Vatican City to Bulgaria, Countries With No Indian Diaspora Twitter
உலகம்

வாடிகன் முதல் பல்கேரியா வரை - இந்தியர்களே இல்லாத நாடுகள் குறித்து தெரியுமா?

32 மில்லியன் NRIகள் மற்றும் OCIகள் இந்தியாவிற்கு வெளியே வசிக்கின்றனர். ஐநா அறிக்கை 2020 இன் படி, 18 மில்லியன் மக்கள் தங்கள் தாய்நாட்டிற்கு வெளியே வாழ்கின்றனர். ஆனால் இந்தியர்களே இல்லாத சில நாடுகள் இருப்பது குறித்து உங்களுக்கு தெரியுமா?

Priyadharshini R

புலம்பெயர்ந்த இந்தியர்கள் இல்லாத ஒரு நாட்டின் பெயரைக் கூற முடியுமா? இந்தியர்கள் எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள் என்று நீங்கள் நினைக்கலாம்.

வெளியுறவு அமைச்சகம் அறிவிப்பின்படி, 210 நாடுகளில் புலம்பெயர்ந்த இந்தியர்கள் உள்ளனர். அமெரிக்கா, யுனைடெட் கிங்டம், ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, பிரான்ஸ், பிரேசில், தென்னாப்பிரிக்கா, கோஸ்டாரிகா போன்ற அங்கீகரிக்கப்பட்ட 196 நாடுகளில் இந்தியர்கள் உள்ளனர்.

இதில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐ), இந்திய வம்சாவளியினர் (பிஐஓக்கள்) மற்றும் இந்திய வெளிநாட்டு குடிமக்கள் (ஓசிஐ) ஆகியோர் அடங்குவர்.

அரூபா, பெலிஸ், பெனின், பொனெய்ர், கேப் வெர்டே தீவுகள், குராக்கோ, மலாவி, நவுரு மற்றும் சமோவா போன்ற இடங்களில் எல்லாம் இந்திய புலம்பெயர்ந்தோர் இருப்பார்கள் என்று நினைத்து கூட பார்த்திருக்கமாட்டோம்.

ஆனால் இந்த இடங்களிலும் இந்தியர்கள் உள்ளன. 32 மில்லியன் NRIகள் மற்றும் OCIகள் இந்தியாவிற்கு வெளியே வசிக்கின்றனர். ஐநா அறிக்கை 2020 இன் படி, 18 மில்லியன் மக்கள் தங்கள் தாய்நாட்டிற்கு வெளியே வாழ்கின்றனர்.

இது உலகின் மிகப்பெரிய புலம்பெயர்ந்த மக்கள்தொகையாக பார்க்கப்படுகிறது. ஆனால் இந்தியர்களே இல்லாத சில நாடுகள் இருப்பது குறித்து உங்களுக்கு தெரியுமா?

வாட்டிகன்

உலகின் மிகச்சிறிய நாடான வாட்டிகன் ரோம் நகரத்தால் சூழப்பட்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான ரோமன் கத்தோலிக்கர்கள் வாட்டிகன் நகரில் வசிக்கின்றனர். இங்கு இந்தியர்களே இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சான் மரினோ

சான் மரினோ இத்தாலியால் முழுவதுமாகச் சூழப்பட்ட நாடு. ஐரோப்பாவில் உள்ள மிகச் சிறிய நாடு இதுவாகும். சான் மரீனோ உலகிலேயே மிகவும் பழைமையான குடியரசு நாடு என அறியப்படுகிறது. சுமார் 3,35,620 மக்கள்தொகைக் கொண்ட இந்த நாட்டில் இந்தியர்களே இல்லை.

துவாலு

துவாலு என்பது ஆஸ்திரேலியாவின் வடகிழக்கில் பசிபிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவு நாடாகும். இது முன்பு எல்லிஸ் தீவுகள் என்று அழைக்கப்பட்டது. இந்த தீவில், 10,000 பேர் மட்டுமே வசிக்கின்றனர். இங்கும் இந்திய புலம்பெயர்ந்தோர் இல்லை என அறிக்கைகள் கூறுகின்றன.

பல்கேரியா

பல்கேரியக் குடியரசு ஐரோப்பாவின் தென் கிழக்கே அமைந்துள்ளது. இது நேட்டோ (NATO) கூட்டுப் பாதுகாப்பு அமைப்பின் உறுப்பினரான நாடுகளில் ஒன்று. இங்கும் இந்தியர்கள் இல்லை.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?