Nokia started as a paper mill  Twitter
உலகம்

இன்றைய புகழ் பெற்ற பிராண்ட்களின் முதல் தயாரிப்பு என்ன? - ஆச்சரியமூட்டும் தகவல்

Priyadharshini R

சோனி, நைக், நோக்கியா போன்ற முன்னணி நிறுவனங்கள் ஆரம்பத்தில் வேறு துறைகளில் தொழிலைத் தொடங்கி தற்போது முற்றிலும் மாறுபட்ட துறையில் நிலைத்து வருகின்றன.

ஒரு நிறுவனத்தின் எந்தவொரு பிரண்டும் மக்கள் மத்தியில் அறியப்படப் பல வருடங்கள் கடின உழைப்பும் தொலைநோக்கு பார்வையும் தேவைப்படுகிறது.

வாடிக்கையாளர்கள் தங்கள் பிராண்டுகளை அல்லது ஒரு குறிப்பிட்ட வகை தயாரிப்புகள், அவற்றின் சேவைகளை அதிக அளவில் வாங்க வைக்கவும், அந்த பிராண்டை நிலை நிறுத்தவும் நிறுவனங்கள் போராடி வருகின்றன.

உலகளவில் பல முன்னணி பிராண்டுகள் உள்ளன, அவை ஒரு தயாரிப்பை விற்கத் தொடங்கி, இப்போது முற்றிலும் வேறுபட்ட துறையில் இருந்து மாறுபட்ட தயாரிப்புக்காகப் பிரபலமாக அறியப்படுகின்றன. அவற்றில் சிலவற்றைக் காணலாம்..

1. சோனி ( Sony)

அனைவருக்கும் சோனி என்ற பிராண்டை கூறினால் மொபைல் போன், டிவி, ஸ்பீக்கர் என கேஜட்கள் தான் முதலில் நினைவிற்கு வரும். ஆனால் சோனி அதன் முதல் தயாரிப்பான ரைஸ் குக்கரை 1946ம் ஆண்டு அறிமுகப்படுத்தியுள்ளது.

2. நோக்கியா ( Nokia)

நோக்கியா உலகளவில் மிகவும் பிரபலமான செல்போன் பிராண்டுகளில் ஒன்றாக அறியப்படுகிறது.

இது பல தசாப்தங்களாக சர்வதேச சந்தையை ஆள்கிறது என்று கூறினால் மிகையாகாது. ஆனால் நோக்கியா 1865 இல் காகித ஆலையாகத் தொடங்கியது என்பது உங்களுக்குத் தெரியுமா? அதன் முதல் தயாரிப்புகளில் ஒன்று டாய்லெட் பேப்பர்.

3. சாம்சங் ( Samsung)

சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் (Samsung Electronics) தென் கொரியாவில் உள்ள சியோல் நகரைத் தலைமையிடமாக கொண்ட நிறுவனம். 1969 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இது உலகின் மிகப்பெரிய மின்னணு நிறுவனமாகும்.

இந்த நிறுவனம் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனை செய்வதில் முன்னணி நிறுவனம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே!

ஆனால் சாம்சங் 1938 இல் பழங்கள் மற்றும் மீன்களை ஏற்றுமதி செய்யும் வேலையைத் தான் முதலில் செய்துள்ளது.

4. லெகோ ( Lego)

உலகின் மிகப்பெரிய பொம்மை பிராண்டுகளில் ஒன்றான லெகோ குழு 1932 இல் வாத்துகளை விற்பனை செய்யத் தொடங்கியுள்ளது.

2021 ஆம் ஆண்டு நிலவரப்படி, லெகோ உலகின் மிகப்பெரிய பொம்மை நிறுவனமாக உள்ளது.

5. நிண்டெண்டோ ( Nintendo)

இன்று உலகளவில் முன்னணி வீடியோ கேம் நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் நிண்டெண்டோ 1889 இல் தொடங்கப்பட்டது

ஆனால் இந்த நிறுவனம் ஆரம்பத்தில் விளையாட்டு அட்டைகளை விற்பனை செய்வதில் கவனம் செலுத்தியது.

காலத்துக்கு ஏற்ற மாற்றம் தான் நம்மை உயரவைக்கும் என்பதற்கு இந்த நிறுவனம் ஒரு எடுத்துக்காட்டு.

6. நைக் ( Nike)

அமெரிக்காவின் பிரபலமான காலணி நிறுவனமான நைக் முதலில் ப்ளூ ரிப்பன் ஸ்போர்ட் என்று பெயரிடப்பட்டது. அதன் பின்னர் அதன் பெயரை 'நைக்’ என மாற்றியுள்ளது.

மேலும் ஜப்பானிய டிராக் ஷூக்களை தான் முதலில் விற்பனை செய்துள்ளது நைக்.

7. லம்போர்கினி ( Lamborghini )

ஆட்டோமொபைல் துறையில் லம்போர்கினி நிறுவனம் ஒரு முன்னணி பிராண்டாக விளங்குகிறது.

பலர் இதை நம்ப மாட்டார்கள் ஆனால் லம்போர்கினி ஸ்போர்ட்ஸ் கார்களை விற்பனை செய்யத் தொடங்கும் முன்பே டிராக்டர்களை விற்றுள்ளது.

8. கோல்கேட் (Colgate)

டூத் பேஸ்டில் நீண்ட நிலைத்து நிற்கும் பிராண்டாக கோல்கேட் இருப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் கோல்கேட் நிறுவனம் 1806 இல் முதலில் சோப்பு மற்றும் மெழுகுவர்த்திகளை விற்பனை செய்திருக்கிறது.

9. எல்.ஜி (LG)

எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் (LG Electronics, தென் கொரியாவில் உள்ள சியோல் நகரைத் தலைமையிடமாகக் கொண்ட பன்னாட்டு மின்னணு நிறுவனம்.

முன்னணி எலக்ட்ரானிக் பிராண்டுகளில் ஒன்றான எல்ஜி முதலில் ஃபேஷியல் க்ரீமை விற்பனை செய்துள்ளது.

10. டொயோட்டா ( Toyota)

டொயோட்டோ நிறுவனம் ஜப்பானில் உள்ள எய்ச்சி நகரத்தை தலைமையிடமாக கொண்ட பன்னாட்டு தானுந்து உற்பத்தி நிறுவனமாகும்.

டொயோட்டாவை ஒரு ஆட்டோமொபைல் நிறுவனமாக தான் நாம் அறிவோம். ஆனால் டொயோட்டா நிறுவனம் முதலில் தறி தொழிலில் தான் ஈடுபட்டுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?