முதல் நீருக்கடியில் தபால் அலுவலகம் இதுவாகும்.

கடலுக்கடியில் புகைப்படக்கலையின் முன்னோடிகளில் ஒருவராக அங்கீகரிக்கப்பட்ட அமெரிக்க புகைப்படக் கலைஞர் ஜான் எர்னஸ்ட் வில்லியம்சன் (1881-1966) என்பவரால் உருவாக்கப்பட்டது.

1939 ஆம் ஆண்டில், நீருக்கடியில் படமெடுக்க வில்லியம்சன் கடலுக்கடியில் பயணம் மேற்கொண்டார்.

இந்த பயணத்தைப் பற்றி விளம்பரம் செய்ய, கடல் தள அஞ்சல் அலுவலகம் உருவாக்கப்பட்டது. தபால் அலுவலகம் குறுகிய காலமே இருந்தது; அது 1941 இல் மூடப்பட்டது.

1965 ஆம் ஆண்டில், பஹாமாஸ் அஞ்சல் துறையானது கடல் தள அஞ்சல் அலுவலகத்தை நினைவுகூரும் வகையில் முத்திரைகளின் தொகுப்பை வெளியிட்டது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?