queen elizabeth Twitter
உலகம்

Queen Elizabeth II : மகாராணி இறந்த பின் நடக்கும் விஷயங்கள் என்ன?

Gautham

பிரிட்டிஷ் இராஜ்ஜியத்தை அதிக காலம் ஆட்சி செய்தவரான ராணி இரண்டாம் எலிசபெத் காலமானார்.

கடந்த 2021 அக்டோபரிலிருந்தே அவருக்கு உடல் நலப் பிரச்னைகள் இருந்தது. எழுந்து நிற்பதற்கும் நடப்பதற்கும் சிரமப்பட்டு வந்தார். நேற்று ராணியின் உடல்நிலை கவலைக்கிடமான பின்னர் பக்கிங்காம் அரண்மனைக்கு அவரது 4 குழந்தைகளும் வருகை தந்திருந்தனர்.

96 வயதாகும் எலிசபெத் 70 ஆண்டுகளாகப் பிரிட்டிஷை ஆண்டு வந்தார். அவர் தலைமையில் இதுவரை 15 பிரதமர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.பிரான்ஸ் மன்னர் 14ம் லூயிஸுக்கு பிறகு உலகிலேயே ஒரு நாட்டை அதிக காலம் ஆண்டவர் இவர்தான்.

மகாராணி இரண்டாம் எலிசபெத் காலமாகிவிட்டார் என்பதைப் பல தளங்களும் உறுதி செய்துவிட்டன. இப்போது பக்கிங்காம் அரண்மனை 'அபரேஷன் லண்டன் பிரிட்ஜ்' என்கிற திட்டத்தை செயல்படுத்தும் என ஸ்டைல் காஸ்டர் என்கிற வலைதளம் கூறியுள்ளது.

மகாராணியார் காலமானதை 'ராணி இறந்துவிட்டார்' என்றோ 'மகாராணியார் காலமாகிவிட்டார்' என்றோ பொதுவாகச் சொல்லமாட்டார்கள். "லண்டன் பிரிட்ஜ் இஸ் டவுன்" என சங்கேத மொழியில் அரசு உயர் அதிகாரிகளுக்கு மத்தியில் செய்தி பரிமாறப்படும்.

இதில் பிரிட்டனின் பிரதமர், கேபினெட் அமைச்சரவை, அரசு உயர் அதிகாரிகள் அடங்குவர். அதனைத் தொடர்ந்து இப்போதும் பிரிட்டனின் மகாராணி சில நாடுகளின் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார். அவர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்படும். அதோடு காமன்வெல்த் நாடுகளுக்கு இச்செய்தி தெரிவிக்கப்படும். இதன் பிறகுதான் மகாராணி காலமானதைப் பொதுவெளியில் தெரிவிக்கப்படும்.

queen elizabeth

இப்படி எல்லா தரப்பினருக்கும் முறையாக செய்தியைக் கொடுத்தனுப்பிய பிறகுதான், பக்கிங்காம் அரண்மனை தன் துக்கத்தை அனுசரிக்கத் தொடங்கும். தன்னுடைய அனைத்து சமூக வலைத்தள கணக்குகளும் கருப்பு படத்தை வைக்கும். பக்கிங்காம் அரண்மனை வாசலில் ஓர் அறிவிப்புப் பலகையும் வைக்கப்படும்.

அரச குடும்பத்தினர் மற்றும் பிரதமர் ஆகியோர் தனித் தனியே அதிகாரப்பூர்வமாக மகாராணியார் இறந்ததற்குச் செய்தியறிக்கைகளை வெளியிடுவர். அதனைத் தொடர்ந்து அரசியாரின் மூத்த மகன் பிரின்ஸ் சார்லஸ் நாட்டு மக்கள் மத்தியில் உரையாற்றுவார் என்கிறது ஸ்டைல் காஸ்டர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?