1985 ஆம் ஆண்டு ஏர் இந்தியா விமானக் குண்டுவெடிப்பில் பயணிகள் அனைவரும் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் விடுதலையான சந்தேக நபரான ரிபுதமன் சிங் மாலிக் கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஊடகங்கள் ஜூலை 14 வியாழக்கிழமை அன்று செய்தி வெளியிட்டிருக்கின்றன. ரிபுதமன் சிங் கனடாவின் வான்கூவரில் உள்ள தனது கல்சா கிரெடிட் யூனியன் அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டார்.
வான்கூவர் நகரத்தில் இருக்கும் பிரிட்டீஷ் கொலம்பியா பகுதியில் இந்த சீக்கிய வள்ளல் தனது துணிக் கடைக்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டதாக உள்ளூர் செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ராயல் கனடியன் மவுண்ட் போலீஸ் இந்தக் கொலையை உறுதிப்படுத்தியிருக்கிறது. எனினும் கொல்லப்பட்டவர் குறித்த விவரங்களைப் போலீஸ் இதுவரை வெளியிடவில்லை.
போலீஸ் அறிக்கையில் ஒரு நபர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் படுகாயமடைந்திருக்கிறார்; மேலும் காயங்கள் காரணமாக அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று கூறப்பட்டுள்ளது. போலீஸ் கான்ஸ்டபிள் சர்ப்ஜித் சங்கா " இது இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு" என்றார். துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் ஒரு வாகனத்தை ஓட்டிச் சென்று சில கிலோமீட்டர் தொலைவில் அதை எரித்துவிட்டுச் சென்றிருக்கின்றனர்.
2005 ஆம் ஆண்டில் ஏர் இந்தியா விமான குண்டு வெடிப்பு வழக்கில் ஆதாரங்கள் இல்லாததால் ரிபுதமன் விடுவிக்கப்பட்டார். அவர் ஒரு காலத்தில் சீக்கிய பிரிவினைவாத காலிஸ்தான் இயக்கத்தின் ஆதரவாளராக இருந்ததாகக் கூறப்படுகிறது.
1985 ஆம் ஆண்டில் அயர்லாந்தின் கடற்கரையில் கனடாவில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் குண்டுவெடித்து சிதறியது. அதில் பயணம் செய்த பயணிகள் மற்றும் ஊழியர்கள் மொத்தம் 329 பேர் கொல்லப்பட்டனர். வானில் நடந்த பயங்கரவாத கொடிய செயல்களில் இது முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
மேலும் ஜப்பான் நாட்டின் நரிடா விமான நிலையத்தில் வெடிகுண்டு வெடித்தது மற்றொரு பயங்கரவாத செயலாகும். அங்கே ஏர் இந்தியா விமானத்தில் சரக்குகளை ஏற்றிக் கொண்டிருந்த இரண்டு தொழிலாளிகள் உயிரிழந்தனர். தொழிலாளர்கள் ஏற்றிய இரண்டு சூட்கேஸ்கள் கனடாவின் வான்கூவரில் இருந்து வந்தவையாகும்.
இந்த இரண்டு பயங்கரவாத வழக்குகளிலும் சதி செய்தமைக்காக இந்தர்ஜித் சிங் ரேயாத் எனும் ஒரே நபர் மட்டும் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டார். ரிபுதமன் சிங் மாலிக் மற்றும் அஜய்ப் சிங் பக்ரி இருவரும் 2005இல் விடுவிக்கப்பட்டனர்.
தற்போது ரிபுதமன் சிங் மாலிக் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது ஒரு புதிய அத்தியாத்தை தோற்றுவித்துள்ளது. இதை யார் செய்தார்கள் என்பது வரும் நாட்களில் தெரிய வரும். இதற்கும் குண்டு வெடிப்பு வழக்கிற்கும் தொடர்பிருக்கிறதா என்பதும் அந்த விசாரணையில் தெரிய வரும்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust