Iphone ல் இருக்கும் ‘ஐ’க்கு என்ன அர்த்தம்? ஸ்டீவ் ஜாப்ஸ் கூறிய விளக்கம் twitter
உலகம்

Iphone ல் இருக்கும் ‘ஐ’க்கு என்ன அர்த்தம்? ஸ்டீவ் ஜாப்ஸ் கூறிய விளக்கம்

Keerthanaa R

ஆப்பிள் நிறுவனத்தின் கேட்ஜெட்களின் முன்னால் இருக்கும் ’ஐ’ என்ற எழுத்தின் அர்த்தம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா?

நாம் பயன்படுத்தும் மொபைல் ஃபோன்களை அதன் நிறுவனத்தின் பெயரால் நாம் அறிவோம். ஆனால், ஐ ஃபோன் மட்டும் அப்படியல்ல.

ஆப்பிள், ஐ ஃபோனின் தயாரிப்பு நிறுவனம். இந்த நிறுவனத்தின் கேட்ஜெட்களை நாம், ஐ ஃபோன், ஐ பேட், ஐ பாட், ஐ மேக் என்று ஐ என்ற எழுத்து முன்னால் வைத்து குறிப்பிடுவோம்.

Iphone

இந்த ஐ என்ற எழுத்துக்கு என்ன அர்த்தம் என்று நாம் எப்போதாவது யோசித்திருப்போம்.

இன்டெர்னெட், இன்டெலிஜன்ஸ் என்று ஏதேதோ வார்த்தையை பொறுத்திப் பார்த்திருப்போம். ஆனால், இந்த ’ஐ’ க்கு பின்னால் என்ன அர்த்தம் என்பதை ஒரு முறை அந்நிறுவனத்தின் முன்னாள் சி இ ஒ ஸ்டீவ் ஜாப்ஸ் தெரிவித்திருந்தார்.

இந்த ஐ என்ற எழுத்துக்கு பின்னால் ஐந்து வார்த்தைகளின் பெயர்கள் ஒளிந்திருக்கிறது.

Iphone

ரீடர்ஸ் டைஜெஸ்ட்டின் அறிக்கையின்படி, "I - Internet, Individual, instruct, inform and inspire" என்பதே அதன் அர்த்தமாகும்.

1998 ஆம் ஆண்டு ஐ மேக் அறிமுகப்படுத்தப்பட்டபோது இதன் அர்த்ததை ஸ்டீவ் ஜாப்ஸ் பகிர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொழில்நுட்ப ரீதியாக 'i' க்கு எந்த அதிகாரப்பூர்வ அர்த்தமும் இல்லை என்பதை ஜாப்ஸ் வலியுறுத்தினார். நிறுவனத்தின் மதிப்புகள் மற்றும் கொள்கைகளை அதன் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு கற்பிப்பதற்கான ஒரு 'தனிப்பட்ட பிரதிபெயர்' மற்றும் 'அறிவுரை' மட்டுமே இந்த ‘i’.

இதன் அர்த்தம் உங்களுக்கு முதலே தெரிந்திருந்ததா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?