அமெரிக்காவில் போதைப்பொருட்களை அளவு அதிகமாக எடுத்து கொண்டு, ஜாம்பி போன்று தடுமாறும் மக்களின் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
Tranq Dope என்பது அமெரிக்காவின் இளைஞர்களை அழித்த ஓபியாய்டு Fentanyl மற்றும் Xylazine என்ற கால்நடை மருந்தின் கலவையாகும்.
இந்த மருந்து அமெரிக்கா முழுவதிலும் உள்ள முக்கிய நகரங்களில் அழிவை ஏற்படுத்துகிறது. இந்த போதை பொருள் மக்களின் நிலையை மோசமடைய செய்கிறது.
அமெரிக்காவில் புதிதாக போதைப் பொருள் ஒன்று விற்பனைக்கு வந்துள்ளது. அதன் பெயர் டிரான்ஸ் (tranq) அல்லது சைலாசின்(Xylazine).
இந்த போதைப் பொருளை பயன்படுத்துவதால் தோல் அழுகுவதோடு, ஜாம்பி போல மனிதர்கள் நடந்துகொள்வதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திருக்கிறது.
இதனை ஜாம்பி போதைப்பொருள் ( Zombie Drug) என அழைக்கிறார்கள்.
அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து அமைப்பால் அங்கீரிக்கப்பட்ட இந்த மருந்து விலங்குகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கால்நடை மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படுகிறது. இதனை வைத்து தான் இந்த போதைப் பொருள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
இது மனிதர்கள் பயன்படுத்தக் கூடாது, அதுவும் ஓவர் டோஸ் எடுத்துக்கொண்டால் மிக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த ஜாம்பி போதைப்பொருளை பயன்படுத்துவதனால், அடுத்த சில நாட்களுக்கு தூக்கமின்மை ஏற்படும். அதோடு மன அழுத்தம், கை, கால்களில் புண்கள் ஏற்படும். அப்படியே விட்டால் தோல் முழுவதும் பாதிப்படைந்து அழுகிவிடும் என்று கூறப்படுகிறது.
2021-ம் ஆண்டில் அமெரிக்காவின் நியூயார்க்கில் மட்டும் இந்த போதைப் பொருளை அதிகமாக பயன்படுத்தியதால் 2,668 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவில் ஜாம்பிக்கள் போல சாலைகளில் ஒருசிலர் சுற்றித்திரியும் வீடியோ வெளியான நிலையில், அவர்கள் இந்த போதைப் பொருளை பயன்படுத்தியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போதைப்பொருளை பயன்படுத்தி அதனால் பாதிக்கப்பட்ட 28 வயதான இளைஞர் ஒருவர் ஸ்கை நியூஸுக்கு அளித்த பேட்டியில், 9 மாதங்களுக்கு முன் அந்த போதைப் பொருளை ஒருமுறை பயன்படுத்தியதாகவும், இப்போது கால் மற்றும் பாதத்தில் ஓட்டை விழுந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த போதைப் பொருளை தடுக்காமல் விட்டால், உலகம் முழுவதும் தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust