அமெரிக்க ஆளில்லா விமானத்துடன் ரஷ்ய போர் விமானம் மோதியதால், ஆளில்லா அமெரிக்க விமானம் கருங்கடலில் விழுந்து நொறுங்கியதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் போர் தொடர்பாக ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே நேரடி மோதல் ஏற்படும் அபாயத்தை இந்த சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.
ட்ரோன் சர்வதேச வான்வெளியில் வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்தபோது, இரண்டு ரஷ்ய ஜெட் விமானங்கள் அதை இடைமறிக்க முயன்றதாக அமெரிக்கா கூறுகிறது.
இந்நிலையில் கருங்கடல் மேலே பறந்த அமெரிக்காவின் MQ-9 ஆளில்லா விமானத்தின் மீது ரஷ்யாவின் Su- 27 போர் விமானம் மோதியதில் ஆளில்லா விமானம் விபத்துக்குள்ளானதாக அமெரிக்க ராணுவம் குற்றம்சாட்டி உள்ளது.
MQ-9 ரீப்பர் ட்ரோன் அதன் டிரான்ஸ்பாண்டர்களை அணைத்த நிலையில் பறந்து கொண்டிருந்ததாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டிரான்ஸ்பாண்டர்கள், விமானத்தை கண்காணிக்க அனுமதிக்கும் தகவல் தொடர்பு சாதனங்களாகும்.
2014 இல் கிரிமியாவை ரஷ்யா இணைத்ததில் இருந்து கருங்கடலில் பதற்றம் அதிகரித்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பிற்குப் பிறகு, அமெரிக்காவும் இங்கிலாந்தும் சர்வதேச வான்வெளியில் எப்போதும் இயங்கினாலும், உளவு மற்றும் கண்காணிப்பு விமானங்களை முடுக்கிவிட்டன.
செவ்வாய் கிழமையன்று நடந்த தாக்குதல் அமெரிக்க ஆளில்லா விமானத்தையும் அதன் பணியையும் சீர்குலைக்க ரஷ்யா மேற்கொண்ட முயற்சியா அல்லது அதை வீழ்த்த திட்டமிட்ட முயற்சியா என்பதுதான் முக்கிய கேள்வியாக இருக்கிறது.
கருங்கடலில் அமெரிக்காவின் ரோந்து பணிகளை ரஷ்யா தடுப்பது இது முதல்முறை அல்ல. ஆனாலும் இந்த முறை ரஷ்யா கையாண்ட விதம் தான் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மோதல் வரும் நாட்களில் தீவிரமடையலாம் என்று கூறப்படுகிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust