உஸ்பெகிஸ்தான்: இது இந்தியர்கள் சுற்றிப்பார்க்க ஏற்ற நாடு - ஏன் தெரியுமா?
உஸ்பெகிஸ்தான்: இது இந்தியர்கள் சுற்றிப்பார்க்க ஏற்ற நாடு - ஏன் தெரியுமா? தலைநகர் தாஷ்கண்ட் / canva
உலகம்

உஸ்பெகிஸ்தான்: இது இந்தியர்கள் சுற்றிப்பார்க்க ஏற்ற நாடு - ஏன் தெரியுமா?

Antony Ajay R

ஆசியாவில் இருக்கக் கூடிய மிகவும் வித்தியாசமான நாடு உஸ்பெகிஸ்தான். கலாச்சார ரீதியாகவும் கட்டிடக்கலை வழியாகவும் சிறப்பு பெற்றது. பழைய சோவியத் யூனியனின் அங்கமாக இருந்த உஸ்பெகிஸ்தானின் மசூதிகள் தனிச்சிறப்பு பெற்றவை.

வரலாற்று சிறப்புமிக்க தலங்களை இன்றைய நவீன வசதிகளுடன் அனுபவிக்க சிறந்த தேர்வாக விளங்கும் நாடு உஸ்பெகிஸ்தான். தாஷ்கண்ட், சமர்கண்ட் மற்றும் புகாரா ஆகிய நகரங்களைக் குறிப்பிட்டு சொல்லலாம்.

இந்தியர்கள் உஸ்பெகிஸ்தானை சுற்றிப்பார்க்க 10 காரணங்களை இந்த பதிவில் பட்டியலிட்டுள்ளோம்.

Samarkhand

இந்திய பயணிகளிடையே கோவிட் 19 தொற்று பரவலுக்கு முன்பு உஸ்பெகிஸ்தான் பிரபலமான நாடாக இருந்தது. ஆண்டுக்கு 28,000 பயணிகள் வரை உஸ்பெகிஸ்தானை பார்த்துள்ளனர்.

அரசியல், பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் கல்வி உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தங்கள், வலுவான இருதரப்பு உறவுகள் இந்திய பயணிகளின் அதிகரிப்புக்கு ஒரு காரணம்.

அதே வேளையில் சுற்றுலாத்துறையை வளர்க்கும் விதமாக இந்தியர்களுக்கான இ-விசா போன்ற வசதிகளை ஏற்படுத்தியது.

bukhara

உஸ்பெகிஸ்தானுக்கு இந்தியாவிலிருந்து விசா கிடைப்பது மிக எளிது. இ-விசா எடுத்துக்கொண்டால் நாம் அங்கு 30 நாள் வரை செலவிடலாம். தூதரத்துக்கு சென்று பாஸ்போர்ட் கொடுத்து காத்திருக்கத் தேவையில்லை.

பொதுவாக வெளிநாடுகளுக்கு பயணம் செல்ல வேண்டுமென்றால் பல விமானங்கள் மாற்றி நம்மை அலக்கழிக்க வைப்பார்கள். ஆனால் உஸ்பெகிஸ்தானுக்கு இந்தியாவின் முக்கிய நகரங்களில் இருந்து நேரடி விமானங்கள் இருக்கிறது.

வாரத்துக்கு 12 விமானங்கள் வரை இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. பயண நேரம் மிகக் குறைவு. ஒரு வார இறுதி இருந்தால் கூட உஸ்பெகிஸ்தானின் வரலாற்று சிறப்புமிக்க ஒரு நகரத்தை சுற்றிப்பார்க்க முடியும்.

kiwa

சமர்கண்ட், புகாரா ஆகியவை இரண்டு, மூன்று நாட்களில் சுற்றிப்பார்க்கக் கூடிய இடங்கள். கிவா மற்றும் தாஷ்கண்ட் நகரங்களை சுற்றிப்பார்க்க 2 நாட்கள் போதுமானவை.

உங்கள் மனக்கண்ணில் உஸ்பெகிஸ்தான் சுற்றுலாவை திட்டமிடுகிறீர்கள் என்றால் மார்ச் முதல் ஏப்ரல் பாதிவரை அல்லது செப்டம்பர் பாதியில் இருந்து நவம்பரின் பாதிவரை செல்லலாம். அக்டோபரில் நவம்பரில் சுற்றுலாப்பயணிகள் அதிகமாக குவிந்திருப்பர் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

சீனாவை ஐரோப்பாவுடன் இணைத்த பட்டுவழிச்சாலை உஸ்பெகிஸ்தான் வழியாக செல்கிறது. இதில் சிறப்புமிக்க ஒரு நகரம் சமர்கண்ட். ரெகிஸ்தான் சதுக்கம், ஷா-இ-ஜிந்தா மற்றும் குர்-இ-அமீர் கல்லறை என கட்டிடக்கலை அதிசயங்களை இங்கு பார்க்கலாம். இந்த நகரில் உலகின் சிறந்த பிரட்களில் ஒன்றை நீங்கள் சுவைக்கலாம்.

உஸ்பெகிஸ்தானின் கட்டிடக்கலை சிறப்பை பறையடித்துக் கூறும் நகரம் புகாரா. இந்த நகரில் 140 கட்டிடக்கலை நினைவுச் சின்னங்களைக் காணலாம். 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போசோரி கோர்ட் ஹம்மாம் புகழ்பெற்றது.

உஸ்பெகிஸ்தானின் தலைநகரம் தாஷ்கெண்ட். நவீன நகரம் வரலாற்று தடையங்களைப் பாதுகாத்துவருவதை இங்கு காணலாம். இது புதுமையான அனுபவத்தைக் கொடுக்கும்.

உஸ்பெகிஸ்தான் உணவுகள் இந்தியர்களும் நிச்சயம் விரும்பி சாப்பிடக் கூடியதாக இருக்கும். புலாவிலிருந்து மண்டி (manti), ஒபி நான்(Obi Non), சம்ஸாஸ் (samsas) என சொல்லிக்கொண்டே போகலாம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

இந்தியாவின் முதல் ‘இலக்கிய நகரமாகும்’ கோழிக்கோடு - இங்கு என்ன பார்க்கலாம்?

நாட்டின் தேசிய இனிப்பு ஜிலேபியா! இந்தியாவிற்கு எப்படி வந்தது தெரியுமா?

உலகில் இருக்கும் மிகவும் விலையுயர்ந்த பொருட்களின் பட்டியல் இதோ!

Kallakurichi: தொடரும் உயிரிழப்புகள்; கண்ணீரில் கள்ளக்குறிச்சி - என்ன நடக்கிறது?

Lonar Lake: திசைகாட்டி வேலை செய்யாத மர்ம இடம்; இந்த ஏரியில் அப்படி என்ன தான் இருக்கிறது?