Uber Canva
உலகம்

Uber: வங்கியை கொள்ளையடிக்க கால் டாக்ஸியில் சென்ற நபர் - எங்கே?

Keerthanaa R

ஊபர் கால் டாக்ஸியில் சென்று வங்கியை கொள்ளையடித்துள்ளார் அமெரிக்கவை சேர்ந்த நபர். கொள்ளையடித்து வரும் வரை காத்திருந்து தன்னை மீண்டும் அழைத்து செல்லுமாறும் அந்த ஓட்டுநரை வற்புருத்தியிருக்கிறார்.

42 வயதாகும் ஜேசன் கிறிஸ்த்மஸ் என்ற நபரை மிச்சிகன் காவல் துறை சந்தேகத்தின் பேரில் சமீபத்தில் கைது செய்தது. கடந்த நவம்பர் 16ஆம் தேதி இவர், ஹண்டிங்டன் வங்கிகையை கொள்ளையடித்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். காவல் துறையினரின் கூற்றுப்படி, ஜேசன் ஊபர் வாடகை காரில் வங்கிக்கு சென்றுள்ளார்.

டாக்ஸி ஓட்டுநரிடம் தான் வரும்வரை காத்திருக்க சொல்லிவிட்டு வங்கியை கொள்ளையடித்து, பின்னர் அதே ஊபரில் திரும்ப சென்றுள்ளார்.

வங்கி கொள்ளையடிக்கப்பட்ட பிறகு மீண்டும் ஜேசனை அவரது வீட்டில் இறக்கிவிட்டு சென்றிருக்கிறார் அந்த ஓட்டுநர். சவுத்ஃபீள்ட் காவல் துறையினர் ஜேசன் கைது செய்யப்படும் வீடியோவை வெளியிட்டிருந்தனர். இந்த காட்சிகள் பாடி கேமில் பதிவாகியிருந்தன.

ஜேசன் மீதும் அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பணத்திலும் சிவப்பு நிறத்தில் இருந்துள்ளது. இதனை பார்த்து காவல் துறை அதிகாரி ஒருவர், ஜேசன் தாக்கப்பட்டாரா என கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதிலளித்த ஜேசன், வங்கி அவரிடம் பணத்தை ஒப்படைக்கும்போதே சிவப்பு நிற டை அதிலிருந்தது என தெரிவித்தார்.

ஜேசனை கைது செய்த போலீசார், அவருக்கு உதவிய டாக்ஸி ஓட்டுநரையும் தேடி பிடித்துள்ளனர். ஆனால், அந்த ஓட்டுநருக்கு இந்த கொள்ளை சம்பவத்தில் சம்பந்தம் இல்லை என தெரியவந்த நிலையில் அவரை கண்டித்து அனுப்பிவைத்துள்ளனர்.

வங்கி கொள்ளையடிக்கப்பட்ட காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில், விடுமுறை காலம் என்பதால் இது நடந்திருக்கலாம் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜேசனின் ஓட்டுநர் உரிமம் ரத்தானதால் தான் அவர் வாடகை காரில் சென்றுள்ளார் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?