தைவானை முன்வைத்து எழும் அமெரிக்க – சீன நெருக்கடி : போர் மூளமா? NewsSense
உலகம்

தைவானை முன்வைத்து எழும் அமெரிக்க – சீன நெருக்கடி : போர் மூளுமா? - என்ன நடக்கிறது?

Govind

தைவான் தீவு நாடு, சீனாவிற்கு அருகில் வடமேற்கு பசிபிக் பெருங்கடலில் கிழக்கு மற்றும் தென் சீனக் கடல்களின் சந்திப்பில் உள்ளது. தைவான் தீவோடு சேர்த்து மொத்தம் இந்த நாட்டில் 168 தீவுகள் உள்ளன. அதில் தைவான்தான் மிகப்பெரிய தீவு. இதன் தலைநகரம் தைபே. நாட்டின் மக்கள் தொகை 2 கோடியே 32 லட்சம் ஆகும்.

இனி சீனா, தைவான் இரு நாடுகளுக்கிடையிலான வரலாற்றைப் பார்ப்போம். அதன் மூலம் இருநாடுகளின் பிரச்னையை புரிந்து கொள்ளலாம்.

சீனா - தைவான் உருவான வரலாறு

1940களில் சீனாவில் மாவோ தலைமையிலான சீனக் கம்யூனிசக் கட்சி உள்நாட்டு அரசை தூக்கி எறியும் போரை துரிதப்படுத்தியது. அப்போது சீனாவை ஆண்டு கொண்டிருந்த கட்சியின் பெயர் கோமிங்டாங். அதிபரின் பெயர் சியாங்கை ஷேக். இவருக்கு அமெரிக்க ஆயுத உதவி அளித்தாலும் மக்களின் உதவியோடு சீனக் கம்யூனிசக் கட்சி போரில் வெற்றி பெற்றது. இதனால் சீனா நாட்டிலிருந்து சியாங்கை ஷேக்கும் அவரது ஆதரவாளர்களும் அருகிலுள்ள தைவான் தீவிற்கு சென்றனர். சென்ற ஆண்டு 1949.

அப்போது தைவானில் உள்ள ஷேக் அரசு தன்னைத்தானே ரிபப்ளிக் ஆஃப் சீனா என்று அழைத்துக் கொண்டது. இதன் சுருக்கம் ஆர்ஓசி. சீனா தன்னை பீப்பிள் ரிபப்ளிக் ஆஃப் சைனா என்று அழைத்துக் கொண்டது. இதன் சுருக்கம் பிஆர்ஓ.

ஆரம்பத்தில் இரண்டு நாடுகளும் தான்தான் அதிகாரப்பூர்வ சீனா என்று அழைத்துக் கொண்டன. ஆனால் 1970களில் உலக நாடுகள் சீனாவை அதாவது பிஆர்சியை சீனா என்று அங்கீகரித்தன. சீனாவும் பாதுகாப்பு கவுன்சிலில் வீட்டோ அதிகாரம் உள்ள வல்லரசு நாடாக சேர்க்கப்பட்டது.

இன்று ஐ.நா.வில் உறுப்பினர்களாக இருக்கும் 193 நாடுகளில் வெறும் 13 நாடுகள் மட்டுமே தைவானை அங்கீகரித்திருக்கின்றன. தைவான் தனக்குத்தான் சொந்தம் என்று சீனா கூறுகிறது. அமெரிக்க மறைமுகமாக தைவானை ஆதரிக்கிறது. இது வரலாறு.

இது வரை தைவான் தீவு இருக்கும் தைவான் ஜலசந்தி கடலில் மூன்று முறை நெருக்கடிகள் ஏற்பட்டிருக்கின்றன. இந்த நெருக்கடிகளில் சீனாவும் அமெரிக்காவும் மறைமுகமாக மோதிக் கொண்டன.

அமெரிக்காவின் பாராளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி நேற்று தைவானிற்கு விஜயம் செய்தார். இதை சீனா கடுமையாக கண்டித்திருக்கிறது. தற்போது நான்காவது தைவான் ஜலசந்தி நெருக்கடி ஏற்படும் அபாயம் உள்ளது.

நான்சி பெலோசியின் வருகை சீனாவிற்கு செய்யப்படும் துரோகமா?

25 ஆண்டுகளுக்கு முன்பு இதே போன்று அமெரிக்காவின் பாராளுமன்ற சபாநாயகர் நியூர் கிங்ரிச் தைவானிற்கு சென்றிருக்கிறார். அதற்கு பிறகு தைவான் செல்லும் உயர்ந்த பட்ச அமெரிக்க தலைவர் நான்சி பெலோசி தான். பெலோசியின் வருகை தனது இறையாண்மையை மீறுவதாக சீனா கூறுகிறது.

ஏனெனில் ஒரே சீனா என்ற கொள்கையை தற்போது அமெரிக்க மறுப்பதாக சீனா கண்டிக்கிறது. 1970களில் தன்னைத்தான் அதிகாரப்பூர்வ சீனா என்ற அங்கீகரித்த அமெரிக்கா இப்போது ஏன் மீறுகிறது என்று சீனா கேள்வி எழுப்புகிறது.

சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் இ வெளியிட்ட அறிக்கையில் அமெரிக்க சீனாவிற்கு துரோகமிழைத்ததாகக் கூறியிருக்கிறார். பெலோசியின் வருகையை அடுத்து தைவான் ஜலசந்தியில் சீனா மற்றும் அமெரிக்கா இரு நாட்டு கடற்படைகளும் இராணுவ ஒத்திகையில் ஈடுபட்டு பதட்டத்தைக் கூட்டியுள்ளன. பெலோசி தைவான் தலைநகர் தைபேயில் இறங்கிய சில நிமிடங்களில் சீனாவின் கிழக்கு பிரிவு கடற்படை, தைவானைச் சுற்றி தனது இராணுவ ஒத்திகையை நடத்தத் துவங்கியது.

இதே போன்ற நெருக்கடி 1954, 1958 மற்றும் 1990களின் மத்தியில் நடந்திருக்கிறது. இந்த நெருக்கடிகளுக்கும் அமெரிக்கா, சீனாதான் காரணம் என்றாலும் ஒவ்வொன்றின் பிரச்சினைகளும் வேறு.

bill clinton - Jiang Zemin

மூன்றாம் தைவான் ஜலசந்தி நெருக்கடி - 1995

மூன்றாவது நெருக்கடி 1995 இல் ஏற்பட்டது. அப்போது தைவானின் அதிபர் லீ டெங் ஹூலி அமெரிக்காவிற்கு விஜயம் செய்தார். அதுவும் அமெரிக்க பல்கலைக்கழகமான கார்னெல்லிற்கு வருகை தந்தார். ஆரம்பத்தில் அதிபர் கிளிண்டன் நிர்வாகம் இந்த வருகையை ஏற்கவில்லை என்றாலும் பின்னர் அமெரிக்க பாரளுமன்றம் தைவான் அதிபர் வருகையை ஆதரித்து தீர்மானம் போட்டது.

இதற்கு பதிலடியாக சீனா சில மாதங்களுக்கு தைவான் அருகே தொடர்ந்து இராணுவ பயிற்சியை எடுத்து அச்சுறுத்தியது. மேலும் தைவான் அருகே கடலில் ஏவுகணைகளை வீசியது. அதையும் ஒத்திகை என்று கூறியது. தைவானின் அதிபர் அமெரிக்க சென்றது அமெரிக்கா சீனாவிற்கு செய்த துரோகம் என்று சீனா கூறியது.

1996 இல் தைவானில் நடந்த தேர்தலில் அதிபர் லீக்கு மக்கள் வாக்களிப்பதை தடுக்கும் நோக்கில் சீனா தனது இராணுவ ஒத்திகை மிரட்டலை கையில் எடுத்தது. பதிலுக்கு அமெரிக்கா இரண்டு விமானம் தாங்கிக் கப்பல்களை அனுப்பியது. இறுதியில் தைவான் தேர்தலில் 54% மக்கள் லீயைத் தேர்ந்தெடுத்தனர். இப்படி ஒவ்வொரு நெருக்கடியின் போதும் சீன- அமெரிக்க போருக்கான முகாந்திரம் இருந்தது.

நான்காவது தைவான் ஜலசந்தி நெருக்கடி ஏற்படுமா?

தற்போது பெலோசி தைவானுக்கு வருகை தந்ததையும் சீனா அப்படித்தான் பார்க்கிறது. அமெரிக்கா மெல்ல மெல்ல ஒரு சீனக் கொள்கையை விட்டு விலகிச் செல்வதாக சீனா கூறுகிறது.

தற்போதைய சீன அதிபர் ஜி ஜின்பிங் தனது முன்னோடிகளை விடத் தைவான் கொள்கையில் தீவிரமாக இருக்கிறார். அதிலிருந்து அவர் பின்வாங்கினால் சீனாவில் அவரது செல்வாக்கு குறையும். இது அவரது பிரச்னை. எனவே கடந்த நெருக்கடிகளை விட தற்போது இராணுவத்தின் ஒத்திகை அதிகரித்திருக்கிறது. இதற்குப் போட்டியாகப் பல அமெரிக்கக் கப்பல்களும் தைவானைச் சுற்றி வருகின்றன. இதை சீனா நிறுத்துமா என்பது ஒரு சிக்கலான கேள்வி.

எனவே தற்போதும் போர் வராது என்றாலும் தைவான் ஜலசந்தி நெருக்கடி முன்பை விட தீவிரம் அடைந்துள்ளது என்பதையே பெலோசியின் வருகை காட்டுகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?