Airbus : சீனா, அமெரிக்காவிலிருந்து வரும் பாகங்கள் - விமானம் தயாரிக்கப்படுவது எப்படி? twitter
உலகம்

Airbus : சீனா, அமெரிக்காவிலிருந்து வரும் பாகங்கள் - விமானம் தயாரிக்கப்படுவது எப்படி?

ஏர்பஸ்ஸின் மிகவும் விரும்பப்பட்ட விமானமான ஏ 380 தயாரிப்பு நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து ஏர்பஸ் 321 நியோ தயாரிப்புகளை அந்த நிறுவனம் அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Antony Ajay R

விமான உற்பத்தி மற்றும் விற்பனையில் முன்னணி வகிக்கும் நிறுவனம் ஏர்பஸ்.

அதி-திறமையான A220 இலிருந்து பிரம்மாண்டமான A380 வரை விமான போக்குவரத்து துறையில் பெரும் மாற்றங்களை விளைவித்த விமானங்கள் ஏர்பஸ்ஸின் தயாரிப்புகளே.

சரக்குகளை உலகம் முழுவதும் பரிமாறிக்கொள்ளவும் பயணம் செய்யவும் சொகுசான விமானங்களை உருவாக்கித் தரும் ஏர்பஸ் நிறுவனத்தின் உற்பத்தி எப்படி நடக்கிறது தெரியுமா?

அதன் போட்டி நிறுவனமான போயிங் அமெரிக்காவிலேயே மொத்த தயாரிப்பையும் செய்கிறது. ஆனால் ஏர்பஸ் பல நாடுகளில் பல பாகங்களை உருவாக்கி மொத்தமாக ஒரு இடத்தில் விமானத்தை தயாரிக்கிறது.

விமானத்தின் பாகங்கள்

ஒரு விமானத்தை உருவாக்க அதன் வால், இறக்கை உள்பட பல பாகங்களைத் தனித்தனியாக தயாரிக்க வேண்டும்.

ஏர்பஸ் உலகம் முழுவதுமிருந்து இந்த பாகங்களை தயாரிக்கிறது.

எந்தெந்த நாடுகளில் இருந்து எந்தெந்த பகுதிகள் வாங்கப்படுகின்றன என்பதை விரிவாக பார்க்கலாம். இதற்கு உதாரணமாக ஏர்பஸ் 380 விமானத்தை எடுத்துக்கொள்வோம்.

பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின், இத்தாலி மற்றும் இங்கிலாந்து ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தான் இதன் பெரும்பகுதி உருவாக்கப்படுகிறது.

இங்கிலாந்து எல்லையில் உள்ள வேல்ஸ் நாட்டின் ப்ராட்டன் (Broughton) நகரத்தில் இறக்கைகள் தயாரிக்கப்படுகின்றன, உடலின் நடுப்பகுதி ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் என ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு நாட்டிலிருந்து வருகிறது.

இவற்றையும் வாசியுங்கள்:

காணாமல் போன விமானம் 37 ஆண்டுகளுக்கு பின் தரையிறங்கியதா? - டைம் ட்ராவல்

பீஸ்ட் படத்தில் விஜய் குறிப்பிடும் ரஃபேல் விமானம் குறித்த 10 தகவல்கள்

சொந்தமாக ஒரு விமானத்தை உருவாக்கி பயணம் செய்யும் கேரள குடும்பம் - ஓர் ஆச்சர்ய தகவல்

விமானத்தின் எஞ்சின்கள் அமெரிக்க நிறுவனமான CMF அல்லது Pratt & Whitney நிறுவனங்களால் தயாரிக்கப்படுகின்றன.

சின்ன சின்ன பாகங்கள் உலகின் பல பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படுகின்றன.

உதாரணத்துக்கு ஏர்பஸ்ஸின் சுக்கான் (Rudder) சீனாவிலிருந்து கொண்டுவரப்படுகிறது.

இப்படி ஒவ்வொரு நாட்டையும் சார்ந்து இருப்பது சிக்கலான ஒன்று தான்.

இந்த பாகங்களை ஒரே இடத்துக்கு கொண்டு வந்து சேர்த்தால் தான் சரியாக ஒரு விமானத்தை உருவாக்க முடியும். இதற்காக பல சமயங்களில் தங்களது பெரிய சரக்கு விமானங்களையே பயன்படுத்துகிறது ஏர்பஸ்.

இப்படி கொண்டு வருவதில் சாலை மார்க்கமாக பயணிப்பது மிகவும் கடினமானது.

ஏர்பஸ் 380யின் உடல் பகுதி பிரான்சின் லாங்கன் முதல் துலூஸ் வரை சாலைமார்க்கமாகவே எடுத்து வரப்படுகிறது.

பாகங்களை இணைத்தல்

இந்த பாகங்களை இணைக்கும் செயல்முறை மிகவும் முக்கியமான ஒரு பகுதி.

ஏர்பஸின் ஒவ்வொரு வகை விமானமும் ஒரு குறிப்பிட்ட தொழிற்சாலையில் உருவாக்கப்படுகிறது.

பாகங்களை இணைக்கும் 9 மையங்கள் இருப்பது குறிப்பிடப்படுகிறது.

துலூஸ், பிரான்ஸ் -  A320, A330, A350, and A380

ஹம்பர்க், ஜெர்மனி - A320

மொபில், அல்பாமா, அமெரிக்கா - A220 and A320

தியான்ஜின், சீனா - A320

மிராபெல், கனடா -  A220

இவற்றில் மிகப் பெரியது துலூஸில் உள்ள தொழிற்சாலை.

எதிர்காலத்தில் ஏர்பஸ்?

ஏர்பஸ்ஸின் மிகவும் விரும்பப்பட்ட விமானமான ஏ 380 தயாரிப்பு நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து ஏர்பஸ் 321 நியோ தயாரிப்புகளை அந்த நிறுவனம் அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

2023ம் ஆண்டில் A321XLR என்ற புதிய விமானம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?