Ostrich Tribe: பறவை கால்களுடைய அதிசய மனிதர்கள் - இந்த ஜிம்பாப்வே பழங்குடியினரின் கதை என்ன? ட்விட்டர்
உலகம்

Ostrich Tribe: பறவை கால்களுடைய அதிசய மனிதர்கள் - இந்த ஜிம்பாப்வே பழங்குடியினரின் கதை என்ன?

ஜிம்பாப்வேவின் வடக்கு பகுதியில் இருக்கும் கயேம்பா என்ற இடத்தில் வசிக்கின்றனர் வடோமா பழங்குடி மக்கள். இவர்கள் பாரம்பரிய வேடர் மக்கள். சாம்பேசி நதி பள்ளத்தாக்கு பகுதிகளில் மனிதர்களிடம் இருந்து விடுபட்டே இவர்கள் வாழ்கிறார்கள்.

Keerthanaa R

இயற்கையால் படைக்கப்பட்ட ஒரு ஒரு உயிரினமும், மரபியல் ரீதியாகவும், உடலமைப்பின் ரீதியாகவும் மாறுபட்டு இருக்கின்றன.

பறவைகள், விலங்குகள், ஊர்வனங்கள் ஒரு மாதிரியும், மனிதன் ஒரு மாதிரியும் இருக்கிறான்.

ஆனால் இங்கு வாழும் மக்கள், பாதி மனிதனாகவும், பாதி பறவையாகவும் வாழ்ந்து வருகின்றனர்.

எப்படி என்று கேட்டால், அவர்களது உடல் மனிதர்களை போலவும், கால்கள் ஆஸ்டிரிச், அதாவது தீக்கோழி பறவை போலவும் இருக்கின்றன.

இது எப்படி சாத்தியம்? இந்த பதிவில்...

ஜிம்பாப்வேவின் வடக்கு பகுதியில் இருக்கும் கயேம்பா என்ற இடத்தில் வசிக்கின்றனர் வடோமா பழங்குடி மக்கள். இவர்கள் பாரம்பரிய வேடர் மக்கள். சாம்பேசி நதி பள்ளத்தாக்கு பகுதிகளில் மனிதர்களிடம் இருந்து விடுபட்டே இவர்கள் வாழ்கிறார்கள்.

இவர்களை நெருப்புக்கோழி மனிதர்கள், அதாவது Ostrich People என்று அழைக்கின்றனர். இவர்களின் கால்கள் நெருப்புக்கோழிகளின் கால்களை போல இருக்கின்றன. பலரது இரண்டு கால்களிலுமே இரண்டு பெரிய பெரிய விரல்கள் மட்டும் தான் இருக்கிறது.

இதனை அறிவியல் ரீதியாக எக்ரோடாக்டிலி என்று கூறலாம். இந்த வேறுபட்ட பாத அமைப்பை கொண்டுள்ளதால், இவர்களால் மெதுவாக தான் நடக்க இயலும். அதே சமயம் இவர்களால் ஓட இயலாது. ஆனால், இவர்களால் சிறப்பாக மரமேற முடிகிறது

வடோமா மக்கள் இது தங்களின் முன்னோர்களிடம் இருந்து வழிவழியாக வந்த உடல் நிலை என்று கூறுகின்றனர். அவர்களின் மூதாதயர்கள் பறவைகளை போல இருந்தவர்கள் என்று சொல்கின்றனர். இந்த பறவைகள் வானின் நட்சதிரங்களில் இருந்து பூமிக்கு வந்தவை எனவும், பறவையின் மரபணு, மனித பெண்ணின் மரபணுவுடன் கலந்ததால் ஏற்பட்ட டி என் ஏ மாற்றம் இது என்கின்றனர்.

இந்த வடோமா பழங்குடியினர் அனைவருக்குமே இந்த நிலை இல்லை. நான்கில் ஒருவருக்கு பாதங்கள் இப்படி இருக்கின்றன.

இவர்கள் மற்ற மனிதர்கள் வாழும் இடத்தில் இருந்து ஒதுங்கியே வாழ்கின்றனர். இவர்களின் வட்டம் சிறியது. இவர்களின் இனத்துக்கு வெளியே திருமணம் செய்துகொள்ள இவர்களுக்கு அனுமதி இல்லை.

மரபணு பெரிய மாற்றம் காண வழியில்லாமல், தான் இந்த நிலை அவர்களுக்கு மத்தியிலேயே உழன்றுக்கொண்டு இருக்கிறது.

இவர்கள் வேட்டையாடுவது, மீன் பிடித்தல், தேன் சேகரித்தல் போன்ற தொழில்களை வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?