Vietnam: கடலுக்குள் மனித காலடி தடமேபடாத செங்குத்து மலைகள்! - உலகிலேயே அழகான இடம் இதுதானா? Canva
உலகம்

Vietnam: கடலுக்குள் மனித காலடி தடமேபடாத செங்குத்து மலைகள்! - உலகிலேயே அழகான இடம் இதுதானா?

இந்த கடலில் நீரும் படகு சவாரிக்கு ஏற்றபடி மரகத நிறத்தில் சுத்தமானதாக இருக்கும். இங்குள்ள குன்றுகளில் எண்ணற்ற குகைகள் உள்ளதால் குகை ஆராய்ச்சியாளர்களுக்கு விருப்பமான இடமாக இருக்கிறது.

Antony Ajay R

வியட்நாமில் டோக்கின் வளைகுடா பகுதியில் உள்ளது ஹ லாங் விரிகுடா பகுதி. இங்கு 1600க்கும் மேற்பட்ட தீவுகள் காணப்படுகின்றன.

விரிந்த கடற்கரையில் செங்குத்தாக நிற்கும் நூற்றுக்கணக்கான சுண்ணாம்பு பாறைகள் நம்மை வியக்கவைக்கும். 

இந்த இடம் அதன் வினோதமான அமைப்புகாக பெயர்பெற்றது. இங்குள்ள பல தீவுகள் மனித காலடித் தடமேபடாதவை.

வியட்நாம் தலைநகர் ஹனோயிலிருந்து தென்கிழக்கே 164 கிலோமீட்டர் தூரத்தில் 500 சதுர கிலோமீட்டர் பரப்பில் இவை அமைந்துள்ளன. 

இந்த பகுதியில் கடல் மீன்கள் இருப்பதால் மீன்பிடி தொழில் நடக்கிறது. கடலில் இருந்து வானத்தை பார்த்தபடி வளர்ந்திருக்கும் குன்றுகளில் பறவைகள் வந்தமர்கின்றன. அவற்றுக்கு உணவாக ஊர்வனவும் அடங்கியிருக்கின்றன.  மனிதர்கள் மற்றும் பிற பாலூட்டிகாளுடன் பல்லுயிர்தன்மைக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது இந்த இடம்.

இப்போது சுற்றுலாப் பயணிகளை குவிக்கும் இந்த இடம் 1994ம் ஆண்டு யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டது. நேரில் இந்த இடத்தைப் பார்த்தவர்கள் இது நம் பூமியின் பகுதிதானா என வியந்துவிடுவர்.

வியட்நாம் செல்பவர்கள் தவறவிடக் கூடாத இடம் இதுவாகும். இங்குள்ள பெரிய பாறைகளுக்கு நடுவே படகு சவாரி செய்வது வாழ்நாள் அனுபவமாக இருக்கும். 

புராணக்கதைகளின் அடிப்படையில் இந்த இடத்துக்கு “டிராகன் இறங்கும் இடம்” என்றப் பெயரும் உண்டு. ஒரு பெரிய டிராகன் தரையிரங்கும் போது அதன் வால் உரசியதில் நிலத்தில் பள்ளங்கள் ஏற்பட்டு செங்குத்து சுண்ணாம்புப்பாறை தூண்கள் உருவானதாக நம்பியிருக்கின்றனர்.

இந்த கடலில் நீரும் மரகத நிறத்தில் சுத்தமானதாக இருக்கும். இங்குள்ள குன்றுகளில் எண்ணற்ற குகைகள் உள்ளதால் குகை ஆராய்ச்சியாளர்களுக்கு விருப்பமான இடமாக இருக்கிறது. 

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?