Holocaust என்றால் என்ன? - நடுங்க வைக்கும் ஒரு பயணம்  twitter
உலகம்

Holocaust என்றால் என்ன? - நடுங்க வைக்கும் ஒரு பயணம்

யூதர்களை அவர் வெறுப்பதற்கு தனிப்பட்ட காரணம் எதுவும் இல்லை எனவும், தனது இளமைக் காலத்தில் அவர் வியன்னாவில் இருந்தபோது தான் இந்த மனப்பான்மையை அவர் வளர்த்துக் கொண்டதாகவும் Anne Frank தனது டைரியில் குறிப்பிடுகிறார்.

Keerthanaa R

ஜெர்மனியின் நாசி கட்சித் தலைவரான அடால்ஃப் ஹிட்லர், ஒரு கொடுங்கோல் ஆட்சி புரிந்த சர்வாதிகாரி என்பது உலகம் அறிந்தது.

இவரது ஆட்சியில் யூதர்கள் அடிமைப்படுத்தப்படு, பலவிதமான கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டதை, வரலாற்றில் நாம் படித்திருப்போம். அதில் மிகக் கொடூரமான ஒன்று ஹாலோகாஸ்ட்.

கிட்ட தட்ட 60 லட்சம் யூதர்கள் இந்த ஹாலோகாஸ்ட்டில் கொல்லப்பட்டனர். எந்த குற்றமும் செய்யாத இவர்கள் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர்.

ஆண்கள், பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் என பாரபட்சம் இல்லாமல், படுகொலைகள் நடந்தேறின.

இந்த ஹாலோகாஸ்ட் என்றால் என்ன? ஹிட்லர் இதனை தீவிரமாக அமல்படுத்த என்ன காரணம்?

ஹாலோகாஸ்ட்:

ஹாலோகாஸ்ட் (Holocaust) என்ற வார்த்தை கிரெக்க மொழியில் இருந்து வந்தது. இதன் அர்த்தம் எரிக்கப்பட்ட காணிக்கை (burnt offering).

இரண்டாம் உலகப்போரின் போது மிக அதிகமாக மக்கள் மத்தியில் பேசப்பட்ட இந்த வார்த்தை, போருக்கு முன்னரே வழக்கத்திலிருந்துள்ளது.

ஒரு பெரும் மக்கள் கூட்டம் ஒரே சமயத்தில் கொல்லப்படுவதை ஹாலோகாஸ்ட் எனக் குறிப்பிடுகின்றனர். ஆனால், இரண்டாம் உலகப்போருக்கு பின் பெருமளவில் ஐரோப்பிய யூதர்கள் கொல்லப்பட்ட பிறகே இது உலகளவில் பரவத் தொடங்கியது.

யூதர்கள் இதை 'ஷோவா' என்றும் குறிப்பிடுகிறார்கள். ஹீப்ரூ மொழியில் இந்த வார்த்தை 'பேரழிவு' என்று பொருள்படுகிறது.

ஹாலோகாஸ்ட் வரக் காரணம் என்ன?

ஹாலோகாஸ்ட் முறை பின்பற்றப்படுவதற்கு நிறைய காரணங்கள் முன்வைக்கப்படுகிறது. நாசிகளுக்கு யூதர்களை அழிக்கவேண்டும் என்ற எண்ணம் அதிகமாக இருந்தது.

காலங்காலமாக யூதர்கள் மீதிருந்த பகை, தேசியவாதம், இனவெறி ஆகிய காரணங்கள் கூறப்படுகிறது.

மிக முக்கியமாக இயேசு கிறிஸ்துவின் மரணத்திற்கு யூதர்கள் தான் காரணம் என்ற அடிப்படையில் தான், யூதர்களை அழிக்க இந்த ஹாலோகாஸ்ட் வழக்கம் பரவலாக பின்பற்றப்பட்டது என்று சான்றுகள் தெரிவிக்கின்றன

என்ன நடந்தாலும் யூதர்கள் தான் காரணம்

யூதர்களை ஊருக்குள் வர விடாமலும், நோய் தொற்று ஏற்பட்டால் அவர்கள் தான் காரணம் என்றும் குற்றம் சாட்டப்பட்டனர். வேலைகள், அடிப்படை வசதிகள் அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்டன.

வேறு வழியின்றி அவர்கள் ஊரைவிட்டு புலம்பெயர்ந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர். பெரும்பாலான யூதர்கள் போலந்தில் குடிபெயர்ந்தனர்.

முதலாம் உலகப்போரில் ஜெர்மனி தோல்வியடைந்த போதும் அவர்களே குற்றம் சாட்டப்பட்டனர்.

ஹிட்லர் தனது புத்தகமான Mein Kampf ல், வெளிப்படையாகவே யூதர்களை வெறுப்பதாக தெரிவித்திருந்தார்.

யூதர்களை அவர் வெறுப்பதற்கு தனிப்பட்ட காரணம் எதுவும் இல்லை எனவும், தனது இளமைக் காலத்தில் அவர் வியன்னாவில் இருந்தபோது தான் இந்த மனப்பான்மையை அவர் வளர்த்துக் கொண்டதாகவும் Anne Frank தனது டைரியில் குறிப்பிடுகிறார்.

வியன்னா மக்கள்:

யூதர்கள் கொடுமைகளுக்கு உட்படுத்தப்பட்டபோது, மறைந்து வாழ்ந்தவர்களில் Anneவும் ஒருவர். யூதர்கள் சந்தித்த கஷ்டங்களை தனது டைரியில் தினந்தோறும் பதிவு செய்தார் Anne.

வியன்னா நகரில் ஹிட்லர் இருந்த போது, அவர் ஜெர்மன் ராணுவப் படையில் இருந்தார். வியன்னாவின் மக்கள் சாதாரணமாகவே யூதர்களை எதிர்த்து வந்தனர்.

இதனாலேயே ஆரம்பக் காலங்களில் யூதர்களை வெறுக்க தொடங்கிய ஹிட்லர், காலப்போக்கில் அவர்களை அழிக்கும் எண்ணத்தையும் வளர்த்துக்கொண்டார் என்கிறார் Anne.

இரண்டாம் உலகப்போர் தொடங்கிய பிறகு, யூதர்களை அழிக்க திட்டமிட்ட நாசி முகாம், ஹாலோகாஸ்ட் முறையை தேர்வு செய்தது.

ஹாலோகாஸ்ட் முகாம்:

1942ம் ஆண்டு ஜெர்மனி ஆக்கிரமித்த போலந்தில் உள்ள ரெப்ளிங்கா, சோபிபோர் மற்றும் பெல்செக் ஆகிய இடங்களில் கொலை மையங்கள் கட்டப்பட்டன.

ரயில்கள், மாட்டு வண்டிகள் உள்ளிட்ட வாகனங்கள் மூலம், கூட்டம் கூட்டமாக மக்கள் கொலை செய்யப்படுவதற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

இந்த முகாம்கள் மனிதர்களை எளிதில் கொல்லும் தொழிற்சாலைகளாக மாறின. ஒவ்வொரு மாதமும் குறைந்தது பத்தாயிரம் சிறைவாசிகளை நாசிகள் கொன்றனர்.

முதலில் நடமாடும் விஷவாயு வேன்களை பயன்படுத்திய நாசி படை, பின்னர் கேஸ் சாம்பர்களை உருவாக்கியது. இங்கு கார்பன் மோனாக்ஸைட், சைக்லான் - பி போன்ற விஷ வாயுக்கள் பயன்படுத்தப்பட்டன

ஔஷ்விட்ஸ் படுகொலை முகாம்:

இவர்கள் கட்டியதிலேயே ஔஷ்விட்ஸ் முகாம் தான் மிகக் கொடூரமான முகாமாக கருதப்பட்டது. பல சிறிய முகாம்கள் இருந்தாலும், மூன்று முகாம்கள் மிக முக்கியமானவையாக இருந்தது. அதில் ஒன்று விஷவாயு வெளியேற்றும் மையம்.

ஆரம்பக் காலங்களில் இங்கு போலந்து தலைவர்களையும், கிளர்ச்சியாளர்களையும் சிறைப்படுத்தியது ஜெர்மன் படை.

நாளடைவில் யூதர்களை கொல்லும் இடமாக இது மாறியது. சிறைவாசிகளுக்கு சூடுவைப்பது, முத்திரைகள் குத்துவது போன்ற வழக்கங்கள் பின்பற்றப்பட்டன.

வகைப்படுத்தப்பட்ட சிறைவாசிகள்:

இவர்களை வகைப்படுத்தி கொடுமைக்குள்ளாகியது ஜெர்மன் படை. இவர்களுக்கென்று ஒரு சீருடை வழங்கப்பட்டிருந்தது.

சிறியவர்கள், வயது முதிர்ந்தவர்கள், மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் நேரடியாக விஷவாயு வெளியேற்றும் பகுதிக்கு நேரடியாக அனுப்பப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.

ஓரளவுக்கு நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தவர்கள் கொத்தடிமைகளாக அங்கு வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இங்கிருந்து மக்கள் தப்பிசெல்ல முற்பட்டால் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. சிறைவாசிகளுக்கு உணவு வழங்காமல், பட்டினிப் போடப்பட்டனர். சமயத்தில் இவர்களை அடித்தும் துன்புறுத்துவார்கள்.

ஔஷ்விட்ஸ் முகாம்களில் இருந்த அடிமைகள் பணியில் அமர்த்தப்பட்டனர். ஆனால், ரெப்ளிங்கா, சோபிபோர் மற்றும் பெல்செக் ஆகிய இடங்களில் இருந்த முகாம்களின் வேலை, மக்களை கொலை செய்வது மட்டுமே.

1942 முதல் 1945 வரை, ஜெர்மனி ஆக்கிரமித்த போலந்தில் ஹாலோகாஸ்ட் முறையில் கிட்டதட்ட 11 லட்சம் பேரை நாஜி படை கொலை செய்தது. அதில் 90 சதவிகிதம் பேர் யூதர்கள் என தெரிவிக்கிறது பிபிசி தளம்.

ஹிட்லரின் ஹாலோகாஸ்ட் படுகொலையில் ஒட்டுமொத்தமாக சுமார் 60 லட்சம் யூதர்கள் உயிரிழந்தனர்

பின்னர் ஜனவரி 27 1945ல் சோவியத் படைகளால் இவர்களுக்கு சுதந்திரம் கிடைத்தது. ஆண்டுதோறும் ஜனவரி 27ஆம் தேதி ஹாலோகாஸ்ட் நினைவு நாளாக அனுசரிக்கப்படுகிறது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?