கானிம் அல் முஃப்தா : குரான் ஓதி உலகக் கோப்பையைத் தொடங்கிவைத்த இளைஞன் யார்? Twitter
உலகம்

கானிம் அல் முஃப்தா : குரான் ஓதி உலகக் கோப்பையைத் தொடங்கிவைத்த இளைஞர் யார்?

சிறு வயதிலேயே மருத்துவர்களால் உயிர்பிழைக்கவே மாட்டார் எனக் கைவிடப்பட்ட முஃப்தா இப்போது ஃபிஃபா உலகக்கோப்பை போட்டியின் அம்பாசிடராக இருக்கிறார். கத்தார் இளைஞர்களின் ஐகானான இவரைக் குறித்து இந்த கட்டுரையில் காணலாம்.

Antony Ajay R

கால்பந்து உலகக் கோப்பை தொடரானது நவம்பர் 20ம் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. கத்தார் தலைநகரான தோகாவில் பிரம்மாண்ட விழா நடைபெற்றது.

இந்த விழாவில் தென்கொரிய பாடகர் குழுவான பிடிஎஸ் கச்சேரியும் பல சர்வதேச கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இவை அனைத்தையும் தாண்டி கவனம் பெற்றார் கானிம் அல் முஃப்தா. இவர் தான் திருகுரானிலிருந்து வேற்றுமைகள் மற்றும் ஏற்றுக்கொள்ளுதல் குறித்த வசனங்களை படித்து போட்டிகளைத் தொடக்கிவைத்தார்.

ஹாலிவுட் நடிகர் மார்கன் ஃப்ரீமேன் இவருடன் உரையாடினார். நம்பிக்கை, ஒற்றுமை மற்றும் சகிப்புத்தன்மை குறித்து இவர்கள் கருத்துகள் அமைந்திருந்தது.

ஃபிஃபா உலகக்கோப்பை போட்டியின் அம்பாசிடராக இருக்கும் கத்தார் இளைஞர்களின் ஐகானான முஃப்தா குறித்து இந்த கட்டுரையில் காணலாம்.

2002ம் ஆண்டு இரட்டையர்களில் ஒருவராக பிறந்த கானிம் அல் முஃப்தா (Ghanim Al Muftah) கடால் ரிக்ரஷன் சிண்ட்ரோம் என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் அவரது இடுப்புக்கு கீழ் வளர்ச்சி பாதிக்கப்பட்டது.

சிறுவயதிலேயே மருத்துவர்கள் கைவிட்டாலும் கானிம் 20 வயது வரை வளர்ந்திருக்கிறார். உலகில் இருக்கும் பல இளைஞர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் முதன்மையான எடுத்துக்காட்டாக வாழ்கிறார் கானிம்.

கானிம் நீச்சல், ஸ்கூபா டைவிங், கால்பந்து (கையுறை அணிந்து விளையாடுவது), ஹைகிங் மற்றும் ஸ்கேட்போர்டிங் போன்ற விளையாட்டுகளில் ஆர்வம் செலுத்துகிறார். பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பது அவரது ஆசை.

தானாகவே கார் ஒட்டவும் கூட கற்றுக்கொண்டுள்ளார் கானிம். இவரது தினசரி நடவடிக்கைகளை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார். இவரை 3.4 மில்லியன் மக்கள் பின் தொடர்கின்றனர்.

வளைகுடா பகுதியிலேயே பெரிய சிகரமான ஜெபல் ஷாம்ஸில் ஏறி சாதனைப்படைத்திருக்கிறார். எவரஸ்ட் சிகரத்தில் ஏற வேண்டும் என்பது இவரது கனவுகளில் ஒன்று.

இப்போது கல்லூரியில் அரசியல் - அறிவியல் படித்து வருகிறார் முஃப்தா. வருங்காலத்தில் கத்தாரின் பிரதமராக வேண்டும் என்பது அவரது லட்சியம்.

இவர் கத்தாரின் முதன்மையான ஐஸ்கிரீம் நிறுவனத்தின் இணைநிறுவனர். தொழில் முனைவோராகவும், ஊக்கமளிக்கும் பேச்சாளராகவும் உள்ளார்.

முஃப்தாவின் வாழ்க்கைக் காண்பது நமக்கு அளவுகடந்த ஆச்சரியாமக இருந்தாலும் எளிமையாக, "எனது கடினமான குழந்தைப் பருவத்தில் வாழ்க்கை எவ்வளவு அழகானது அதில் எவ்வளவு நம்பிக்கைகளுடன் நாம் வாழ வேண்டும் என்றும் என் அம்மா கற்றுத் கொடுத்திருக்கிறார்" என்கிறார் முஃப்தா.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?