Black-footed Cat: இதை உலகின் கொடூரமான பூனை என்று அழைக்க என்ன காரணம்? Canva
உலகம்

Black-footed Cat: இதை உலகின் கொடூரமான பூனை என்று அழைக்க என்ன காரணம்?

Keerthanaa R

பூனை இனங்களிலேயே வைத்து சிங்கங்கள், புலிகள் அல்லது சிறுத்தைகள் தான் மிக ஆபத்தானவை என்று நாம் நினைத்திருப்போம். அதில் தவறொன்றும் இல்லை.

அவற்றின் ஆக்கிரோஷமான குணாதிசியம் நம்மை அப்படி நினைக்கவைக்கும்

ஆனால், பார்ப்பதற்கு அப்பாவி போல இருக்கும் இந்த பூனை தான் உலகின் மிகவும் அபாயகரமான பூனையாம்!

இதன் பெயர் Black-footed Cat. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல, அளவில் சிறியதாகவும், க்யூட்டாகவும் இருக்கும் இந்த பூனை, அதன் இனங்களிலேயே வைத்து மிகவும் ஆபத்தான பூனை.

இதனை ஏன் உலகின் ஆபத்தான பூனை என கூறுகிறார்கள்? இந்த பூனை எங்கு அதிகம் காணப்படுகிறது? இந்த பதிவில்

ஆப்பிரிக்காவின் காடுகளில் பிரதானமாக காணப்படும் இந்த பூனை சாதாரணமான வீட்டு பூனை இனத்தை விடவே அளவில் சிறியதாக தான் இருக்கிறது.

கோடுகளுக்கு மத்தியில் கரும்புள்ளிகளுடன், பழுப்பு நிற ரோமங்களும், கருப்பு நிற பாதங்களும், பச்சை நிற பெரிய கண்களும் கொண்டுள்ளது இந்த பூனைகள்.

இந்த பூனை 35 முதல் 52 செண்டிமீட்டர் அதாவது 14 முதல் 20 இன்ச் தான் இருக்கிறது. எடை 1 முதல் 2.45 கிலோகிராம் தான்.

ஆப்பிரிக்காவை பிரதானமாக கொண்டிருந்தாலும், அங்கிருக்கும் காடுகளில் கூட அவ்வளவு எளிதாக இவற்றை பார்க்க முடியாது. காரணம் இயல்பாகவே இவை கூச்ச சுபாவம் கொண்டவை. மேலும் இரவு நேரங்களில் மட்டுமே இவை வெளியேறும்.

இவை வேட்டையாடி தான் உணவுகள் உண்கின்றன. இரவு நேரங்களில் வெளிவரும் இந்த பூனைகள், ஒரு இரவில் குறைந்தது 14 உயிரினங்களை (உணவு) வேட்டையாடுகின்றன.

நேரம் பார்த்து, பதுங்கி சரியான நேரத்தில் பாயும் இவை, 60 சதவிகித ஹிட் ரேட் வைத்திருக்கின்றன. அதாவது வேட்டைக்கு சென்றால், அது 60 சதவிகிதம் வெற்றியில் முடிகிறது.

இது எந்த மற்ற காட்டு பூனை இனங்களையும் விட அதிகம். மேலும் சராசரியாக ஒரு வீட்டுப் பூனை வேட்டையாடினால் அதன் வெற்றி சதவிகிதம் 32 தான். அதை விட அதிகமாக இருக்கிறது இந்த black-footed catன் ஹிட் ரேட்

ஒவ்வொரு இரவும் 5 முதல் 13 கிலோமீட்டர் தூரத்திற்கு பயணம் செய்து தங்கள் இறையை இவை வேட்டையாடுகின்றன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?