beer Twitter
உலகம்

பாகிஸ்தான் நாட்டில் பட்டையை கிளப்பும் சீன தேசத்து பீர் - இதுதான் அந்த அடிபொலி காரணம்

NewsSense Editorial Team

எல்லையில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அடிக்கடி மோதல் நிலை ஏற்படுவதும் பின்னர் அது தணிவதும் வாடிக்கையாகிவிட்டது.

பாகிஸ்தானில் இப்போது பரபரப்பாகப் பேசப்படுவது இதைப் பற்றிய அல்ல, இன்னொரு பக்கத்து நாடான சீனத்தோடு தொடர்புடைய விவகாரம்!

ஏன் சுற்றிவளைப்பானேன்... சீனத்துக்காரர்கள் தயாரிக்கும் பீர் வகைகள் இப்போது பாகிஸ்தானில் சக்கை போடு போடுகின்றன என்பதுதான் சங்கதி!

பாகிஸ்தானின் மேற்குப்பகுதியில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பீர் நிறுவனம் தொடங்கப்பட்டது. அதையடுத்து தான் சீனத்து பீருக்கு பாகிஸ்தானில் அப்படியொரு பிரபலம்!

அந்த பீர் தயாரிப்பு ஆலையிலிருந்து பலுசிஸ்தான் மாகாணம் முழுவதும் மட்டுமில்லாமல், தெற்கு மாகாணமான சிந்து, தலைநகர் கராச்சியின் வர்த்தக கேந்திரப் பகுதி ஆகிய இடங்களுக்கு பீர் விநியோகிக்கப்படுகிறது. இது விரும்பி வாங்கப்படுவதற்கு முக்கிய காரணம், பீர் குடுவையின் தோற்றமும் அதன் அழகூட்டலும் கவரும்படியாக உள்ளன என்கின்றனர். அத்துடன் சீனத்து பீரில் சற்று கூடுதலான ஆல்கஹால் கலந்திருப்பதும் உள்நாட்டு நுகர்வோரை ஈர்த்திருக்கிறது எனக் கூறப்படுகிறது.

டிடபிள்யூ ஊடகத்தினர் இதுகுறித்துப் பேசியபோது, ” சீனத்தைச் சேர்ந்த ஹூ கோஸ்ட்டல் புரூவரி, டிஸ்டில்லரி நிறுவனம் 2016ஆம் ஆண்டில் ஆலை அமைப்பதற்காக விண்ணப்பித்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.” என்றார், தெற்கு பலுசிஸ்தான் ஆயத்தீர்வை, வரித்துறை தலைமை இயக்குநர் முகமது சமான் கான்.

கடந்த ஆண்டிலிருந்து இந்த பீர் ஆலை உற்பத்தியை மேற்கொண்டுவருகிறது. இந்த ஆலையில் அன்றாடம் சராசரியாக 65ஆயிரம் லிட்டர் முதல் ஒரு இலட்சம் லிட்டர்வரை பீர் தயாரிக்கப்படுகிறது.

முதலில், பாகிஸ்தானில் பணியாற்றும் சீன-பாக். பொருளாதார வலையப் பகுதியில் பணியாற்றும் சீனத்துக்காரர்களை இலக்கு வைத்தே விற்பனை தொடங்கப்பட்டது; பிறகு உள்ளூர் சில்லறை விற்பனையாளர்களுக்கும் பீர் வழங்கப்பட்டது என்பதை அதிகாரி கானே உறுதிப்படுத்துகிறார்.

ஹூ ஆலையில் தலா 500 மி.லி. பிடிக்கக்கூடிய போத்தல்களில் மூன்று வகையான பீர் வகைகள் வழங்கப்படுகின்றன என்கிறார் கராச்சி வர்த்தக மையத்தில் வசிக்கும், ஆசிஃப் ஹசன் என்பவர். இந்தப் பகுதியில்தான் பீர் ஆலையும் இருக்கிறது. ஹூங்சி ஸ்பெசல் புரூ, ஹூஞ்சி ஆம்பெர் லாகெர், ஹூ செங் எனும் பெயர்களில் பீர்களுக்குப் பெயர் இட்டிருக்கிறார்கள்.

வளரும் சந்தை

ஆசிஃப் மட்டுமல்ல, அவருக்கு ஒரு நண்பர் பட்டாளம் உண்டு. தன் 25 நண்பர்களையும் கூட்டிக்கொண்டுபோய் சீனத்து பீர் குடிப்பது அவரின் வாடிக்கை. இந்த ஆலை வந்ததிலிருந்து 100 முறையாவது இந்த பீரைக் குடித்திருப்பேன் என்கிறார் ஆசிஃப்.

கராச்சியில் இருக்கும் நடுத்தட்டு, மேல்தட்டு வகுப்பினரிடம் சீனத்து பீர் வெகுவாக பிரபலம் அடைந்திருக்கிறது என்கிறார், இந்து மதத்தைச் சேர்ந்த சில்லறை மது விற்பனையாளர்.

குடிகாரர்களிடையே சீனத்து பீர் வரவேற்பு பெற்றதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.

சீனத்து பீரில் இருக்கும் அதிக அளவிலான அதாவது 5- 8 % ஆல்கஹால்தான் இந்த ஈர்ப்புக்குக் காரணம் என்கிறார் கராச்சி நகரின் மாலிர் பகுதியைச் சேர்ந்த சாமி இப்ராகிம். ”இரண்டே போத்தல் இந்த பீரைக் குடித்தால் போதும்... எனக்கு நல்ல போதை வந்துவிடும்.” என்பது அவரின் அனுபவம்.

பலுசிஸ்தானில் ஆலையை ஒட்டிய வர்த்தக மையப் பகுதியில் வசிக்கும் அக்தர் பலோச்சும் இதே கருத்தைச் சொல்கிறார். குறிப்பாக, முதல் முறை இந்த சீனத்துச் சரக்கைக் குடிப்பவர்களை அப்படியே சுண்டி இழுத்துவிடுகிறது; பீரின் போத்தலை அழகாக வடிவமைத்திருப்பதைப் பார்ப்பவர்களுக்கு அடுத்தடுத்தும் அதைக் குடிக்கும்படி மனதைக் கொள்ளைகொண்டுவிடுகிறது; இன்னொன்று, வெளிநாட்டுக்காரர்கள் இங்கு வந்து தயாரித்துத் தரும் சரக்கு என்பதும் உள்ளூர்க் குடிகாரர்கள் அதிகமாக வாங்குவதற்கு முக்கியமான காரணம் என்கிறார் அக்தர்.

சரக்கு வாங்குவதில் கடினம்

இசுலாமியக் குடியரசான பாகிஸ்தானில் மது தடைசெய்யப்பட்டுள்ளது என்பதால் அதை வாங்குவதும் குடிப்பதும் அவ்வளவு எளிதானது அல்ல. பெரும்பாலான குடிகாரர்கள் கிறித்துவ, இந்து, பிற முஸ்லிமல்லாத விற்பனையாளர்களிடம் வாங்கிக்கொள்கிறார்கள். அவர்களுக்கு மட்டும்தான் மதுவை வாங்கவும் விற்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பல நேரங்களில் மதுவை வாங்குவது மிகவும் கடினமாக இருக்கிறது. ஆனாலும் பலுசிஸ்தான், சிந்து மாகாணங்களில் வசிக்கும் கணிசமானவர்கள் சீனத்து பீர் கிடைப்பது எளிதாகத்தான் இருக்கிறது என்றும் சொல்கிறார்கள்.

இந்த மாகாணம் முழுவதிலும் சீனத்து பீர் வகைகள் தாராளமாகக் கிடைக்கின்றன என்கிறார், துறைமுக நகரான கட்டாரில் வசிக்கும் யூசுஃப் பர்யாதி பலோச்.

பாகிஸ்தானில் மது உற்பத்தியை சில நிறுவனங்களே கையில் வைத்திருக்கின்றன. ஆனால் சீனத்து பீர் வந்தபிறகு போட்டி அதிகமாகிறது என்று கணிக்கப்படுகிறது.

சீனத்து நிறுவனமான ஹூ கோஸ்ட்டல் புரூவரி தரப்பில் பீர் உற்பத்திசெய்ய மட்டும் உரிமம் உள்ளது; அதேசமயம் சந்தையின் வளர்ந்துவரும் தேவைக்கு ஏற்றபடி மற்ற மது வகைகளையும் தயாரித்துவழங்கவும் அதற்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது என்று அதிகாரி கான் கூறுகிறார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?