Why are there so many cats on this Japanese island?  Twitter
உலகம்

பூனை தீவு: ஜப்பானில் பூனைக்கு கோவில்கட்டிய மக்கள் - இந்த இடம் பூனைகளின் உலகமானது எப்படி?

Priyadharshini R

ஜப்பானின் மியாகி மாகாணத்தில் உள்ள தஷிரோஜிமா தீவு பூனை தீவு என்று அறியப்படுகிறது. இந்த தீவு பூனைகளின் சொர்க்கம் என்றே சொல்லலாம். அங்கு மனிதர்களை விட பூனைகள் அதிகமாக இருக்குமாம். நீங்கள் ஒரு பூனை நபராக இருந்தால், இந்த இடம் நிச்சயமாக பார்க்க வேண்டிய ஒன்று.

தஷிரோஜிமா மட்டுமே பூனைகள் அதிகம் வாழும் ஒரே பூனைத் தீவு என்று சொல்லிவிட முடியாது, நாட்டில் இது போன்று பல இடங்கள் உள்ளன. ஆனால் இது மிகவும் பிரபலமான ஒன்றாகும்.

இந்த தீவில் மக்கள் தொகை மிகவும் குறைவு தான் என்றாலும் இது நாட்டின் மிகவும் பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த தீவிற்கு ஆயிரக்கணக்கான பூனைகள் குவிந்தது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

தஷிரோஜிமா தீவின் குடியிருப்பாளர்கள் அங்கு இருக்கும் பூனைகளின் மீது மிகவும் பாசமானவர்களாக இருப்பார்களாம். பூனையை இவர்கள் அதிர்ஷ்டமாக பார்க்கின்றனர்.

எடோ காலத்தில் (1600 - 1868) இந்தத் தீவு பட்டு உற்பத்தியில் மும்முரமாக இருந்தது. பட்டு உற்பத்தி செய்யும் இடத்தில் கண்டிப்பாக பட்டுப்புழுக்கள் இருக்கும். அப்போ பட்டுப்புழுக்களை உண்ண அங்கு எலிகள் இருக்கும் தானே? இந்த எலிகளை எல்லாம் விரட்ட தான் பூனைகளை இங்கு கொண்டு வந்திருக்கின்றனர்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, மீன்பிடித்தல் தீவுவாசிகளின் முதன்மைத் தொழிலாக மாறியது. பூனைகளும் இதன் மூலம் பயனடைந்தன.

இந்த தீவில் மியோரி ஆலயம் என்று ஒன்று உள்ளது. தற்செயலாக பாறைகள் விழுந்து இறந்த பூனையின் நினைவாக இது கட்டப்பட்டது.

நீங்கள் ஒரு பூனை பிரியராக இருந்தால் இந்த இடத்தை நிச்சயம் நீங்கள் சென்று பார்க்கலாம். ஆனால் தீவில் ஆடம்பரமான ஹோட்டல்கள் மற்றும் கஃபேக்கள் எதுவும் இருக்காது.

உள்ளூர் பொருளாதாரத்திற்கு சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தாலும், பூனைகளின் நல்வாழ்வைப் பாதுகாப்பதற்கும் பார்வையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் இடையே பல சவால்களை முன்வைக்கின்றனர்.

எனவே அந்த தீவிற்கு வருபவர்கள் பூனைகளுக்கு உணவளிக்க வேண்டாம் என்றும் குப்பைகளை சேர்க்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள். உள்ளூர்வாசிகள் அங்கு இருக்கும் பூனைகளுக்கு போதுமான உணவை அளித்து வருகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?