வாட்டிகன்  Twitter
உலகம்

நவ்ரூ முதல் துவாலு வரை : உலகின் மிகச்சிறிய நாடுகள் - அட்டகாச தகவல்கள்

உலகின் மிகச்சிறிய நாடு வாட்டிகன் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆனால், மக்கள்தொகை அடிப்படையில் வாட்டிகன் நகருக்கு அடுத்தபடியாக உள்ள உலகின் மிகச்சிறிய நாடுகள் எவை தெரியுமா? வாருங்கள், மக்கள்தொகை அடிப்படையில் உலகின் எட்டு சிறிய நாடுகளைக் காணலாம்.

NewsSense Editorial Team

வாட்டிகன்

இத்தாலியின் ரோமில் உள்ள வாட்டிகன் நகரம், சுமார் 800 மக்கள்தொகை கொண்ட உலகின் மிகச்சிறிய நாடாகும். மொத்த பரப்பளவின் அடிப்படையில் இது மிகச்சிறிய நாடு. இருப்பினும், இங்குக் காணப்படும் புகழ்பெற்ற ஓவியங்கள் மற்றும் சிற்பங்களைக் காண வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகையால், எப்போதுமே அதன் மக்கள் தொகை மூன்று மடங்காக அல்லது நான்கு மடங்காக அதிகரித்தே காணப்படுகிறது.

வாட்டிகன் நகரம் உலகமே அறிந்த ஒரு தனி நபரின் தாயகமாகும். போப் உலகளவில் கத்தோலிக்க மதத்தை மட்டும் கட்டுப்படுத்துபவராக இல்லாமல், அவர் வாட்டிகன் நகரத்தின் சட்டமன்ற, நிர்வாக மற்றும் நீதித்துறை அதிகாரத்தையும் கட்டுப்படுத்துபவராகவும் இருக்கிறார்.

செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்கா, சிஸ்டைன் சேப்பல் மற்றும் வாட்டிகன் அருங்காட்சியகங்களைக் காணச் சுற்றுலாப் பயணிகள் நகரத்தில் குவிந்த வண்ணமே உள்ளனர். தபால்தலைகள் மற்றும் நினைவுப் பொருட்கள் விற்பனை, அருங்காட்சியகங்களில் நுழைவதற்கான கட்டணம் ஆகியவை வாட்டிகன் நகரத்தின் பொருளாதாரத் தேவையைப் பூர்த்தி செய்கின்றன.

Nauru

நவ்ரு

நவ்ரு குடியரசு தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள ஒரு ஓவல் வடிவ தீவு ஆகும், இது பூமத்திய ரேகைக்கு தெற்கே 35 மைல் தொலைவில் அமைந்துள்ளது. இந்த சிறிய நாட்டில் 10,876 குடியிருப்பாளர்கள் மட்டுமே இருப்பதாக சமீபத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

நவ்ரு ஒரு காலத்தில் இனிமையான தீவு என்று அழைக்கப்பட்டது. அதன் மத்திய பீடபூமி பவளப்பாறைகளால் சூழப்பட்டுள்ளது. கமாண்ட் ரிட்ஜ் என்பது பீடபூமியின் மிக உயரமான இடமாகும். இது கடல் மட்டத்திலிருந்து 233 அடி உயரத்தில் உள்ளது. நவ்ருவின் நெருங்கிய அண்டை நாடு கிழக்கே 190 மைல் தொலைவில் உள்ள கிரிபட்டியில் உள்ள பனாபா தீவு ஆகும்.

மைக்ரோனேசியர்கள் மற்றும் பாலினேசியர்கள் நவுருவில் குடியேறிய முதல் மக்கள். ஜெர்மனி 1888 இல் நாட்டை இணைத்தது. அந்த நேரத்தில் தீவின் பரந்த பகுதியை உள்ளடக்கிய நவ்ருவின் பாஸ்பேட் படிமங்களை 1900 முதல் ஜெர்மன்-பிரிட்டிஷ் கூட்டமைப்புகள் வெட்டத் தொடங்கின. பாஸ்பேட் ஏற்றுமதியே நவ்ருவின் முக்கிய பொருளாதார மூலாதாரமாக விளங்குகிறது.

நவ்ருவில் வேலையின்மை விகிதம் தற்போது 90 சதவீதமாக உள்ளது, இது உலகிலேயே மிக அதிகமாகும். 95 சதவிகிதத்திற்கும் அதிகமான மக்கள் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 40 சதவிகிதத்தினர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

துவாலு

துவாலு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள பாலினேசியாவில் உள்ள ஒரு நாடாகும். இது ஹவாய் மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடுவில் அமைந்துள்ளது. 2022 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 11,931 பேர் இங்கு வசிக்கிறார்கள். துவாலு ஒரு தீவு நாடாகும்.

முன்பு எல்லிஸ் தீவுகள் என்று அழைக்கப்பட்ட துவாலு, அக்டோபர் 1, 1978-ல் பிரிட்டிஷ் காமன்வெல்த் நாட்டிற்குள் ஒரு இறையாண்மை கொண்ட நாடாக முழுமையாக சுதந்திரமடைந்தது. துவாலு செப்டம்பர் 5, 2000 இல் ஐக்கிய நாடுகள் சபையின் 189வது உறுப்பினராக இணைந்தது.

துவாலு ஒரு பாராளுமன்ற ஜனநாயகம். இங்கிலாந்தின் இரண்டாம் எலிசபெத் துவாலுவின் ராணியாக பணியாற்றுகிறார்.

Tuvalu

பலாவு

2018 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 18,169 பேரை மக்கள் தொகையாக கொண்ட பலாவ், பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவுகளின் ஒன்றாகும். இது மைக்ரோனேசியாவின் தென்மேற்கு மூலையில் உள்ளது.

மேற்கில் 550 மைல் தொலைவில் பிலிப்பைன்ஸ் உள்ளது. வடகிழக்கில் 830 மைல் தொலைவில் குவாம், தெற்கே 400 மைல் தொலைவில் நியூ கினியா போன்ற நகரங்கள் உள்ளன. ஒரு பெரிய தடுப்பு பாறை அமைப்பு நாட்டின் பெரும்பகுதியைச் சூழ்ந்துள்ளது. Babelthuap, Koror, Malakal, Arakabesan மற்றும் Peleliu ஆகியவை பலாவ் நாட்டின் முக்கிய தீவுகளாகும்.

ஸ்கூபா டைவிங் விளையாட்டிற்கு ஏற்ற சிறந்த இடங்களில் இதுவும் ஒன்றாகும். இது கடல் வாழ் உயிரினங்கள் அதிகம் கொண்ட ஒரு பகுதியாகும். உலகில் இந்தளவிற்கு வேறு எங்கும் கடல் வாழ் உயிரினங்கள் காணப்படுவதில்லை என்று உயிரியலாளர்கள் கூறுகின்றனர்.

"பவளப்பாறைகள், மீன்கள், நத்தைகள், கிளாம்கள், கடல் வெள்ளரிகள், நட்சத்திர மீன்கள், அர்ச்சின்கள், அனிமோன்கள், ஜெல்லிமீன்கள், ஸ்க்விட்கள் மற்றும் டஸ்டர் புழுக்கள் ஆகியவை ஏராளமான கடல்வாழ் உயிரினங்கள் இங்கே காணப்படுகின்றன.

San Marino

சான் மரினோ

சான் மரினோ குடியரசு தெற்கு ஐரோப்பாவில் இத்தாலிக்கு அருகில் அமைந்துள்ளது. இங்கு மொத்தம் 34,017 பேர் வசிக்கிறார்கள். சான் இதன் வடகிழக்கு பகுதியில் அபெனைன் மலைகள் உள்ளன. இத்தாலியின் முதன்மையான ரிசார்ட் பகுதிகளில் ஒன்றான ரிமினிக்கு அருகிலுள்ள கடற்கரையில் அமைந்துள்ளது.

கடற்கொள்ளையர்களால் அழிக்கப்பட்ட ரிமினி நகரத்தின் சுவர்களை மீண்டும் கட்டியெழுப்புவதில் பெரும் பங்கு வகித்ததாக நம்பப்படும் கல் மேசன் செயிண்ட் மரினஸ் என்பவரின் பெயரால் இந்த குடியரசு பெயரிடப்பட்டது. 16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஒரு அரசியலமைப்பு எழுதப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. அந்த சட்டமே இன்னும் சான் மரினோவை நிர்வகிக்கிறது.

Lichtenstein

லிச்சென்ஸ்டீன்

லிச்சென்ஸ்டீன் மேற்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள ஒரு ஆல்பைன் நாடு. இங்குள்ள மக்கள் ஜெர்மன் மொழி பேசுகிறார்கள். சுவிட்சர்லாந்து மற்றும் ஆஸ்திரியா நாடுகளின் எல்லையாக உள்ளது. அதன் மக்கள் தொகை 38,250 எனக் கணக்கெடுப்பு சொல்கிறது. இதன் தலைநகரம் வடுஸ் ஆகும்.

ரோமானியப் பேரரசுக்குள் 1719-ல் சேர்த்துக்கொள்ளப்பட்ட, லிச்சென்ஸ்டீனுக்கு 1866-ம் ஆண்டு சுதந்திரம் வழங்கப்பட்டது. 11 நகராட்சிகளை கொண்டிருக்கும் அரசாங்கமானது ஒரு இளவரசரின் தலைமையில் உள்ளது. லிச்சென்ஸ்டைன் 1936 ஆம் ஆண்டு முதல் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று வருகிறது. அவர்கள் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் மொத்தம் ஒன்பது பதக்கங்களை வென்றுள்ளனர்.

Lichtenstein

இந்த வரிசையில் அதைத்தடுத்தாக, மொனாக்கோ 39,511 பேரை மக்கள் தொகையாகக் கொண்டு 7-வது இடத்திலும், சையிண்ட் கீட்ஸ் மற்றும் நெவிஸ் 53,544 பேரை மக்கள் தொகையாகக் கொண்டு 8-வது இடத்திலும் உள்ளன.

மார்ஷல் தீவுகள் 59,610 பேரை மக்கள் தொகையாகக் கொண்டு 9-வது இடத்தில் உள்ளது. 72,167 பேரை மக்கள் தொகையாகக் கொண்ட டோமினிக்கா 10-வது இடத்திலும், 79,535 பேர் வசிக்கும் அண்டோரா 11-வது இடத்திலும் உள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?