பூனைகள் ஏன் சதுரமான பெட்டிகளை விரும்புகின்றன? ஆய்வில் புதிய தகவல்!  canva
உலகம்

பூனைகள் ஏன் சதுரமான பெட்டிகளை விரும்புகின்றன? ஆய்வில் புதிய தகவல்!

Keerthanaa R

நாம் வீட்டில் பெரும்பாலும் வளர்க்கும் செல்ல பிராணிகள் நாய் அல்லது பூனை தான். என்ன தான் மற்ற விலங்குகள் பறவைகளை நாம் வளர்த்தாலும், மனிதனோடு ஒன்றுவது இந்த இரு ஜீவ ராசிகள் தான்.

இன்ஸ்டாவிலும் முகநூலிலும் இந்த பூனைகள் நாய்கள் செய்யும் சேட்டைகளை நாம் பார்த்திருப்போம். பெரும்பாலும் நாய்கள் மனிதர்களை அவ்வளவாக தொந்தரவு செய்வதில்லை. ஆனால் பூனைகள் அப்படியல்ல. நமது கவனத்தை பெற ஏதாவது சேட்டை செய்துகொண்டிருக்கும்.

இதனால் இவற்றிற்கு பார்த்து பார்த்து எல்லா பணிவிடைகளை செய்வோம். ஆனால் இந்த பூனைகள் எங்காவது மூலையில் இருக்கும் பெட்டிகளுக்குள் சென்று படுத்திருக்கும். இது ஏன் என்று எப்போதாவது யோசித்திருக்கிறோமா?

சமீபத்திய ஆய்வு ஒன்றில் ஏன் பூனைகள் பெட்டிகளை அதிகம் விரும்புகின்றன என்று கண்டறிந்துள்ளனர்.

பூனைகள் இப்படி பெட்டிகளுக்குள் சென்று அடைந்துகொள்வதால், அவற்றிற்கு, மன அழுத்தம் குறைகிறது.

இது போன்ற சிறிய அடைத்திருக்கும் பெட்டிகள், இந்த பூனைகளுக்கு, அவற்றின் அம்மாக்களை நினைவுபடுத்துகிறது. தன்னுடன் பிறந்த மற்ற குட்டிகளுடன், அம்மாவின் அரவணைப்பில் இருந்த உணர்சசியை தருவதாக கால்நடைகளின் செயல்பாடுகளை ஆராயும் நிபுணர் நிக்கோலஸ் டோட்மேன் தெரிவிக்கிறார்.

மேலும் "பூனைகளுக்கு சுற்றுச்சூழல் செறிவூட்டல் நோக்கங்களுக்காக பெட்டிகள் அல்லது பிற பாத்திரங்கள் தேவை." என்றும் நிபுணர் கூறுகிறார்.

இதில் இன்னுமொரு விஷயத்தையும் நாம் கவனிக்க வேண்டி உள்ளது.

இந்த பூனைகள், பெட்டிகள் மட்டுமல்ல, சதுரமாக இருக்கும் எந்த ஒரு பொருளின் மீதும் ஆர்வம் கொள்கிறது.

இதனை placebo effect என்று கூறலாம். அதாவது, பெட்டிகளின் வடிவம் சதுரமாக தானே இருக்கிறது. இதனால் பூனைகள் சதுரமாக இருக்கும் எதையும், பெட்டிகள் போல நினைத்துக்கொள்ளுமாம்.

இதனால், நம் வீட்டின் தரை, காகிதம் போன்ற எதை பார்த்தாலும் அவற்றிற்கு இந்த உணர்சசி தான் ஏற்படுமாம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?