வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்கிறோம் என்றால், மாலத்தீவு, பாலி போன்ற இடங்கள் நம் லிஸ்ட்டில் நிச்சயம் இடம்பெற்றிருக்கும்.
இந்தோனேசிய தீவு நகரமான பாலி அதன் அழகிய கடற்கரைகளுக்காகவும், பவளப்பாறைகள், அடர்ந்த காடுகளுக்காகவும் அறியப்படுகிறது. எனினும் மற்றொரு புறம் அங்கிருக்கும் கோவில்களுக்காகவும் பாலி பிரபலமாக இருக்கிறது.
பாலியின் முக்கிய கோவில்களில் ஒன்றான பெசாகி கோவில் பற்றிய பதிவு தான் இது.
பூரா பெசாகி என்றழைக்கப்படும் இந்த இந்து மதக் கோவில் அங்கு 'தாய் கோவில்' என்று பரவலாக அறியப்படுகிறது. இதனை பாலியின் அடையாளங்களில் ஒன்று எனவும் கூறலாம்.
இந்த பூரா பெசாகி கோவில் அகுங் மலைகளின் மீது அமையப்பெற்றிருக்கிறது. இந்த அகுங் மலை அந்த பகுதியின் மிக உயர்ந்த மலையும் கூட.
இந்த பூரா பெசாகி என்பது ஒரு கோவில் அல்ல. சுமார் 80 சிறிய மற்றும் பெரிய கோவில்களை உள்ளடக்கிய கோவில் வளாகமாகும். 23 தனித் தனி கோவில்கள் உள்ளன.
இவற்றில் முதன்மையானதாக இருப்பது மும்மூர்த்திகளின் - பிரம்மா, விஷ்ணு, சிவன் - கோவில்கள். மத்தியில் சிவனுக்கான பூரா பெனடரன் அகுங் கோவில், வலதுபுறம் பிரம்மாவுக்கான பூரா கிடுலிங் க்ரெடெக் மற்றும் இடது புறத்தில் விஷ்ணுவுக்கான பூரா பாட்டு மடேக் கோவில் உள்ளது.
நான்காவதாக அகுங் மலை முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.
இந்த பூரா பெசாகி கோவில்கள் 8 ஆம் நூற்றாண்டில் கண்டறியப்பட்டவை.
8ஆம் நூற்றாண்டில் சாது ஒருவர் மக்களுக்கு வீடு அமைத்து தர உத்தரவிடப்பட்டார். கடவுளின் ஆணையாக வந்ததால் அவரும் வீடுகள் கட்ட ஏற்பாடுகள் செய்தார்.
இந்த இடமானது, அகுங் மலையை ஆட்கொண்டிருக்கும் நாக பெசுகியன் என்ற ராட்சத கடவுளைத் தொடர்ந்து பாசுகி என்கிற பெயரை பெற்றது. இந்த பெயரே மருவி பெசாகி என்று அழைக்கத் தொடங்கினர்.
இந்த வீடுகள் கட்டுமானத்தின்போது, அந்த சாதுவின் பல சீடர்கள் நோய்வாய்ப்பட்டும், விபத்துகள் ஏற்பட்டும் இறந்ததாக கூறப்படுகிறது.
1343ல் மஜாபஹித் வம்சத்தினர் இந்த இடத்தைக் கைப்பற்றிய பிறகு பூரா பெசாகி என்று பெயர் மாறியது.
அதன் பிறகு பல அளவுகளில் கோவில்கள் எழுப்பப்பட்டன.
இங்கு மகாபாரதம், ராமாயணம் போன்ற கதைகளில் தோன்றும் கதாபாத்திரங்கள் சிற்பங்களாக வடிக்கப்பட்டு படிக்கட்டுகளில் வைக்கப்பட்டுள்ளன.
ஒன்றுக்கும் மேற்பட்ட நிலநடுக்கங்களை சந்தித்திருக்கிறது இந்த பூரா பெசாகி கோவில் வளாகம். சேதாரங்கள் மறுசீரமைக்கப்பட்டாலும், அதன் பழமை மாறாமல் கோவில் வளாகத்தை இங்குள்ளவர்கள் பராமரித்து வருகின்றனர்.
இங்கு பாலி இந்துமதத்தை எடுத்துரைக்கும் விதமாக ஒரு பூரா பெசாகி அருங்காட்சியகமும் உள்ளது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust