Representation image

 

Pexels

உலகம்

பாலியல் தொழில் செய்து பிழைக்கும் மாணவிகள் : அவலச் செய்தி - என்ன, எங்கே நடக்கிறது?

பாலியல் தொழிலுக்காக இலவச வெளிநாட்டு விமான பயணங்களோடு நூற்றுக்கணக்கான பவுண்டுகளும் (இங்கிலாந்தின் செலவாணி) கிடைப்பதாக இரண்டு டர்ஹாம் பல்கலை மாணவர்கள் தெரிவித்திருக்கின்றர்.

Govind

பல்கலையில் படிக்கச் செல்லம் மாணவர்கள் பகுதி நேரமாக பணியாற்றி வருவாய் ஈட்டுவது மேற்கத்திய நாடுகளில் வழக்கம். ஆனால் இங்கிலாந்தில் சில மாணவர்கள் அந்த பகுதி நேர தொழிலை பாலியல் தொழிலின் மூலம் சட்டப்பூர்வமாகச் செய்வது மேற்கத்திய நாடுகளுக்கு ஒரு களங்கம்.

பாலியல் தொழிலுக்காக இலவச வெளிநாட்டு விமான பயணங்களோடு நூற்றுக்கணக்கான பவுண்டுகளும் (இங்கிலாந்தின் செலவாணி) கிடைப்பதாக இரண்டு டர்ஹாம் பல்கலை மாணவர்கள் தெரிவித்திருக்கின்றர்.

Representation image

பாலியல் தொழில் பயிற்சி

20 வயது அன்னா (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) ஒரு மாதத்தில் 80,000 ரூபாய் ஈட்டுகிறாள். 22 வயது ஜேம்ஸ் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) இதற்காக உலகம் முழுவதிலுமுள்ள நகரங்களுக்கு செல்வதாகக் கூறுகிறான்.

டர்ஹாம் மாணவர்கள் சங்கம் பாலியல் தொழிலில் பணியாற்றுபவர்களுக்கு பயிற்சியை வழங்குகிறது. அதை டர்ஹாம் பல்கலை நிர்வாகம் ஆதரித்தது.

“நான் என்ன செய்யப் போகிறேன் என்று பயந்திருந்த போது இந்த பயிற்சி உதவியாக இருந்தது" என்று அன்னா கூறுகிறாள். அவள் தனது வயதிற்குட்பட்ட பிற பாலியல் தொழிலாளிர்களின் ஆதரவு வலையமைப்பின் தொடர்பிலும் இருக்கிறாள். ஆனால் இந்த வலையமைப்பில் இருக்கும் பலரும் தனிமைப்படுத்தப் பட்டதாகவம், தானே சில சமயம் அச்சுறுத்தப்பட்டதாகவம் அன்னா கூறுகிறாள்.

பாலியல் தொழிலின் வாடிக்கையாளர்கள் உண்மையிலேயே பயமுறுத்தும் நபர்களாக இருக்கலாம். இத்தகைய நபர்கள் இருக்கும் சூழல் நம்மை அச்சுறுத்தும் என்றும் அன்னா கூறுகிறாள். அதை எதிர்கொள்வதற்கு மாணவர் சங்கத்தின் பயற்சி உதவியளிக்கிறது.

ஆனால் ஜேம்ஸ்க்கு இது பிரச்சினை இல்லை. அவன் மாணவர் சங்கம் செய்யும் உதவிகள் குறித்து அலட்டிக் கொள்வதில்லை. பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள் சொல்லும் டிப்ஸ்கள் தாண்டி மற்றவரின் ஆலோசனைகள் தனக்குத் தேவையில்லை என்கிறான்.

இந்த தொழிலுக்காக ஜேம்ஸ் மெனக்கெட்டு முயற்சிகள் செய்வதில்லை. ஆண் ஓரினச்சேர்க்கையாளர் டேட்டிங் சைட்டுகளில் சேர்ந்தாலே வாய்ப்புகள் கிடைக்கின்றன. சிலர் செய்தி அனுப்புவதோடு உடலுறவுக்கு பணமும் வழங்குவார்கள்.

Representation Image

ஏன் இதை செய்கிறீர்கள்?

பல்கலையில் படிக்கும் ஜேம்ஸ் ஏன் இதைச் செய்கிறான்? பணம், விலை உயர்ந்த உணவங்களில் உணவு சாப்பிடுவது, வெளிநாடுகளில் விடுமுறைகளைக் கழிப்பது போன்றவை. ஒரு முறை அவன் அமெரிக்காவில் உள்ள ஒரு நகரத்திற்கே விபச்சாரத்தின் பொருட்டு சென்று வந்துள்ளான்.

இதை ஒரு த்ரில்லுக்காகவும், தன்னை ஊக்கப்படுத்திக் கொள்ளவும் செய்தேன் என்கிறான் ஜேம்ஸ்.

இப்போது தனது காதலனைச் சந்தித்த பிறகு பாலியல் தொழிலை விட்டுவிட்டதாக அன்னா கூறுகிறாள். அதற்கு முன் அவள் பரிசுகளுக்காகவும், பணத்திற்காகவம் டேட்டிங் இணையதளத்தில் பணியாற்றிருக்கிறாள். இதில் நட்பும் உண்டு. உடலுறவும் உண்டு.

இந்த டேட்டிங் இணைய தளங்களில் உரையாடல், செக்ஸ் சாட்டிங், அரை முழு நிர்வாண புகைப்படங்கள் அனுப்புவது போன்றவற்றிற்காக அவள் பணம் பெறுவாள். மேற்கத்திய நாடுகள், பல வயது வந்தோர் இப்படி படங்கள் அனுப்புவதை குற்றமாக கருதுவதில்லை. பல நாடுகளில் 18 வயதுக்கும் குறைவானோர் படங்களை அனுப்புவதுதான் குற்றம்.

இந்த டேட்டிங் இணைய தளங்களில் பணியாற்றிய போது ஒவ்வொரு நாளும் வேலை செய்ய வேண்டும். அதுவும் நாள் முழுவதும் பணியாற்ற வேண்டும். அப்போதுதான் தன்னை ஒரு பிராண்டாக, பிரபலமாக அங்கே நிலை நிறுத்த முடியுமென அன்னா கூறுகிறாள்.

மேலும் அன்னா உள்ளாடைகள், கவர்ச்சியான காலுறைகள் பெண்கள் பயன்படுத்தும் தனிப்பட்ட பொருட்களை விற்கும் இணைய தளங்களிலும் பணியாற்றியிருக்கிறாள்.

Representation image

நாங்கள் ஊக்குவிக்கவில்லை

கல்வித்துறை அமைச்சர் மைக்கேல் டோனலன்,”பெண்களை சுரண்டுவதில் செழித்து வளரும் ஒரு ஆபத்தான தொழிற்துறையை சட்டப்பூர்வமாக்குகிறது" என்று குற்றம் சாட்டியிருக்கிறார். ஆனால் டர்ஹாம் பல்கலைக்கழகம் அதன் மாணவர் சங்கம் அளிக்கும் இத்தகைய பாலியல்தொழில் பயற்சி அமர்வுகளை ஆதரிக்கிறது.

டர்ஹாம் பல்கலைக்கழகம் இதை எப்படி நியாயப்படுத்துகிறது? “நாங்கள் பாலியல் தொழிலை ஊக்குவிக்கவில்லை, ஆனால் இதில் ஈடுபடும் மாணவர்கள் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்கான ஆலோசனைகளை வழங்குகிறோம் என்று கூறுகிறது.

இந்தியாவில் இருந்து வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு செலவு செய்து படிக்கலாம் என்று ஒரு பெரிய தொழிற்துறையே செயல்படுகிறது. இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவுதும் அப்படித்தான். ஆனால் செலவு செய்ய முடியாத பின்னணி கொண்டோர் என்ன செய்வார்கள்? இருப்பினும் இது செலவு பற்றியது மட்டுமல்ல. வெளிநாடுகளில் சாமானியருக்கு கிடைக்காத ஆடம்பர வாழ்க்கையை பாலியல் தொழிலில் ஈடுபடுவோர் அனுபவிக்க முடியும்.

படிக்க வேண்டிய வயதில் பார்ட் டைமாக செக்ஸ் தொழிலாளியாக பணியாற்றுவதும் அதை மாணவர் சங்கமும், பல்கலை நிர்வாகமும் அனுமதிப்பதும் பயிற்சி கொடுப்பதும் என்னவென்று சொல்ல? இது ஏதோ வெளிநாடுகளில் மட்டும் நடக்கவில்லை. இந்தியாவிலும் ஆங்காங்கே நடப்பதாக செய்திகள் வருகின்றன. நமது மாணவச் செல்வங்களை எப்படி காப்பாற்ற போகிறோம் என்பதை அரசும் சமூக ஆர்வலர்களும் தீவிரமாக சிந்திக்க வேண்டிய நேரமிது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?